வணக்கம் தங்களைப் பற்றித் சுருக்கமாகக்கூற முடியுமா?
ஆம் நான் அ.ல.முகைமினா. எழுத்தாளர், ஆசிரியர், கவிஞர் சமாதான நீதவான் மற்றும் அரசியல் வாதியாக சமூகத்துக்காக சமூக செயற்பாட்டாளராக, ஊடக வியலாளராக என்னை அர்ப்பணம் செய்து வருகிறேன்.
நேர்கண்டவர் தமிழ்நெஞ்சம் அமின்
உங்களது ஆரம்ப பள்ளிப் பருவம் குறித்துக் கூறுங்களேன்
ஆமாம் நான் குறிஞ்சாக் கேணி முன் பள்ளியில் 1985 முதல் சென்று கற்க ஆரம்பித்தேன். அப்போது வாகிட் சபுறுன்னிஸா ஆசிரியர் நன்றாகச் சாரி அணிந்து வருவதும் பாடல்கள் பாடுவதும் எனக்கு மிக விருப்பமான விடயங்கள் . அப்போதே இவர்கள் போல ஆசிரியராக வரவேண்டும் என ஆசைப்பட்டேன்.
நல்லது. மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது நீங்கள் கூறுவது மேலும் உங்கள் பாடசாலைக் கல்வி பற்றிக்கூறுங்கள்
நிச்சயமாக எனது குறிஞ்சாக் கேணி அறபா மகாவித்தியாலயம் தரம் 19 வரையில் கலவன் பாடசாலையாக இருந்து பின்பு 1996 முதல் கிண்ணியா மகளிர் மகாவித்தியாலயமாகத் தனிப் பெண்கள் பாடசாலை உருவாக்கப் பட்டது.
தரம் 10 முதல் உயர்தரம் வரையில் குறிஞ்சாக்கேணி மகளிர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றேன்.
தரம் – 04 படிக்கும் போதே பாடசாலையில் நூலகத்தில் தினகரன், நவமணி, தினமுரசு, வீரகேசரி முதலிய பத்திரிகைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.
பத்திரிகைகளில் மரண அறிவித் தல் பகுதியில் அதிகமாக கவிதை வடிவில் உள்ள விடயங்களை விரும்பிப் படிப்பேன். பின்பு இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்திலும் மரண அறிவித்தல்களையே அதிகம் கேட்பேன். இது எனது கலையார்வத்தை அதிகரித்தது. இப்படியே தேசிய சேவையில் ஒலிபரப்பாகும் முஸ்லிம் சேவையுடனும் எனது நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.
அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியில் தரம் நான்கு படிக்கும் போதே நேயர் வினாவுக்கு பரிசு கிடைத்தது.
அதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண் டேன்.
தி/குறிஞ்சாக் கேணி மகளிர் மகாவித்தியாலயத்தில் தரம் 12 வரை கலைத்துறையில் கற்று தென் கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பட்டதாரியாக 2006 இல் வெளியானேன்.
பள்ளி ஆசிரியையான தாங்கள் சந்தித்த சவால்கள்?
பள்ளிகளில் மாணவர்கள் கற்றலில் பின்தங்கியிருப்பது எனக்கு ஒவ்வொரு பள்ளிகளிலும் சவாலாக இருந்தாலும் அவற்றை வெற்றி கொள்வதில் எனக்கு மிக ஆர்வமாக இருக்கும். எனக்குப் பொறுப்பளிக்கப்படும் மாணவச் செல்வங்களைத் தரம் பிரித்து குறித்த தவணைகளுக்குள் அவர்களை நூறுவீத அடைவைப்பெற்று விடுவேன். அது தவிர பொருளாதார நெருக்கடி அதிகமான மாணவர் களைக் கல்வியில் இருந்து பின் வாங்கிச் செய்வது பெற்றோரின் பராமரிப்பு மற்றும் கல்வியறிவின்மை ஆகியன மாணவர்களுக்குக் கற்பித்தலை முறையாக வழங்க முடியாத அளவுக்கு சவாலாக இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப் படவேண்டியதாகும்.


