உரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை

“விதைநெல்”லாய் விதைத்திருக்கிறார் கவிஞர்‌ மு.ராம்குமார்

இத்தொகுப்பில் சிறு சிறு கவிதையாக இருந்தாலும் பெரியப் பெரிய பிரச்சினைகளை பற்றி பெரும்பாலான கவிதை பேசி சமர் செய்கின்றன.இளம் வயதிலே அழகியலை பற்றி அதிகம் சிலாகித்து பேசாமல்.சமூகம் சார்ந்து கருத்துக்களையும் சமூக அரசியலை நடைமுறை சிந்தனையோடு முற்போக்கு புரிதலோடும் பேசுகிறது பலகவிதைகள்.கவிஞருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கவிஞர் தனது முதல் கவிதை தொகுப்பிலே பலவிதமாக பலவித கோணங்களில் மாறுபட்ட எண்ணங்கொண்டு எழுத்தியலாக முழங்குகிறார்.சில கவிதைகள் இவரின் வயதிற்கு அப்பாற்பட்டு உயிரோட்டமாக கருத்துக்களை  தன்னில்  ஊரிய சிந்தனையால் நிரப்பியிருக்கிறார். இன்னும் கவிஞர் நிறைய வாசிக்க வேண்டும் என்பது எனது அவா.

தன் எழுத்துக்களை கொண்டு  சமூக தடைகளை தகர்த்தெறிந்து அநீதி நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து . ஆரிய அக்கிரமங்களை அன்னை தமிழால் அழித்தொழிக்க அறச்சீற்றம் கொண்டு அதற்கொரு நூல் வடிப்பான். இவன் தீண்டாமை தீங்குவுரைக்கும் புராண மாயைகளை புரட்டியெடுப்பான் புரட்சிகர  எழுத்தைக் கொண்டு. மத அரிப்புகளால்  விளைந்து கிடக்கிற மட்டமான மகா அயோக்கியர்களை உன் மானமிகு எழுதுகோல் அவர்களின் முதுகைபிளக்கு நெல்புகோலாகட்டும்.  அம்பேத்கரிய பெரியாரிய  மார்க்சிய சிந்தனைகள் உன்னை வழிநடத்தும் திறவுகோலாகட்டும்.இவ்வுலகின் முதற்குடிகளின் முகவரிகள் அச்சுக்கு வராமல் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்  நிராகரிக்கப்பட்டே இருக்கின்றன.அதில் நித்தம் நீ சிந்தனை சாய்த்து உன் இரத்தங்களால் அந்த இரத்தினங்களை புத்தகங்களாக்கு.

“விரிந்துகொண்டேப் போகும்
விஞ்ஞானத்திலும்
உயிர்வாழ தன்உயிரோடு
போராடிக்கொண்டிருக்கிறது
மலக்குழியில் மனிதம்.”

அதீநவீன விஞ்ஞான  காலத்தில் எத்தனையோ கருவிகள் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. தொடர்வண்டி நிலையங்கள்,தொடர்வண்டியென புதியப் புதிய மாடலென மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. தனித்தனி மயான கொண்ட இந்தியாவில்  திட்டமிட்ட மர்மம் நிகழும் நிறைந்த தொடர்கதையாக இருக்கிறது. இந்நிலையை எண்ணுகையில் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலநிலை நீடிக்கும் வரை புராணப் புழுகையில் புரளும் இந்தியா வல்லராக வாய்ப்பேயில்லை. இதனை தான் கவிஞர் சாடுகிறார்.சமூகத்தின் மீது கொண்டுள்ள  மானுட அக்கறை காட்டுகிறது இக்கவிதை.

“என் சொல்லோ
கூர்மையானது – அது
நன்மைக்குப் பயன்படும்
எழுத்தாணியாய்
தீமைக்குப் பயன்படும்
ஆயுதமாய்
உனக்கெப்படி வேண்டும் சொல்.”

சொல்லும் செயலும் வேறுபாடற்று சமநிலையில் இருக்குமாயின் அவனின் வாழ்வில் வறுமை வறண்டு கிடக்கும்.

எதிரிகளை துரோகிகளை மிக இலபகமாக எச்சரிப்பதற்கு இவரிடம் பல நுணுக்கங்களை நாம் இரவலாக பெற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.அப்படி இலகுவாக கவித்துவமாக கூறியிருப்பது இவரின் ஆழ்மான கவி சிந்தனையின் கூர்மை புலப்படுகிறது அல்லது புரிந்து கொள்ள ஆவணம் செய்திருக்கிறார்.

