தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

சமகாலக் கவிஞர்கள் நூலினை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும். அதுவே தமிழ்நெஞ்சத்தின் நோக்கமும் ஆகும். அந்த வகையில் நேர்காணல் வழியாக அறிமுகம் செய்து வருகிறோம். எழுத்தார்வம் உள்ளவர்களின் ஆக்கங்களைப் பெற்று இதழில் இடம்பெறச் செய்து அவர்களை செம்மைப் படுத்தும் பொருட்டு சிறப்பு செய்கிறோம்.

அந்தப் பார்வையில் நமது இதழ்குழு செயலர் பாவலர்மணி இராம் வேல்முருகன் அவர்களின் முயற்சியில் உதித்த, 101 சமகாலக் கவிஞர்களைப் போற்றிப் பாடிய பாடல்களை நமது வாசகர்களுக்கு தொகுத்து, இங்கே நூலாக வழங்கி மகிழ்கிறோம்.

இதுபோன்று நமது எழுத்தாளர் கவிஞர்கள் தத்தமது அறிஞர் பெருமக்களை வாழ்த்தி எழுத இந்நூல் தூண்டுகோளாக அமையுமானால் அதுவே இந்நூலின் சிறப்பாகும்.
வாழ்த்துங்கள் வளம்பெறவே…

நன்றி!
அன்புடன்
தமிழ்நெஞ்சம் அமின்
ஆசிரியர்
மற்றும் ஆசிரியர் குழு


8 Comments

செல்வராஜா சுதாகரன் · மார்ச் 1, 2022 at 2 h 14 min

நல் வாழ்த்துகள். இத்தொகுப்பில் என்னையும் இணைத்துப் பெருமைப் படுத்தியமைக்கு நன்றிகள்.

நிறைமதி நீலமேகம். · மார்ச் 1, 2022 at 5 h 52 min

சிறப்பு, இனிய நல்வாழ்த்துகள்.

ப.வெங்கட்ரமணன் · மார்ச் 1, 2022 at 7 h 49 min

சிறப்பு

க.குணசேகரன் · மார்ச் 1, 2022 at 14 h 53 min

மிகவும் அருமையான தொகுப்பு.
ஆசிரியருக்கு நன்றி.

வெற்றிப்பேரொளி · மார்ச் 4, 2022 at 20 h 13 min

தமிழில் சீரிய முதல் முயற்சி.

வெற்றிப்பேரொளி · மார்ச் 4, 2022 at 20 h 52 min

அன்புப் பூச்செண்டு.

தமிழில் சீரிய முதல் முயற்சி….
“சமகாலக் கவிஞர்கள்” பாத்தொகுப்பு.

தமிழில் சங்கத்தமிழ் நூல்கள் பலவும் தொகுப்பு நூல்கள் தாம். அவையும் பாவலர் தம் பாடல்களின் தொகுப்பேயன்றி பாடிய பாவலர்கள் பற்றியவை அல்ல.

அந்த வகையில் தமிழ்ப் பாவலர் பற்றிய தொகுப்பு ஒன்று ஆவணப்படுத்தப்படுவது தமிழுக்குப் புதுசு. அதிலும் பாவலர்களை விருத்த இருக்கையில் இருத்தியிருப்பது மிகவும் புதுசு. அதிலும் கூட மறைந்த பாவலர்களை அல்லாமல் தன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் , படைப்புகளைப் படைத்துக் கொண்டிருக்கும், கவியரங்கக் களமாடிக் கொண்டிருக்கும் பாவலர்களை பற்றிய பாத்தொகுப்பு கொண்டு வருவது என்பது எண்ணிப்பார்க்கவியலாத பேரதிசயம்.

அந்தப் பேரதிசயத்தை நடத்திக் காட்டியிருக்கும் இரட்டையர் படைப்பாளர் பாவலர்மணி தமிழச்செம்மல் இராம. வேல்முருகன் வலங்கைமான் மற்றும் தொகுப்பாளர் கவிஞர் தமிழ்நெஞ்சம் அமின்.

