யாளியும்… சக்தியும்… 15

15 இப்ப, நாம நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. தானே..?’ என்றாள் சக்தி… ‘ஆம்..! இந்த பொதிகை மலையும், மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி.தான்..!’ சக்தி… ‘சரி, நேரம் ஆச்சு..! நாளை வருகிறேன்.’ என்று, சக்தி கிளம்பினாள். பொதிகை மலையில் வாழ்ந்து வரும் ஆதிவாசி இனத்தவர்கள், மலையில் சுற்றித்திரியும் மகரயாளி, கஜயாளி இரண்டையும், ஆச்சரியமாகவும், பயத்துடனும் பார்த்தனர். மற்ற விலங்குகளும் பார்த்தவுடனே மரண பயத்துடன் கூச்சலிட்டபடி இருந்தது. பொதிகை மலையில் ரோந்துப் Read more

யாளியும்… சக்தியும்… 14

14 ‘அப்ப, பாஷாணங்களை வெயிலில் காயவைக்க மாட்டார்களா..?’ நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது, இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம், வெளிச்சம், இருள், காலநிலை இவற்றின் மூலமாகவும் மூலிகைகளை உலர்த்தி, சித்தர்கள் பாஷாணமாக்கினர். அது பற்றி… கோபுரப் புடம் (பாஷாணங்களை மணலில் உலர்த்துவது) பாணிடப் புடம் (பாஷாணங்களை பச்சதண்ணீரில் ஊற வைப்பது) உமிப் புடம் (நெல் உமியில் உலர்த்துவது) தானியப் புடம் (தானியங்களை பரப்பி, அதன் மேல் பாஷாணங்களை உலர்த்துவது) சூரியப் Read more

யாளியும்… சக்தியும்… 13

13 ‘இந்த காலகட்டத்தில், எங்களது பணி மகத்தானதாக இருந்தது…’ ‘ஆமாம்..? நவபாஷாணம் என்றால் என்ன..? விளங்கவில்லை..!’ என்றாள் சக்தி. ‘நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விடம்( விஷம்) என்று பொருள். நவ பாஷாணம் என்பது, ஒன்பது வகையான விடங்களை சித்தர்கள் முறைப்படி சேர்த்துக் கட்டுவது ஆகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளது. ஒவ்வொரு பாஷாணத்திற்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருந்தது. நவ பாஷாணம் சித்தர்களின் மரபு அறிவியலாகும். நவபாஷாணம் Read more

யாளியும்… சக்தியும்… 12

12 ஆதிசிவன் தந்த உயிர் பிச்சையால், மேலும், சில நூற்றாண்டுகள்… யாளிகள் இனம், குமரி நாட்டில் வலம் வந்தது. தென்மதுரையில் ஆதிசிவன் நிறுவிய லிங்கம் படிகக்கல் என்பதனால், காற்றில் இருக்கும் வெப்பத்தை ஈர்த்து, மிக குளுமையாகவும், அதே காலம் நாளுக்கு நாள் தேய்த்துக்கொண்டே இருந்தது. ஆதிசிவன், சித்தர்களோடு ஆலோசனை செய்து, சில பாஷணங்களால் லிங்கத்தின் தேய்மானத்தை கட்டுப்படுத்தினார். பின்னர் வந்த காலங்களில்… மக்களால் மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக சிவலிங்கம் Read more

யாளியும்… சக்தியும்… 11

11 ‘ம்… நேரம் ஆச்சு..! மீதியை நாளை வந்து கேட்கிறேன்…’ என்று சொல்லி, சக்தி தனது வீட்டிற்கு சென்றாள். சக்தி, இரவில் முட்டைப் பெட்டியை அணைத்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது… மீண்டும் முன்பு இருந்தது போல, பெட்டிக்குள் நகரும் சத்தம் கேட்க… துதிக்கை மட்டும் முட்டையின் வெளிப்புறமாக வந்து சுவாசிக்க… சற்று குழப்பத்துடனே இதுவும் யாளியாகத்தான் இருக்குமோ..? என்று நினைத்து, குழப்பத்துடனே தூங்கினாள். மறுநாள், பள்ளி சென்று திரும்பி வந்து பார்த்தால்..? Read more