” தன் கவிதைகள் சிலதை
பொதுவுடைமை பேசுவதால்
புறக்கணிக்கப்படுமென்று
கருக்கலைப்பு செய்தான்
கவிதைத் தொகுப்பில் இருந்து.”

தந்தை பெரியார் சொல்வார் மற்றவர்களின் சுயமரியாதைக்காக போராடுபவன் தன் மரியாதையை  இழந்து தான் மற்றவருக்காக போராடுவான்.அதுபோலவே பொதுநலம் கருதி முற்போக்கான சிந்தனையில் எழுத்துகின்றனவர் தன் சுய இலாபமிக்கவற்றை புறந்தள்ளிதான் மக்கள் நலன் கருதி  கருத்துக்களை  கவியாக்குவார்கள் அது இயல்பு. அவ்வாறு செயல்படும் சிந்தனையாளர்களின் மன புலம்பலாய் கவிஞர் தன்கவிதை வழியே குற்றம் கூறாமல் குமுறுகிறது. அல்லது பொதுநலவாதியின்   உள்மன ஆதங்கத்தை  தன்கவிதையால் படம்பிடித்துக் காட்டுகிறார்.

“புதியதோர் உலகில்
புத்துணர்வோடு
ஆயிரம் சிந்தைகளை
ஆழ்மனதில் விதைக்கும்
ஆசான் புத்தகம்.”

மறதி குணங்களுக்கு மருந்தடிக்க புத்தக வாசிப்பை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.வாசிப்பு பழக்கத்தால் பலரின் வாழ்வு வரலாறாக மாறியிருக்கிறது.

அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், அறிஞர் அண்ணா என்று பலர் சொல்லி கொண்டே போகலாம்.வாசிப்பு இரவல் அறிவுக்கு தடைப்போட்டு இயற்கையான அறிவு  வளர்ச்சி அடிகோலும்.அதைதான் கவிஞரும் அவரின் மேம்பட்ட சிந்தனை கோணத்தில் விளக்கியிருக்கிறார்.

“எழுத்தாணி என்னோடு சேர்ந்து
என் எண்ணங்களை
பிரசிவிக்கும் தோழன்.”

ஏர்முனை,பேனாமுனை,போர்முனை இவைகளில் மிக கூர்மையானவை அதில் முதன்மையானவை பேனாமுனை என்பார்கள்.அது போலவே ஒவ்வொருவரின் எழுத்தாணி அவரவரின் எண்ணக்குவியலை மன ஆதங்கத்தை எழுத்துக்களாக பிரசிவிக்கும் பிரங்கிப் பேனா. எழுத்தாணியை இவரின் தோழனென்று  பற்றிக்கொள்கிறார். கவிஞர் பற்றுக்கொண்டு விழிகிறார் அவரின் சிந்தனையை கண்டு நான் விழைகிறேன் .

“தேவையுற்றதும்
வீசியெறியப்படுகிறது
சில உறவுகள்
குப்பையாக.”

உலகில் ஒவ்வொருவரும் அவரவரின் தேவையின் அடிப்படையில் மற்றவரிடம் பேசுவதோ,பழகுவதோ மூலப்பொருளாக கொண்டு இயங்குகிறார்கள்.இவை தொன்று தொட்டு வாழ்வில் புழக்கத்தில் இருந்து வருகின்றன.ஆனால் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டப்பின்னர் மீண்டும் தன் சுயம்பு நிலைக்கு மாறிவிடுகிறார்கள்.அவ்வாறு இருப்பவர்களை நடிப்பு சேவலாகவே பாவித்து கொள்ளலாம்.விஞ்ஞான‌‌ யூகத்தில் மக்களிடம் விளைந்து கிடக்கிற விஷித்திர குணங்களில் இவைகள் வித்தியாசமானவை விபரிதமானவைதான். இதுபோண்ற  வீனர்களிடம் நாம்தான் விலகியிருக்க வேண்டுமேயொழிய அவரின் குணங்களையெண்ணி  குருதி குதிக்க தேவையில்லை.   சில உறவென்னும் வீணான குப்பைகளிமிருந்து விலகியிருந்து  நன்னெறி விழுமியங்கள் நாளும் நாவினில் அசைப்போட்டு  ஆகாய கொடிகட்டி பறக்கலாம்.