இவர்கள் இருவரும் இணைந்து தமிழிலக்கிய வரலாற்றில் …. சொல்லப்போனால் உலக இலக்கிய வரலாற்றில்…. ஒரு புதுமைச் சாதனையை அரங்கேற்றியுள்ளனர். அதிலும் ஒன்றிரண்டு, பத்துப் பதினைந்து பேர் கொண்ட தொகுப்பன்று இது. 101 பாவலர்கள் இந்தப் பாட்டுப் பந்தியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழின் மூத்த முன்னோடிகள், இளைஞர்கள் , ஆண் பெண் பால்வேறுபாடின்றி, மரபுப் பாவலர்கள், புதுப்பாவினர், ஹைக்கூ எழுதுபவர்கள், தன்முனைக்காரர்கள் என்று பலரும் இந்த “நூற்று ஒன்று” எண்ணில் அடங்குகின்றனர்.

இப்படியொரு தொகுப்பைக் கொண்டுவர தன்னிச்சையாக பாவலர்களப் பாட பெருமனம் வேண்டும்; எல்லோரையும் நேசிக்கும் விரிந்த மனம் வேண்டும்! பாடல் இயற்றுவதற்கான சூழலும் நேரமும் வேண்டும்! இப்படிப் பல சவால்களைச் சமாளித்து ஒரு தவம்போல் இந்தத் தொகுப்பை ஆக்கியிருக்கும் பாவலர்மணி இராம வேல்முருகன் அவர்களின் இந்தக் கவித்தொண்டிற்கு ஈடுஇணையே இல்லை.

அவரைப் போலவே… அவர் இயற்றியப் பாக்களை அழகுறத் தொகுத்து, வனப்புமிகு வடிவமைப்புககுள் அவற்றை கொண்டுவர கவிஞர் தமிழ்நெஞ்சம் அமின் பட்டிருக்கும் பாடு, தந்திருக்கும் உழைப்பு… சொல்ல வார்த்தைகள் இல்லை. பாவலர்களின் படங்களைத் தேடித்தேடி உரிய பக்கங்களில் இடம்பெறச் செய்வது எளிய பணியன்று! ஆனாலும் முயன்று சாதித்திருக்கிறார் அமின்.

“சமகாலப் பாவலர்கள்” – என்னும் அரும்பெரும் தொகுப்பினைக் கொண்டு வந்திருக்கும் பாவலர்மணி தமிழச்செம்மல் இராம. வேல்முருகன் மற்றும் தமிழ்நெஞ்சம் இதழாசிரியர் கவிஞர் அமின் இருவருக்கும் இந்த வரலாற்றேட்டில் ஏறியிருப்பவன் என்ற வகையில் என்னுடைய நன்றிப் பூச்செண்டை ஏனைய நூறு கவிஞர்கள் சார்பிலும் வழங்கி மகிழ்கிறேன்!

வற்றா அன்புடன்
வெற்றிப்பேரொளி..
தஞ்சாவூர்.
9442275418

செல்லமுத்து பெரியசாமி · மார்ச் 5, 2022 at 15 h 25 min

அருமையான முயற்சி பாராட்டுகள்!

இரஞ்சினி குமார் · மார்ச் 6, 2022 at 23 h 04 min

பாவலர்மணி இராம வேல்முருகனார் அவர்களுக்கும் தமிழ்நெஞ்சம் ஆசிரியர் குழுவிற்கும் மிக்க மகிழ்வுடன் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்
நன்றி🙏

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »

மின்னூல்

என்றும் வாழும் பாரதியார்

வலங்கையார் தொகுப்பும் வாழ்க வாய்த்தநற் கவிகள் வாழ்க கலங்கரை விளக்கம் போலக் கைகளில் நூலும் வாழ்க பலத்துடன் ஒருங்கி ணைந்தப் பாவலர் கூட்டம் வாழ்க நலத்துடன் தமிழின் ஊடே நாளெல்லாம் வாழ்க வாழ்க தமிழ்நெஞ்சம் அமின்