பாடசாலைக் கல்வி பல்கலைக் கழகக் கல்வி முடித்த பின் என்ன செய்தீர்கள் கூற முடியுமா?
ஆம் கூறுகிறேன்
அதனைத் தொடர்ந்து இரண்டு தனியார் நிறுவனங்களில் முகாமை யாளராக நிகழ்ச்சி ஒருங் கிணைப் பாளராகப் பணியாற்றினேன்.. தற்போது மாவட்ட சமாதான நீதவனாகவும் இருக்கிறேன். அத் தோடு திறந்த பல்கலைக் கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா வையும் கற்று முடித்து தற்போது வரை தி / கிண் / இக்ரா வித்தியாலயத்தில் தமிழ் மொழிப்பாட ஆசிரியராக கடமை புரிந்து வருகிறேன்.


சமாதான நீதவானின் பணிகள் எப்படியானது?
இது எனக்கு சமூகத்தில் உள்ளவர்களோடு நீடித்த உறவைக் கட்டி எழுப்புவதில் மிகவும் பங்களிக்கும் ஒரு இலவசமான சேவையாகும். மாணவர்கள் அரச தனியார் தொழில்களில் இணைபவர்களுக்கான விண்ணப்ப உறுதியளித்தல் செய்யும்போது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். பாடசாலையில் மாணவர்களுக்குக் கற்பித்தலோடு மட்டும் எனது பணி முடிவுறாது தொடர்ந்து அவர் களுக்கான சமூக அங்கீகாரத்தையும் வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி எனக்கு. இப்பதவி பாடசாலைக்கு நீதியமைச்சினால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டு பயிற்சி யளிக்கபட்டு மத்தியஸ்த சபையில் பணியாற்றும் போது நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கடந்த பதினைந்து வருடங் களாக சமூகத்தில் நன்கு பயன டையும் சமாதான நீதவானாகத் தொழிற்படுகிறேன்.
உமது ஊடகத்துறைப் பிரவேசம் குறித்துக்கூறுங்களேன்.
நிச்சயமாக மேலும் சுரத ஊடக வலையமைப்பில் தமிழ்ப் பிரிவு நிகழ்ச்சித் தொகுப்பா ளராக, நாடறிந்த சிறந்த எழுத்தா ளராக சமூக சேவையில் ஈடுபாடுடை யவராக .சமூகத்தில் பெண்கள், ஆண்கள், முதியோர், சிறுவர் என் அனைவரோடும் கலந்துரையாடி சிறப்பான தொடர்பாடலை உடையவராக செயற்பட்டு வருகிறேன்.

நூலாசிரியராக தங்களைப் பற்றி தாங்களே கூறுவது சிறப்பாக இருக்கும் அது பற்றி எமக்கு அறியத்தாருங்களேன்.
தமிழ் மொழிப் புலமை காரணமாக ஒரே வருடத்தில் மூன்று புத்தகங்களை வெளியீடு செய்து இருக்கிறேன். கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல் எனப்பலதுறைகளிலும் சிறுவயது முதல் பல்வேறு வெற்றிகளை அடைந்து கலைப்பயணத்தை மேற் கொண்டு வருகிறேன்.
மேலும் தங்களைப் பற்றித் கூறுங்கள்.
தற்போது கட்டையாறு வீதி, கிண்ணியா 02 இல் தற்காலிகமாக வசித்து வரும் நான் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாஞ்சோலைச் சேனை வட்டாரத்தில் பெண்கள் தேர்தலில் பங்களிக்க வேண்டும் என்ற அரச சுற்று நிரூபத்துதுக்கு அமைய சிறீலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பிரதான கட்சி சார்பில் முதன்மை வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறேன். இதுவும் எனது பால்ய காலத்து ஆசையின் நிறைவேற்றமாக கருதுகிறேன்.
அரசியலில் களமிறங்கும் தாங்கள் சாதிக்க நினைப்பதென்ன?
எமது ஊரின் கல்வி பொருளாதார சமூக மாற்றங் களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் மற்றும் ஊரின் எழில் மிகு தோற்றங்களை மெருகேற்றிக்காத்திடப் பணிபுரிவதோடு முக்கியமாக எமது ஊர்ப்பெண்களின் ஆளுமை விருத்திக்கும் ஆற்றல்களுக்கும் முன்னுதாரணமாக இருந்து மிகச் சிறந்த அரசியல் பணியாற்று வதற்கான முதல் முயற்சி இது சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் சாதிமத இன பேதமின்றி ஊருக்கும் நாட்டுக்கும் எனது திறமைகளினால் என்னை அர்ப்பணிக்கத் தயாராகியுள்ளேன்.