“நிறம் மாறும் மனிதர்களுக்கிடையில்
நிலையாக நிற்கிறது.
நட்பு.”

ஆயரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலமொழில் நாடக துறையின் ஜாம்பவான் ஷேக்ஸ்பியர் சென்னார்.

“உலகமே
நாடக மேடை
அனைவரும் நடிகர்கள்”.

என்று வெகுஜன மக்கள் பெரும்பாலும் அரிதாரம் பூச்சி கொண்டுதான் வாழுகிறார்கள் வளர்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இவைகள் நகர மையமாதலால்  நிகழ்ந்தவையாக இருக்கலாம் அல்லது பண்பாட்டு வளர்ச்சின் பாதிப்புகளான பரிணாம வளர்ச்சியாக இருக்கலாம் மனிதர்கள் நிறம் மாறுதல்.அதில் குறுகிய காலம் நிலையாக இருப்பதுதான் ‘நட்பு’ கவிஞரின் வரிகளில் சில முரண் எனக்குள் எழுகிறது.எதனால்

“மாற்றமே
மானிட தத்துவம்
மாறாது.”

என்ற வார்த்தையை அனைத்தும் மாறும் என்பது திண்ணம்.

“பேசிப்பழக்கமில்லாத நம்மிருவரையும்
பேதமின்றி உரசி செல்கிறது
மெல்லிய காற்று.”

காற்றுக்கு சாதி,சமயம்,நிறம் , இனம்,மொழி, தேசம், தாழ்ந்தவன்,உயர்ந்தவன் என்ற எந்த பாகுபாடும் பார்ப்பது கிடையாது என்பதை இக்கவிதை மறைமுகமாக உரைப்பதாக உணர்கிறேன் நான்.கவிஞரும் இதுபோன்ற சிந்தனைக் கொண்டு வடித்திருப்பார் என்றே கருதுகிறேன்.

“பறவைகளின் ,
எச்சத்தால் பகிர்ந்துகொள்கிறது
தன் வாழ்வை
மண்ணில் மரங்கள்.”

மனிதன் இயற்கைக்கு முரணானவன் முரடாணவன் அவரவர் வசதிக்கேற்ப. இயற்கையோடு இசைந்து வாழாமல் தனித்து வாழ முற்பட்டாலே அவன் முரணானவன் முரடாணவன்.

பறவைகள் நினைத்தால் பாலைவனமும் பசுமையாகும்.பசுமை நிலமும் பாலைவனமாகும்.அதுபோல் தேனீக்கள் இல்லையென்றால் இவ்வுலகில் பூக்களுக்கிடையே புணர்ச்சி விதி என்னும் மகரந்த சேர்க்கை மறைந்திருக்கும் பூக்கும் தாவரங்கள் மலடாகியிருக்கும்.

மரங்களால் மனிதன் வாழ்கிறான் இல்லையெனில் ஆக்ஸிஜன் குறைவால் அகால மரணமடைந்திருப்பான்.மரங்களின் பிச்சையால் பிழைத்திருக்கிறான் மனிதன். மரங்களிடம் ஒன்றி வாழும் சமூக குரங்கு மனிதன்.

“சாதியெனும் நோயால்
மாண்டுபோகிறது
சாமானியன் வாழ்க்கை.”

பார்ப்பனிய வித்தான சாதியென்னும் சவப்பெட்டிற்கு சாமானிய மக்கள் நாளுக்கு நாள் வீட்டிற்கு வீடு விசேஷ பூஜைகளும் ஆண்டுக்கு ஆண்டு ஆராதனையும் செய்து கொண்டே இருக்கிறார்கள் ஆரிய அடிமைகள்.

மேலோன்; கீழ்யோன் என்ற வர்ணாஸ்ரம பாடைக்கு பட்டாபிஷேகம் கட்டி பட்டமாக்கியதால் மக்களிடையே மனிதநேயம் மரணித்து இந்துமதத்தால் இல்லறம் தோறும் இரட்டை வாழ்விடமாய் இருக்கின்றன.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை தொற்றிய சாதியென்னும் தொற்றுநோய் இன்னும் துடைத்தெறிந்தப்பாடு கிடையாது. என்பதை மிக வெளிச்சமாக கவிதைகளால் வேவுகிறார் கவிஞர்.

“முளைத்த நாள் தொடங்கி
முதிர்ந்து விழுந்த பின் தான்
முற்றுப்புள்ளி வைக்கிறது
மனிதனின் வாழ்க்கையில்
போராட்டம்.”

