உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பே என்றும் உயர்வாகும்! உடலை உறுதி ஆக்கிவிடும்! தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே தளரா உழைப்பின் பலனன்றோ! பிழைக்கும் ஏழை உடல்வருத்திப் பெரிதும் உழைப்பர் பசியுடனே! உழைப்போர் நலனைக் காத்திடுவோம்! உதவி செய்தே ஆதரிப்போம்! வயலில் உழைக்கும் விவசாயி வளத்தைச் சேர்க்கும் உழைப்பாளி! அயரா துழைக்கும் தொழிலாளி ஆற்றல் நாட்டின் உயர்வேதான்! முயற்சி கொண்டே உழைத்திடுவார்! முனைப்பாய்க் கடமை ஆற்றிடுவார்! இயற்கை வளத்தைக் காத்திடவே இணைந்தே Read more

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ! முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக் குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ! பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப் பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ! அணைச்சொல்லாய் அறிவுதேக்கும் நீர்ப்ப ரப்பாய் அருந்தமிழை அகம்முழுக்க அணிந்த வன்நீ! கொடைச்சொல்லாய்க் கலைஞரெனும் நற்றி றத்தைக் காவலனாய்த் தேர்ந்தளித்த கண்ணி யம்நீ! விடைச்சொல்லாய்த் தமிழ்நாடு என்ற பேரை மீட்டெடுத்துத் தாய்மகிழத் தந்த வன்நீ! மடைச்சொல்லாய் மனுவடைத்த Read more

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு, தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்றிய பெருமை அண்ணா அவர்களுக்கே உண்டு.. சுதந்திரஇந்தியாவில் பின்னாளில் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்தவர் அண்ணா. “அண்ணா அண்ணா” என்று அண்ணா Read more

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது வணக்கம் எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும். அதுவே தமிழ்நெஞ்சத்தின் நோக்கமும் ஆகும். அந்த வகையில் நேர்காணல் வழியாக அறிமுகம் செய்து வருகிறோம். எழுத்தார்வம் உள்ளவர்களின் ஆக்கங்களைப் பெற்று இதழில் இடம்பெறச் செய்து அவர்களை செம்மைப் படுத்தும் பொருட்டு சிறப்பு செய்கிறோம். அந்தப் பார்வையில் நமது இதழ்குழு செயலர் Read more

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள்
தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால்
ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே
வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில்
தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது
காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம்
நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.

கீதாஞ்சலி

அரண்மனையும் தோரணமும் ஆடும் வாயில்
அணியணியாய் மணிவிளக்கம்‌ ஒளிரும் கோவில்
நிரல்நிரலாய் உன்னடியார் வந்து செல்லும்
நெரிசலிடைப் போற்றிசெயும் ஒலி முழக்கம்
கரைகாணாப் புகழ் வெளிச்சம் உனதேயாகக்
கனிவுடனே என்முகத்தைக் காண்பா யோநீ
தெருவினிலோர் மூலையிலே இசைக்கும் என்றன்
சிறுகுரலை என்னரசே கேட்பா யோநீ

யாசக வாசலிலே…

இமைகள் வருடிய தாயும் எங்கே இதயம் தொட்ட உறவுகள் எங்கே இரக்கம் படைத்த நெஞ்சமும் எங்கே இளமை வளமை இன்பம் எங்கே..எங்கே…? தோளில் சுமந்த செல்வங்கள் எங்கே தேடியச் செல்வங்கள் போனதும் எங்கே ஓடி யாடி உழைத்த….தெல்லாம் தேடியும் பார்த்தேன் தெரியவில்லை. இங்கே.! ஆடி யடங்கும் வாழ்க்கை தனில் அன்பு பாசம் அனைத்தும் எங்கே..? முதுமை என்பதும் வேதனை தானோ முடங்கியே நினைவுகள் சுமக்க தானோ.! நெற்றியின் வியர்வை சிந்திய Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20 வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம். இது 3 ஆவது பாவகை மாமுன் நிரை விளமுன் நேர் காய்முன் நேர் இவை வெண்பா நேர்முன்நேர் நிரைமுன் நிரை நேர் முன் நிரை நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா ஆனால் கலிப்பாவில் காய்முன் நிரை வரும் அதாவது கலித்தளை மிகுந்து வரும் மற்ற தளைகள் குறைந்து வரலாம் புளிமாங்காய் கருவிளங்காய் Read more