14
‘அப்ப, பாஷாணங்களை வெயிலில் காயவைக்க மாட்டார்களா..?’
நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது, இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம், வெளிச்சம், இருள், காலநிலை இவற்றின் மூலமாகவும் மூலிகைகளை உலர்த்தி, சித்தர்கள் பாஷாணமாக்கினர்.
அது பற்றி…
- கோபுரப் புடம் (பாஷாணங்களை மணலில் உலர்த்துவது)
- பாணிடப் புடம் (பாஷாணங்களை பச்சதண்ணீரில் ஊற வைப்பது)
- உமிப் புடம் (நெல் உமியில் உலர்த்துவது)
- தானியப் புடம் (தானியங்களை பரப்பி, அதன் மேல் பாஷாணங்களை உலர்த்துவது)
- சூரியப் புடம் (பாஷாணங்களை வெயிலில் உலர்த்துவது)
- சந்திரப் புடம் (நிலவொளியில் மட்டுமே பாஷாணங்களை உலர்த்துவது)
- பருவப் புடம் (பௌர்ணமி நிலவு நாளில் மட்டும் பாஷாணங்களை உலர்த்துவது)
- இருள் புடம் (அமாவாசை இரவு மட்டும் பாஷாணங்களை உலர்த்துவது)
- பனிப்புடம் (பனிக்காலத்தில் மட்டும் பாஷாணங்களை உலர்த்துவது)
- பட்டைப் புடம் (மரத்தூள் மீது மட்டுமே பாஷாணங்களை உலர்த்துவது)
- நிழற்புடம் (சூரிய ஒளி புகாத அறையில் பாஷாணங்களை உலர்த்துவது)
‘நவபாஷாணக் கட்டு’ என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. ஏனென்றால், நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் தன்மையை கொண்டிருந்தது.
பாஷாணத்திலிருந்து உருவாகும் சூட்சுமமான கதிர் வீச்சு, கட்டுபவரின் ஆயுளையும், மனநிலையையும் மேம்படுத்தும். மேலும், நவபாஷாணத்தினால் ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் தெய்வச் சிலைகள் நவக்கிரகத்தின் சக்திகளைப் பெற்றுவிடும் என்பது, சித்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.’
‘ஆமாம்..! பாஷாணங்களை கட்டுவதில், திறமையானவராக யார்..? யாரெல்லாம் இருந்தாங்க..?’
பதினெட்டு சித்தர்களில் போகர் சிறந்தவராக இருந்தார். வேட்கோவர் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், சர்வ சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்திருந்தார். இவர் சித்தத்தை அடக்கியதால் மட்டும் சித்தர் அல்ல, இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவராக இருந்தார். இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர் இவர். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார்.
போகர் தமிழில் இயற்றியுள்ள நூல்கள் சிலவற்றின் பெயர்களை கூறுகிறேன்…
- போகர் 12000
- சப்த காண்டம் 7000
- ஜெனன சாகரம் 550
- நிகண்டு 1700
- வைத்தியம் 1000
- சரக்கு வைப்பு 800
- ஜெனன சாகரம் 550
- கற்பம் 360
- உபதேசம் 150
- இரண வாகமம் 100
- ஞான சாராம்சம் 100
- கற்ப சூத்திரம் 54
- வைத்திய சூத்திரம் 77
- முப்பு சூத்திரம் 51
- ஞான சூத்திரம் 37
- அட்டாங்க யோகம் 24
- பூஜா விதி 20
- வாண சாஸ்திரம்
- தியானச் செய்யுள்
நிகண்டு வைத்தியம், துவாத காண்டம், சப்ப காண்டம், வைத்திய சூத்திரம், ஆகியவை இவரது மருத்துவ ஞானத்திற்கு சிறந்த உதாரணமாக இருந்தது. ஆன்மீகத்தில் ஞான சூத்திரம், அட்டாங்க யோகம், ஞான சாராம்சம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
நவபாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தை நாம் அருந்தினால், தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.’
‘பழனி முருகன் சிலை கூட, நவ பாஷாணங்களால் ஆனதென்று, தாத்தா கூறியது உண்மையா..?’
‘ஆம்..! போகர் சித்தர் நவ பாஷாணங்களின் சேர்க்கையில் மூன்று நவ பாஷாண சிலைகளை உருவாக்கினார்.
போகர், தான் கற்ற ஞானத்தை சோதனை செய்யும் பொருட்டும், கபாடபுரம் மக்களிடம்… தான் கற்ற வித்தையை வெளிக்கொணரும் நோக்கோடும், தேவிபட்டினத்தில் நவகிரகங்கள் சிலைகளை நிறுவி வழிபட்டார். தற்போது தேவிபட்டினம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.
இரண்டாவதாக… குழந்தை வேலப்பர் சிலை (முருகன்), பூம்பாறை, கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டத்தில் நிறுவினார்.
மூன்றாவதாக… பழனி தண்டாயுதபாணி (முருகன்) சிலையை பிரதிஷ்டை செய்தார். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.
போகர் இந்த நவ பாஷாண சிலைகளை மேற்குத்தொடர்ச்சி மலையில் வருஷ நாடு, வத்திராயிருப்பு இரண்டு ஊருக்கும் இடப்பட்ட, சதுரகிரி மலையில் சுயம்புவாக காட்சியளிக்கும் சிவனின் அருளோடு, கோரக்கர் குகையில் பல ஆண்டுகளாக நவபாஷாணங்களை ஒருங்கிணைத்து கட்டினார். கடும் தவத்திற்கு பின்பு, சிவனின் வழிகாட்டுதலில் பேரிலே பிரதிஷ்டை செய்தார்.
பழனி மலைக்கோவிலில், தனது இறுதிக் காலத்தை முடித்துக்கொண்டு, போகர் ஜீவ சமாதி அடைந்தார்.’
இப்ப, நாம நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலை தானே..? என்றாள் சக்தி…