அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே! திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே! வெண்பா வினால் விளக்கேற்றியே விந்தைகள் தான்செய்த இறைநேசரே! (அருள்) எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய் அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்! சிறுவயதில் போட்டிகளில் திறம்காட் டினாய் யாழ்ப்பாணச் சங்கனென்றும் பெயரீட்டி னாய்! (அருள்) போப்பிட்டி மண்ணீன்ற புகழ் மைந்தனே! யாப்போதிப் பாதந்த  பாமைந்தனே! திருப்பத்தூர் பூர்வீகத் திருவாளனே! அருள்பெற்ற ஆத்மீகக் கவிஜோதியே! (அருள்) பட்டங்கள் பலபெற்ற மாமேதையே! முப்பது Read more

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 2

பக்திப்பாடல் பல்லவி. தாயுந்தன் வாசல்வரை வரவேண்டுமே!தாயுந்தன் திருமுகத்தின் அருள்வேண்டுமே..!காளிதேவி வடிவில் நின்றாய்..!ஊழிக்காலத் துணையாய் வந்தாய்.! (தாயுந்தான்….) சரணம். அருள்மாரி வடிவாகி மருதாம் புலத்தரசி குருவாக எனையாள வரவேண்டுமே.. சிறப்பான தேரேறி சீர்பொலியும் அழகோடுசித்திரத்தைப் போலவுன் உலாக்கோலமே .. ஆதாரம் நீதானே அன்னையுன் சேய்நானே உறவாகி என்றென்றும் இருபோதுமே… பாராளும் உன்பார்வை பத்தினியின் அருள்லீலைபாவங்கள் கரைந்தோடி விடவேண்டுமே..எனையாளும் என் தாயே…எந்தன் ஏக்கங்கள் தீர்ப்பாயே… (தாயுந்தன்….) உலகெங்கும் பரந்தேகி உயர்வுக்கு வழிதேடும்…எமையெல்லாம் நலன்காண Read more

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1

பக்திப்பாடல் பல்லவி இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி மெய்யின் பொருளாகினாய்..அம்மா…! கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி சக்தி வடிவாகினாய்..அம்மா… ! மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா… ! கண்ணின் மணியாகி கருணை உருவாகி.. கேட்கும் வரமாகுவாய்..அம்மா….! … மருதாம்புலத்து அரசி.. வலிமை கொடுக்கும் தேவி நீயே….மனதால் நினைத்து உருக…அருளைத் தருவாய் தேவி தாயே… (இன்ப வடிவாகி…) சரணங்கள் இலுப்பைமரம் அமர்ந்தவளே..இயன்ற தெல்லாம் அருள்பவளே..! கருப்பையின் குறைகளைந்து..கதிசேர வைப்பவளே..! Read more

சூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .

மெரினா கடற்கரை மணலாய் நானும் மாறிட வேண்டுமடி தோழி மனதிற் கினிய அண்ணா கலைஞரை மடியில் தாங்கிடடி. விரிவான் கலைஞர் வெல்தோள் தன்னில் விழுந்திடும் துண்டாவேன் தோழி விடியல் தலைவர் மஞ்சள் துண்டென மகிழ்ச்சிச் செண்டாவேன். கலைஞர் என்னும் கருப்படு பொருளின் காலடிச் செருப்பாவேன் தோழி கண்ணியன் அமர்ந்த சக்கர நாற்காலி கைப்பிடி உறுப்பாவேன். அஞ்சுகம் முத்து வேலரின் மைந்தன் அருந்தமிழ் உருவமடி அவர் ஆற்றல் கண்டே அன்னைத் தமிழவள் Read more