போராட தெரியாமல் ஒரு நொடி பொழுதைக்கூட கழிக்க, கடக்க முடியாது என்பது யதார்த்தம்.

மனிதன் மாண்டு மண்ணுக்குள் போகும்வரை பொன்,பொருள்,பொன்டாட்டி என்று இல்லாமல் வாழலாம். ஆனால் போராட்டம் இல்லாமல் பொழுதேது  வாழுவேது வழியேது.

“தண்ணீரில்
மூழ்கிக்கொண்டே போகிறது
குடிகாரன் வாழ்க்கை.”

ம(து)ரணக் கிணற்றுக்குள் மள்ளுக்கட்டுகிறார் பலர் நீச்சல் பழகுவதற்கும்,நீந்துவதற்கும். மது பிரியர்களின் மாராத ஏக்கத்தை தீர்க்க திட்டம் தீட்டுகிறது அம்மா,அய்யா ஆட்சிகள் தீபாவளிக்கு பொங்கலுக்கு புதியப்புதிய பான ரகங்களை இறக்குமதி செய்து புத்துணர்ச்சி என்னும் மடமையை தருகிறது.

உடலை தண்ணீரால் குளிர்ப்பாட்டுகிறார் அவரை பாடையில் வைத்து குளிர்ப்பாட்ட… தண்ணீர் பிரச்சினையால் மூழ்கிக் கொண்டே போகிறது குடியரசு நாட்டின் வாழ்க்கையும்.

“தொட்டால் தீட்டென்பவன்
கைப்பட்டால் தான்
இசைக்கிறது பறை
உன் சாதிவெறியை
சவக்குழியிலிட
ஊர்வலமாய்.”

சாதிப் பெயரோடு வலம்வருவான் சாய்ந்து விழுந்தபின் சவமென்று பெயரெடுப்பான்.

இ (ற)ருக்கும்வரை இழிசாதினு கீழ்சாதினு ஏசுவான். அவன் பாடையை பல்லக்கில் தூக்கி சுடுகாடுவரை சுதியோடு அவன் காதில் கற்சீக்கும் சமத்துவத்தை உணர்த்துகிற தமிழ்பறை.

“காலத்திற்கேற்ப
மனித வாழ்க்கை
மாறிக்கொண்டே போகிறது
இழிவுப்படுத்தும் சாதியைத் தவிர.”

“சாதியை ஒழிக்காமல் இந்தியாவில் புரட்சி வராது.அதே சமயம் ஒரு புரட்சி இல்லாமல் சாதியை ஒழிக்க முடியாது”

  • முனைவர் ஆனந்த் டெல்டும்டே.

புரட்சியால் மட்டுமே சாதி  ஒழிப்பு சாத்தியமாகும்.புரட்சி என்பது ஆயுதம் தாங்கிய புரட்சி மட்டுமல்ல பிறப்பால் அனைவரும் சமம் என்ற அமைதி புரட்சியாலும். இவை நடந்தேறினால் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் இழிவுகள் நீங்கி இந்தியா வல்லரசு பாதையை நோக்கி வீறுநடை போடும்.

பழைய உணவு பழக்கவழக்கத்தில் இருந்து மாறுபட்டு தற்போது பீட்சா பர்கர் என்றும் உடைகளில் புடவை,வேட்டி மற்றும் சர்ட் இருந்து மாறி பேண்ட் ஷார்ட்ஸ் நவீனத்துவத்தில் புரண்டும் காலத்திற்கேற்ப மனிதன் தன்னை தகவமைத்துக் கொண்டு நவீனம் நோக்கி நகர்ந்தாலும் நாற்றம் வீசும் சாதியை மட்டும் நடுவீட்டில் தொட்டில் கட்டி தாலாட்டுகிறான் என்கிறார் நூர்க்கமாக கவிஞர் அவர்கள்.

“ஆளாகி விட்டதால்
புறந்தள்ளப்பட்டாள்
அறியாத சிறுமி
வீட்டில் ஓரமாய்
தீட்டெனச்சொல்லி.”

இந்து மதம் விளைத்த இழிவுகளில் இதுவும் மிக முக்கியமானவாய் இயற்கையாய் பெண்களுக்கு வயது முதிர்வால் நிகழும் ஒன்றை தீட்டெனச்சொல்லி விலகி வைத்து தனிமைப்படுத்துதல் ஆரிய வந்தேறிகளின் அபத்தமான பொய்களில் முக்கியமானவை.