யாளியும்… சக்தியும்… 10

10 சற்று தூரமாக வடகிழக்கு திசைக்கு சென்றவர்கள் கற்களை உடைத்து, நேர்த்தியாக்கி இருப்பிடங்களை அமைத்தனர்… பிரிந்த குழுவினர் ஒருவரை ஒருவர் தேடும் முயற்சியில் இறங்க… ஒவ்வொரு பகுதியிலும், நிலத்தை சீராக்கி விவசாயம் செய்து, எல்லோரும் செழிப்பாக வாழ்ந்தனர். தங்களிடம் இருக்கும் விவசாய பொருட்களை ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரோடு பகிர்ந்து, பண்டமாற்று முறையை கையாண்டனர். பிரிந்து சென்ற குழுக்கள் தங்களுக்கென்று சட்ட, திட்டங்களும், கட்டுப்பாடும், யாகசாலை, பாடசாலைகள், மூதாதயைர்களுக்கு கோவில்கள் Read more

யாளியும்… சக்தியும்… 9

9 எங்களுக்குள் என்றுமே… எப்பொழுதும், போட்டியே வந்தது கிடையாது. மேலும், எங்களது குமரி நாட்டில், இயற்கை வளம் குறைவின்றி, பூக்கள், பழங்கள், மூலிகை வாசம் நிறைந்த சொர்க்க பூமியாக திகழ்ந்தது. மேருமலையின் மேற்கே எங்களது பகுதிகளில்… குடிலை ஆறு, சிவை ஆறு, உமை ஆறு, சுமனை ஆறு, சிங்கை ஆறு என்ற ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. குமரியாறு, பெருயாறு, பஃறுளியாறு, கன்னியாறு இந்த நான்கு ஆறுகளும், மேருமலையில் இருந்து கிழக்கு நோக்கி பாய்ந்த, Read more

யாளியும்… சக்தியும்… 8

8 விண்ணில் மிதப்பது போன்ற ஓர் உணர்வு, மனதில் ஊற்றெடுத்தது சக்திக்கு. சக்தி, சமையலறையில் இருந்து பால் எடுத்து வந்து, சங்கில் ஊற்றி வாயில் புகட்டினாள். பள்ளிக்கு சென்று வந்ததும், முதலில் அந்த உயிரை பார்த்துவிட்டுத்தான், மறுவேலையே. இப்படியே… சில வாரங்களில், தலையின் வடிவமைப்பு ஆடு மாதிரி இருந்தது. உருவமும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து, பெரிதானது. வீட்டில், அம்மா அப்பா திட்டுவார்கள் என்று நினைத்து… ஒரு துணிக்கடையிலிருந்து கிடைத்த கட்டை Read more

யாளியும்… சக்தியும்… 7

7 ‘வாங்க, தாத்தா போகலாம்… வாங்க தாத்தா’ என்று, தாத்தாவோடு அவசரமாக, மீனாட்சி அம்மன் கோவிலை விட்டு வெளியேறினாள் சக்தி… மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கிருந்த திருநெல்வேலி பேருந்தினுள் இருவரும் ஏறிக்கொண்டனர். பேருந்தும் புறப்பட்டது. சக்தி, இரண்டு முட்டைகள் இருக்கும் பெட்டியை, பத்திரமாக கையில் இறுக்கமாக மடியில் வைத்து பிடித்தபடியே இருந்தாள். முட்டைகள் உடைந்துவிடுமோ..? என்ற பயத்தில், ஊருக்கு சென்று சேரும் வரை… சக்திக்கு, தூக்கமே வரவில்லை. வீட்டிற்கு Read more

யாளியும்… சக்தியும்… 6

6 மதுரை வந்தாச்சு..! எல்லாரும் எறங்குங்க… எறங்குங்க…’ என்றதும் தாத்தாவும், சக்தியும் விழித்துக் கொண்டார்கள். பெரியார் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும்… சக்திக்கு, கிராமமே நகரத்தில் இருப்பது போன்ற, உள்ளுக்குள் ஓர் உணர்வு… ‘இங்க இருந்து, நடந்தே போயிடுவோமோ..? சக்தி…’ ‘ம்ம்… சரிங்க, தாத்தா..!’ பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும்பொழுது… ‘மல்லி… மல்லி… மல்லி…’ என்ற, ஆண் குரல் ஒரு புறம்… ‘மல்லிகைப்பூ… மல்லிகைப்பூ… மல்லிகைப்பூ…’ என்று, பெண் குரல் ஒருபுறம்… Read more