மன்றல் வாழ்த்து மடல்

திருமணச்செல்வங்கள் நம்பி : ஏ.டி.வரதராசன்  நங்கை : கலைச்செல்வி திருமண நன்னாள் : 09.04.2020 மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறென்ற – தொன்மைத் திருக்குறள் போல் செவ்வியராய் வாழ்க திருப்பூட்டு இந்நாள் சிறந்து! தோழர் வரதராசன் தோழி கலைச்செல்வியுடன் வாழ்வாங்கு வாழ்கவென நெஞ்சுவந்து வாழ்த்துறைத்தோம்.. வாழையடி வாழையென வாழியவே பல்லாண்டு சூழும் நலங்களெல்லாம் துய்த்து பெறற்கரிய பேறெல்லாம் பெற்று வாழ்க திறல்சேர் மகப்பெறுக செவ்வை – அறங்காத்து Read more

வாழ்வாங்கு வாழியவே பாட்டரசர்!

செந்தமிழின் பேரெழிலைத் தீட்டிடுவார்! நற்கவியால் முந்தைத் தமிழ்மரபை மூட்டிடுவார்! – சிந்தையெலாம் விந்தை புரிந்திடுவார்! மேன்மையுறும் பாட்டரசர் சந்தம் இனிக்கும் தழைத்து! கம்பன் கவிகாக்கும் காவலர்! போற்றியே நம்மின் தமிழ்காக்கும் நாவலர்! – செம்பொன்னார்! அம்மையப்பன் தாள்போற்றும் அன்புடையர்! பாட்டரசர் உம்பர் உவக்கும் உயிர்! தொல்காப் பியர்கழகம் தோற்றிய நற்கவிஞர்! ஒல்காப் புகழ்கண்ட உத்தமர்! – நல்லோர்கள் செல்வழியே சென்றிடுவார்! செந்தமிழ்ப் பாட்டரசர் சொல்லென்றும் வெல்லும் சுடர்ந்து! செந்தமிழர் வாழ்வு Read more

தமிழமின் வாழ்க தழைத்து!

விசித்திர அகவல் ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும். குறள் வெண்பா குமுத மலராகக் கோலவிதழ் பின்னும் தமிழமின் வாழ்க தழைத்து! அன்னைத் தமிழின் அமுதைப் பருகு மன்பன்! ஆற்றல் அரிமா! கி.மு முன்னே மொழியைத் முனைந்து காத்த தன்னே ரில்லாத் தமிழன் நாம மோதும் மறவன்! முத்தமிழ் வல்ல தாதும் மணக்கும் தகையன்! தீரா ஆசை கவிமேல்! ஆக்கம் Read more