விஞ்ஞான ரீதியாக வயது முதிர்ச்சியால் கருமுட்டை வளர்ச்சி வளர்ந்து சிதைந்து மாதா மாதம் குருதியாக வெளியேறும் அதனை தீட்டெனச்சொல்லி விலகி வைப்பது கொடூரத்தின் உச்சமாக எண்ணுகிறேன்.அப்படி அதனை தீட்டென சொன்னால் நாம் அனைவருமே தீட்டுதான் அந்த கருமுட்டையால் நாம் உதித்து இருக்கிறேன். தீட்டென ஒதுக்குதல் நசுக்குதலும் அடக்குதலும் பிற்போக்கு சிந்தனையின் விளைச்சலாக பயங்கரவாதின் வாரிசாக பார்க்கிறார் கவிஞர் அவர்கள்.

“நாளுக்கு நாள்
திறக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது
சுமையெனக் கருதித் துரத்தப்பட்ட
சுமந்தவளுக்காக
முதியோர் இல்லம்.”

நீ எதை
விதைக்கிறாயோ
அதுதான் விளையும்.
பெரும்பாலான நகரத்துவாசிகள்
ஈன்ற பெற்றோர்களை
முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு.

இல்வாழ்வில் இன்பம் இல்லையென்று இறைவனை தேடிய ஓடுகிறார்கள். ஈன்ற இறைவனை இழித்து பழித்து இழிசொல்லால் திட்டி தீர்த்து முதியோர் இல்லத்தில் சிறைப்படுத்திவிட்டு. குடும்பம் நல்லாயிருக்க கோவிலில் சிறப்பு பரிகாரமும் ,வழிபாடும் செய்தால் என்ன புன்னியம் கிடைக்கும்.பழிகாரன் பரிகாரம் செய்கிறான்.நாட்டில் மருத்துவமனையும், முதியோர் இல்லமும், சிறைச்சாலை அதிகரித்து கொண்டே போகுமாயின் அந்நாட்டின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து நேர்ந்தது இருப்பதாக உணர்த்துகிறது என்பது திண்ணம் இதனை தான் கவிஞர் தன் ஆதங்கத்தை மொழியினால் முனுமுனுக்கிறார்.

“பசியில் தவித்த எனக்குச் சிறிது
உணவாகிறது – உன்
சில்லறை முத்தங்கள்.”

மனிதனுக்கு ஒரு முத்தம் கொடுக்க இருபத்தி ஒன்பது நரம்புகள் ஏங்கும்.கவிஞரோ தன்  காதலி கொடுக்கும் சின்ன முத்தங்கள் அவர் பசியை போக்கியதாக கூறுகிறார்.

“மேகக்கூட்டங்களின்
முத்தச்சிதறல்
சாரல் மழை.”

வளிமண்டலத்தில் மேகங்கள் ஒன்றுக்கொன்று முட்டிகொள்வதால் வானில் இருந்து மழை பெறுகிறோம்.ஆனால் கவிஞர் கவி ரசனையோடு மாற்று பார்வையால் மேகங்களின் முத்தச்சிதறலின் சாரல் மழை என்கிறார்.காற்று அழுத்தத்தால் இயல்பாக நடைபெறுவதை தன் கற்பனை திறனுக்கு  மெழுகுவூட்டி அழகாக காதல் நயமாக எழுதியிருக்கிறார்.

வலிகளோடு வாழும் எளியோர்களின் எண்ணிலடங்கா வலிகளை தீர்க்க கருநீலசிவப்பை கொண்டு உன்னை  செம்மைப்படுத்தி சென்னிற நெருப்பை உன்னெழுத்து கக்கட்டும். செங்கோல் ஆட்சி புரியும் செவிமங்கி  சிலையான சில்லறைகளுக்கு சிம்ம சொப்பனமாய் சோஷலிசம் பேசி ஷஜொலிக்கட்டும் உன்னெழுத்து.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

நூல்கள் அறிமுகம்

வெய்யோனின் வேந்தன்

இராமாயணம் வாசித்தவர்கள் அதில் பல காண்டங்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்…

அது போல இந்த இராவண காவியத் தில் மூன்று காண்டங்கள் தமிழ்போல.

த = தன்னிகரில்லா தமிழ்வேந்தனைப் பற்றி முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின் றார் எழுத்தாளர் ஸ்ரீமதி.

 » Read more about: வெய்யோனின் வேந்தன்  »