சாமத்து ரோசாப்பூவு

பல்லவி சாமத்து ரோசாப்பூவு உன்ன யெண்ணி வாடுதய்யா உன்னைக் காணாமல் கண்ணுரெண்டும் வீதியெல்லாம் தேடுதையா… கண்ணீரு ஒன்னாகக் கூடுதையா… கரைபுரண்டு வெள்ளமா ஓடுதையா…       ( சாமத்து ரோசாப்பூவு) அனுபல்லவி முத்து முத்தாப் பேசினீயே முத்தங்கள் அள்ளி வீசினீயே கொத்துமல்லி கொண்டையிலே கோலமிட்டு வாழ்த்துனீயே உன்னயெண்ணி உள்மூச்சி வாங்குதையா என்னுள்ளம் அலைபாய்ந்து ஏங்குதையா கண்ணுறக்கம் இல்லாம நெஞ்சு துடிக்குதையா நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு பஞ்சா வெடிக்குதையா…   Read more

ஒத்தையடி பாதையிலே

பெண்: ஒத்தையடி பாதையிலே.. நான் போறேன் ஆசைமச்சான் ஆற்றங்கரை ஓரத்திலே.. அத்திமரம் நிழலாண்ட காத்திருக்கேன் வா.. மச்சான்.. அன்றொரு நாள் அம்மன் கோயில். திருவிழாவில் நீ பார்த்த பார்வையிலே சூளாகி போனேன் நான்.. அது பிறந்து உன்னை ‘அப்பா’ ன்னு சொல்லும் முன்னே.. என் கழுத்தில் தாலி கட்டு.. ஊர்சனம் எல்லாமே மொய்த்து காத்திருக்கு.. நம்மை வாழ்த்தி அது போக நாளெல்லாம் பேசியிடுச்சு.. ஆண்: என் ஆசை நீதான் புள்ளே.. Read more

விண்ணைத்தொடு

தத்தி நடக்கும் எந்தன் முத்துப்பிள்ளைக்கு… தவறி விழும் வேளையிலே தளராமல் எழுந்து விடு… சுற்றி இருக்கும் யாவரையும் இனம்கண்டு பழகி விடு… வட்டமிடும் கழுகையெல்லாம் தட்டான் என எண்ணி விடு… அர்ப்பமென நினைப்போர் முன் அக்னிகுஞ்செனவே மாறி விடு… மடமை கண்டு மிதிப்போரை மதியை கொண்டு வென்று விடு… உடமை எல்லாம் உனதாக உரிமைக்கு போரிடு… ஏக்கம் துறந்த வாழ்வதனை எந்நாளும் வாழ்ந்து விடு… ஊக்கம் தரவே நானிருக்கேன் உயர்ந்தெழுந்து Read more

வாய்க்கா கரையோரம்

வாய்க்கா கரையோரம் வரப்பு மேட்டோரம் ஒத்தமாட்டு வண்டியிலே ஒத்தையடி பாதையிலே ஒண்டியா போகையிலே ஓரம் போறம் பாக்கையிலே மச்சான நினக்கியிலே தடமும் தெரியல நேரமும் தெரியல! சின்னாள பட்டு சேலையே இடுப்புலதான் சொறுகையிலே மச்சானின் நெனைப்பையும் சேத்துதான் சொருகுனேன் கோடாலி கொண்டையிலே மருக்கொழுந்து வெக்கையிலே மச்சானின் வேர்வை சொகம் வேகமா வந்துருச்சே! கள்ளிப் பழக் காட்டுக்குள்ளே கடிச்சுக் கொஞ்சம் பாத்தேனே பரிசம் போடும் முன்னால நெனச்சுப் பாத்து கொஞ்சையிலே தித்திப்புதான் Read more

கனவினிலே…

(அனுபல்லவி) கண்ணே… கண்ணே… சொல்லிவிடு… கனவினில் கண்டதை சொல்லிவிடு… கனவின் நாயகன் நான்தானா… காதல் கிளியே சொல்லிவிடு… பெண்ணே… பெண்ணே… சொல்லிவிடு… கனவினில் கண்டதை சொல்லிவிடு… மனதினில் நிற்பவன் நான் தானா… மனதை திறந்து சொல்லிவிடு…. (பல்லவி) கண்டேன் கனவு என்றுரைத்தாய்… ;நீ கனவினை கூற மறந்துவிட்டாய்… கனவினில் பார்த்தது இது தானோ… காதல் மானே சொல்லிவிடு… (சரணம்) கனவில் வந்தது நான் தானா… காதல் கவிதை சொன்னேனா… மனதை Read more