பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா! அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது. அஸர் தொழுகையை நிறைவேற்றிய கையோடு பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்கள் விழாக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் பாவேந்தலின் நண்பருமான கவிஞர் எழுகவி ஜெலீல் அவர்களால் அழைத்து வரப்பட்டு  விழா மண்டபத்தின் தெற்கே சுமார் இருநூறு மீட்டர் Read more

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை… ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை. எத்தனை வண்ணப் படங்களுக்கு மத்தியிலும் கருப்பு வெள்ளையில் தெரியும் படத்துக்கு தனியானதொரு சோபை உண்டு. பழமை போற்றும் கண்களுக்கு அது களிவிருந்து. Read more

வெய்யோனின் வேந்தன்

இராமாயணம் வாசித்தவர்கள் அதில் பல காண்டங்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்… அது போல இந்த இராவண காவியத் தில் மூன்று காண்டங்கள் தமிழ்போல. த = தன்னிகரில்லா தமிழ்வேந்தனைப் பற்றி முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின் றார் எழுத்தாளர் ஸ்ரீமதி. இராவணணைப் பற்றி இதுகாரம் பல புதினங்கள் வந்திருக்கின்றன குறிப்பாகச் சொன்னால் அசுரகாவியம் (வீழ்த்தப் பட்டவர்களின் வீர வரலாறு) அதையும் நான் வாசித்திருக்கிறேன். ஆனால் இக்காவியம் இராவணணைப் பற்றிய உண்மையான வரலாறாக நான் Read more

வள்ளுவர் குறளும், வாரியார் வாக்கும்!

எனது இளமைக்காலங்களில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்பதுண்டு. அவரது அழகியப் பேச்சும் பேச்சின் செறிவும் எனக்குப் பிடிக்கும். அப்படியான என் மனம் கவர்ந்த வாரியார் வாக்கும் வள்ளுவர் குறளும் என்னை வியப்பிலாழ்த்தி நூலைப் படிக்க வைத்தது. நூலின் தலைப்பிற்கேற்ப பொருத்தமான விளக்கங்களை சுவைபட விவரித்து வியக்கத்தக்க அளவுக்கு மிக சிறப்பாக வாரியாரின் சொற்பொழிவு நீதிகதைகளை பொருத்தமாக இணைத்துக் குறளுக்கு மிகப்பொருத்தமான விளக்கத்தையும் சுவைபட மிக சுருக்கமாக Read more

பேரறிஞர் அண்ணாவின் நமது நாடு

நாம் வாழுகின்ற நமது தமிழ்நாட்டிற்கு சட்டப்படியாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பெருமைக்குரியவர். நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்தவர். தந்தைப் பெரியாரின் பெருந்தொண்டராக இருந்து பின்பு “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கை முழக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியவர். “கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்னும் திருக்குறளுக்கும், “விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்” Read more

உரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய்

உரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய் விதைத்திருக்கிறார் கவிஞர்‌ மு.ராம்குமார் இத்தொகுப்பில் சிறு சிறு கவிதையாக இருந்தாலும் பெரியப் பெரிய பிரச்சினைகளை பற்றி பெரும்பாலான கவிதை பேசி சமர் செய்கின்றன.இளம் வயதிலே அழகியலை பற்றி அதிகம் சிலாகித்து பேசாமல்.சமூகம் சார்ந்து கருத்துக்களையும் சமூக அரசியலை நடைமுறை சிந்தனையோடு முற்போக்கு புரிதலோடும் பேசுகிறது பலகவிதைகள்.கவிஞருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கவிஞர் தனது முதல் கவிதை தொகுப்பிலே பலவிதமாக பலவித கோணங்களில் மாறுபட்ட எண்ணங்கொண்டு எழுத்தியலாக முழங்குகிறார்.சில Read more

தென்றலின் தேடலில்…

தென்றலின் தேடலில் நுழைந்தேன். அசையாதிருக்கும் மரத்தை அசைத்து அழகும், சுகமுமூட்டும் தென்றல் காற்றென நம்மையும் அழைக்கிறது தென்றலின் தேடல் கவிதை நூல். பாரதியின் வரவிற்குப் பின் தமிழ்ச் சமுதாயத்தில் கவிஞர்கள் பெருகி வளர, முக நூல் அவர்களுக்கு பெருங்களமாகி வளர்க்கிறது. நூலாசிரியரும் முகநூலில் சிறப்பாக வலம் வருகிறார். குழுக்களில் அடமினாக இருப்பவர்களில் எழுத முடிவதே ஆச்சர்யமெனில் எதுகை, மோனை, இயைபுவென வெகு சிறப்புடன் கவிகளையெழுதி புத்தகமாக்கியிருப்பது ஆச்சர்யம் தான். புத்தகத்தில் Read more

ஓடைநிலா

பிரான்சு நாட்டில் வாழும் தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் அனுப்பிய புத்தக கட்டொன்று கிடைக்கப்பெற்று பிரித்தால் மிக அருமையான வடிவமைப்பில் ஒரு புத்தகம். சுவிஸ் நாட்டில் வசிக்கும் சகோதரி பைந்தமிழ்ச்செம்மல் நிர்மலா சிவராசலிங்கம் அவர்களது புத்தகம். மரபுக்கவிதை யாப்பதில் சிறந்து விளங்கும் சகோதரி அவர்களின் ஹைக்கூ கவிதைப் புத்தகம். அதுவும் இருமொழிக் கவிதைத் தொகுப்பு. ஆம் நூறு ஹைக்கூக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருமொழிகளிலும் நிரம்பிய புத்தகம். வடிவமைப்பே கவிதைகளைப் படிக்கத் Read more