கதை

என்மேல் விழுந்த உளி

“கணக்கு ஆசிரியர் விஷயத்தில் நீ சந்தோஷப் படவேண்டும் என்றேன். எத்தனையோபேர் மீது அக்கறை எடுத்துகொள்ளாத பல ஆசிரியர்கள் உள்ளபோது உன் மீது அக்கறை எடுத்துக்கொள்ளும் கணக்கு ஆசிரியரை நீ பாரட்ட வேண்டும். அவர் உன்னை யார் என்று தெரிந்திருக்கிறார் உன்னை கேள்வி கேட்பதன் மூலம் உனது முன்னேற்றத்தை கவனிக்கிறார் என்று அர்த்தம். இப்படி ஒரு நல்ல ஆசிரியர் இருக்கும்போது நீ கவலைப் படவேண்டாம். அதிக நேரம் எடுத்து பயிற்சி செய் முயற்சி செய்தவன் தோற்றதில்லை. ஆசிரியர் சொல்லும் எதையும் நேர்மறையாக எடுத்தக்கொள் “ என்று சொல்லிவைத்தேன். நாராயணனுக்கு புரிந்ததோ இல்லையோ நான் ஒரு நம்பிக்கையை அவனுள் விதைத்தாகவே எண்ணினேன்.