I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!
பிழைக்கும் ஏழை உடல்வருத்திப்
பெரிதும் உழைப்பர் பசியுடனே!
உழைப்போர் நலனைக் காத்திடுவோம்!
உதவி செய்தே ஆதரிப்போம்!

வயலில் உழைக்கும் விவசாயி
வளத்தைச் சேர்க்கும் உழைப்பாளி!
அயரா துழைக்கும் தொழிலாளி
ஆற்றல் நாட்டின் உயர்வேதான்!
முயற்சி கொண்டே உழைத்திடுவார்!
முனைப்பாய்க் கடமை ஆற்றிடுவார்!
இயற்கை வளத்தைக் காத்திடவே
இணைந்தே உழைப்போம் அனைவருமே!

உரிமை கேட்கும் உழைப்பாளர்
உண்மை வலியைப் புரிந்திடுவோம்!
எரியும் தணலோ வயிற்றினிலே!
ஏங்கும் ஏழை பசிதீர்க்க
நெறியைக் காட்டும் முதலாளி
நீதி காக்க முன்வரட்டும்!
அறிவோம் வளர்ச்சி உழைப்பால்தான்!
அகத்தில் வணங்கிப் போற்றிடுவோம்!

ஓசூர் மணிமேகலை

மே 2024 / 116 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.


2 Comments

V. MADHAVI · மே 4, 2024 at 10 h 02 min

Tamil Literature

சாரதா சந்தோஷ் · மே 4, 2024 at 18 h 11 min

116 பக்கங்களில் நிரம்பி வழியும் தமிழும் தமிழினமும், தமிழ் நெஞ்சம் உழைப்பின் இமயம்.. அனைவருக்கும் வாழ்த்துகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »

நேர்காணல்

உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்

 நேர்கண்டவர் :

தமிழ்செம்மல் 
இராம வேல்முருகன் வலங்கைமான்

 உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?

           என் சொந்த ஊர் –

 » Read more about: உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்  »