அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!
வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!
(அருள்)
எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!
சிறுவயதில் போட்டிகளில் திறம்காட் டினாய்
யாழ்ப்பாணச் சங்கனென்றும் பெயரீட்டி னாய்!
(அருள்)
போப்பிட்டி மண்ணீன்ற புகழ் மைந்தனே!
யாப்போதிப் பாதந்த பாமைந்தனே!
திருப்பத்தூர் பூர்வீகத் திருவாளனே!
அருள்பெற்ற ஆத்மீகக் கவிஜோதியே!
(அருள்)
பட்டங்கள் பலபெற்ற மாமேதையே!
முப்பது நூல் ஈந்திட்ட பேராளனே!
அற்புதப் படைப்பாளி அப்துல் காதிரே!
அட்டவ தானியே! வித்துவத் தீபமே!
(அருள்)
ஆகஸ்ட் 30, இலங்கை, கண்டி போப்பிட்டியில் பிறந்த, இந்தியா திருப்பத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட மெய்ஞ்ஞானி, அட்டவதானி, வித்துவ தீபம், புலவர் அருள்வாக்கி அப்துல் காதிர். அவர்களின் நினைவு நாள்.