12

ஆதிசிவன் தந்த உயிர் பிச்சையால், மேலும், சில நூற்றாண்டுகள்… யாளிகள் இனம், குமரி நாட்டில் வலம் வந்தது.

தென்மதுரையில் ஆதிசிவன் நிறுவிய லிங்கம் படிகக்கல் என்பதனால், காற்றில் இருக்கும் வெப்பத்தை ஈர்த்து, மிக குளுமையாகவும், அதே காலம் நாளுக்கு நாள் தேய்த்துக்கொண்டே இருந்தது.

ஆதிசிவன், சித்தர்களோடு ஆலோசனை செய்து, சில பாஷணங்களால் லிங்கத்தின் தேய்மானத்தை கட்டுப்படுத்தினார்.

பின்னர் வந்த காலங்களில்… மக்களால் மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக சிவலிங்கம் இருப்பதை உணர்ந்தனர். அதோடு நில்லாமல், அடுத்தடுத்த குழுவினர்களுக்கும், இச்செய்தி சேரும்படி செய்தனர்.

மற்ற குழுவினரும் அடர்த்தி மிக்க கற்களால் சிவலிங்கம் செய்து, வழிபட துவங்கினர்.

திருச்சபை நிறுவப்பட்டதும், ஆதிசிவனால் முதற்சங்கம் அரங்கேற்றம் நடந்தது. ஒரு குழு மரப்பட்டைகளில் பாடல்களை எழுதி வந்தனர். ஒரு குழு விலங்குகளின் தோல்களை பதப்படுத்தி, பாடல்களோடு வந்தனர், ஒரு குழு பாறைகளில் செதுக்கி அவையில் சமர்ப்பித்தனர், ஒரு குழுவினர் பனை ஓலைகளில் எழுத்தாணியால் குத்தி, தமது இலக்கிய ஆளுமைகளை வெளிப்படுத்தினர்.

பனை ஓலையில் பாடல்கள், செய்யுள் எழுதியவர்கள் பாராட்டைப் பெற்றனர். அந்த முறையினை இலக்கிய தொண்டுக்கு சிறந்த வழி என்றும், அனைத்து குழுவினரும் இம்முறையை கையாளவும் ஆதிசிவனால் அறிவுறுத்தப்பட்டது.

இதுவே சங்க காலத்தின் முதற் புள்ளி.

பல நூறு ஆண்டுகள் கடந்தது…

பின்னர் வந்த தென்மதுரையை ஆண்ட மன்னர்கள் தங்களை பாண்டிய வம்சமாக அடையாளப்படுத்திக் கொண்டனர்.

முதற் சங்கத்தை முறையாக நிறுவிய மன்னன் காய்சினவழுதி கடுங்கோன் என்பவரே…

முறையாக 89 சிற்றரசர்கள் 4440 ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தினர்.

இச்சங்கத்தில் அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் போன்ற புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தனர். 4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் பாடினர். அவர்களால் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்ற நூல்கள் பாடப்பட்டன.

காலப்போக்கில், பனிமலை அதிகம் உருகிடவே, எதிர்பாரா ஓர் கார் காலத்தில், இருள் சூழ தென்மதுரை நீரில் மூழ்கியது.

பாண்டிய மன்னன் மற்றும் ஒரு சில புலவர்கள், கொஞ்சம் மக்களை தவிர, பெரும்பான்மையான மக்களையும், உடமைகளையும், வளர்ப்பு பிராணிகளையும், கடல் மொத்தமாக காவு கொண்டது.

தம்பிப் பிழைத்தவர்கள், செல்வச் செழிப்போடும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய, பொருதை நதிக்கரையில் அமைந்திருந்த கபாடபுரம் நகரத்திற்கு, சென்று சேர்ந்தனர்.

சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட தென்மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் வாரிகளே, கபாடபுரம் தையும் ஆட்சி செய்யத் துவங்கினர்.

சில நூற்றாண்டுகள் கடந்தது…

வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் இடைச்சங்கம் கபாடபுரத்தில் துவங்கப்பட்டது. இது, 3700 ஆண்டுகள் 59 பாண்டிய மன்னர்களால் நடத்தப்பட்டது. இடைச் சங்கத்தின் இறுதி மன்னனாக முடத்திருமாறன் இருந்தார்.

இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார் வெள்ளூர்க் காப்பியனார் போன்ற 3700 புலவர்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்றவை கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல் போன்ற நூல்களாகும்.

இந்த காலகட்டத்தில், எங்களது பணி மகத்தானதாக இருந்தது…


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..