கதை

சூப்பர் ஹிட் வெள்ளி

பக்கத்து வீட்டு சங்ரம்மாவின் ஐந்து வயது மகள் ப்ரியாவிடம் வந்து, ” தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல். அம்மா உங்ககிட்ட 100 ரூபா வாங்கிட்டு வரச் சொன்னாங்க ” என்று, அந்த பிஞ்சு மழலை மொழியில் சொல்ல,

 » Read more about: சூப்பர் ஹிட் வெள்ளி  »

கட்டுரை

பாபருக்கும், இராமருக்கும் பகைமை என்ன?

ஒருமுறை நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது சென்னையிலிருந்து பாண்டிச்சேரிவரை திருவள்ளுவர் பஸ்ஸிலே பயணம் செய்ய நேரிட்டது. காலைநேரம். ஒருவன் தாம்பரம் வரை போக வேண்டுமென்று நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான்.

“ஏண்டா சாவு கிராக்கி பேமானி காலையில் நூறு ரூபா நோட்டைக் கொண்டு வந்திட்டியாடா,

 » Read more about: பாபருக்கும், இராமருக்கும் பகைமை என்ன?  »

கதை

நண்பனும் ஸ்நேகிதியும்

அவளது மல்லிகைப்பூ, அவன் விலகினாலும் தொட்டு தொட்டுப் பேசும் களங்கமில்லா அவளின் நேசம், குளிர்ந்த கரங்கள், அழகிய சிரிப்பு.. இவையெல்லாம் அவளின் காதல் நிஜம் தான் என்று ஆனந்தனின் இதயத்திற்கு சொல்ல கட்டியணைத்து ஒரு முத்தமிட உள்மனம் ஆணையிட்டும் நாகரீகம் அறிவோடு வந்து இருவரையும் கட்டுக்குள் அடக்கி, “ நல்ல நண்பர்கள், ஆனால் திருமணம் முடிந்தவர்கள்” என்று உணர்த்திய பொழுது அவர்கள் நிஜத்திற்கு வந்தார்கள்.

கதை

பிம்பம்

அம்மா, ஏம்மா நான் இவ்வளவு கருப்பா இருக்கேன்? கடந்த இரண்டு ஆண்டுகளில் புவனா இதே கேள்வியைப் பல முறை கேட்டு விட்டாள். தான் சிவப்பாக இல்லையென்று அவளுக்குக் கழுத்து வரை குறை.

ஒரே மகளின் மனம் அவளுக்குக் கண்ணாடியின் பிரதி பிம்பமாகவே தெரிந்திருந்தது.

 » Read more about: பிம்பம்  »

கவிதை

தாய்மை

மழை என் மீது கருணை காட்டிய அடுத்த நொடியில் மூச்சு வாங்க கதவைத் திறந்தேன் அதிசயம் ! அதிசம் ! பக்கத்து வீட்டின் நேற்றைய சண்டையின் தோழி என் பிள்ளைக்கு உணவூட்டுகிறாள் அவளின் உடலிலிருந்து !

கதை

கடவுளின் பெயரால்

சூரியன் உச்சியைவிட்டு சாய்ந்திருந்த விஷயம் மேகமூட்ட திரையின் வழியே தெரிந்தது. பசி வயிற்றை கிள்ளுவதால் நீர்ச் சோறாவது சாப்பிட்டு வரலாம் என்று வீட்டுக்குப் புறப்பட்டாள். நரித்தொல்லைக்கு பயந்து குட்டியினைத் தனது தோளில் இட்டு கருப்பங்கொல்லை வழியாக ஆடுகளை ஓட்டி வீடு திரும்பிக்கொண்டிருந்தாள்.

கவிதை

சுரதா

சோகமில்லா மன்னனெவன்? அசோகன் என்பார்! சுடுநெருப்பின் தலைவன்தான் ஞாயிறென்பார்! மேகத்தின் எச்சில்தான் மழையாம்! மதுவை அருந்தாமல் மயங்குவதே மாலை நேரம்! ஊகத்தை மொழிபெயர்த்தால் உண்மை யாமோ உன்னுடைய மொழிபெயர்ப்பே பிள்ளை என்பார்! வேகத்தில் எப்போதும் எழுதிடாமல் விரும்புங்கால் எழுதுகிற கவிஞன் என்பார்!

கட்டுரை

மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

டீன் ஏஜில் பிரா தேர்ந்தெடுக்கும்போது ‘கிச்’சென்று இறுகப் பிடிக்கும் சைஸாக இருக்கக் கூடாது. மார்பகம் பெரிதாக வளரும் வயது என்பதால், பிராவின் அளவுக்கு அடங்காத பகுதி, பிதுங்கியது போன்ற நிரந்தர ஷேப்புக்கு உள்ளாகிவிடும். அந்தந்த வயதில் மாறும் மார்பக அளவுக்கு ஏற்ப, பிரா சைஸை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும். கனமான மார்புள்ளவர்களுக்கு வெயிட்டில் மார்பகம் சீக்கிரமே தழைய வாய்ப்புள்ளது. சரியான பிரா போடாவிட்டால் இந்தத் தொல்லை இன்னும் அதிகம். இவர்கள் போடும் பிரா கனமான மார்பகங்களை கொஞ்சம் தூக்கித் தரும்படியும், சரியாகப் பொருந்தும்படி கொஞ்சம் டைட்டாகவும் இருக்க வேண்டும்.

அறிமுகம்

ஜெயந்தி பேசுகிறேன்…

மதுரையில் பிறந்து இந்தியாவெங்கிலும் கோயம்புத்தூரிலிருந்து ஷில்லாங் வரை சுற்றிப் படித்துள்ளேன். அப்பாவின் வேலை அப்படி. திருச்சியில் சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் 1985ல் BSc Physics பட்டம் பெற்றேன். இரண்டாம் மொழியாகப்படித்த தமிழை ஏழாம் வகுப்பிலேயே விட்டுவிட்டு வடமாநிலங்களில் ஹிந்தி படித்து, பிறகு மதிப்பெண்ணிற்காக கல்லூரியில் சம்ஸ்கிருதம் படித்தேன். தமிழே படித்திருக்கலாம் என்று பலமுறை எண்ணிக் கொள்கிறேன் இப்போதெல்லாம்.

கதை

நாக் அவுட் நாவன்னா

ஊர் வீட்டினால் பெரிய உபயோகம் இல்லை என்றாலும், யாருக்கும் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மனம் இல்லை. குட்டையோ, நெட்டையோ பஞ்சாயத்தாரை வைத்து ஏழு பங்குகளாகப் பிரித்துத் திருவுளச்சீட்டு போட்டுப் பிரித்துக் கொள்ளலாம் என்ற நாவன்னாவின் யோசனைக்கும் மற்றவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை கடைசியாக நாவன்னா இப்படிச் சொன்னார், "நாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் பங்கு வைத்துக் கொண்டால்தான் நல்லது. அதற்கு நீங்கள் யாரும் உடன் படுவதாகத் தெரியவில்லை. இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. வீட்டின் அமைப்புப்படி நான்கு பேர்கள்தான் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளமுடியும்.ஆகவே நம்மில் நான்கு பேர்கள்தான் இந்த வீட்டை வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற மூன்று பேர்கள் விலைவைத்துப் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறிவிட வேண்டியது தான். வேறு வழியில்லை ! "