திருமணச்செல்வங்கள்

நம்பி : ஏ.டி.வரதராசன் 
நங்கை : கலைச்செல்வி

திருமண நன்னாள் : 09.04.2020

மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறென்ற – தொன்மைத்
திருக்குறள் போல் செவ்வியராய் வாழ்க
திருப்பூட்டு இந்நாள் சிறந்து!

தோழர் வரதராசன் தோழி கலைச்செல்வியுடன்
வாழ்வாங்கு வாழ்கவென நெஞ்சுவந்து வாழ்த்துறைத்தோம்..
வாழையடி வாழையென வாழியவே பல்லாண்டு
சூழும் நலங்களெல்லாம் துய்த்து

பெறற்கரிய பேறெல்லாம் பெற்று வாழ்க
திறல்சேர் மகப்பெறுக செவ்வை – அறங்காத்து
நீடு புகழோடு நீவிர் நனி வாழியவே
கூடுக இன்பம் குவித்து

தமிழ்நெஞ்சம் அமின்