முகநூலில் அதிகமாக நேரத்தை செலவிடும் தாங்கள் சாதித்ததென்ன?
முகநூலில் அதிகமான நேரத்தை செலவிடுகிறேன் என்பதைவிட எனது ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கற்பவனாக மாறக்கிடைத்து உலக விடயங்களிலும் மார்க்க விடயங்களிலும் அதிகமான தேடலுக்கான விடையாக முகநூல் பயனளித் துள்ளது. முகநூலுக்கும் நன்றிகள்.

முகநூல் பற்றிய தங்களின் கருத்து…?
முகநூல் எனக்கு ஒரு புத்த வாசிப்பாளராக என்னை நூலகத் தோடு உள்ள நெருக்கத்தை அதிகரித்து கடந்த வருடம் மூன்று மாதகாலத்துக்குள் மூன்று இலக்கிய கவிதை நூல்களை வெளியிட உதவியது. எல்லா இடங் களிலும் நன்மை தீமை என்பதாக உலகம் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதனைப்பயன் படுத்தும் வரின் இயல்புக்கு ஏற்ப அவரவர் பயனடையலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் .

மிக அழகான ஒரு பேட்டியை வழங்கிய நீங்கள் இளம் தலைமுறையினருக்கு விசேடமாக பெண்களுக்கு என்ன கூற ஆசைப் படுகிறீர்கள்.
ஆமாம் இளம் தலைமுறையினரை அனைவரும் எதிர்மறையாக நோக்கும் காலமாக இன்றைய நவீன தொடர்பால் யுகம் காணப்படுகிறது.
ஆகவே இளம் தலைமுறை யினரே நீங்கள் சமூகத்துக்கு மிகப் பெரும் சக்தி என்பதைக் கல்வியையும் கலைகளையும் கற்றுச் சிறந்த தலமுறையினராக தங்களை நிலை நிறுத்த வேண்டும் என அன்பாக வாழ்த்துக்கள் கூறிக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நெஞ்சம் பற்றிய தங்களின் கண்ணோட்டம்…
தமிழ்நெஞ்சம் உண்மையில் மிகவும் காத்திரமான இலக்கியப் பணிகளை மேற்கொள்வதை செவி வழி அறிந்தேன். பின்பு முகநூல் வாயிலாக தங்களைப்பற்றிய தொடர்பு கிடைத்தது. உமது தளம் மற்றும் இலக்கியப்பணியில் என்னை ஒரு வாசகனாக இலக்கியம் படைக்கும் படைப்பாளியாக களம் தந்ததற்கு தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன். தகவல் தொடர்பாடலின் விருத்தியைத் தாங்கள் சிறப்பாகப் பயன் படுத்துகிறீர்கள்.
உங்களின் எதிர்கால வளர்ச்சி மேம்பாடுகளுக்கு உங்களுடன் இணைந்து பணி யாற்றுவதற்கான வாய்ப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.தங்களைப் பற்றிய அருமையான பெறுமதியான ஒரு நேர்காணலை வழங்கிய உங்களுக்கு எமது நன்றிகளும் நீங்கள் எதிர்காலத்தில் இன்னும் பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும் என வாழ்துக்களையும் கூறிக் கொள்கிறேன். வாழ்த்துக்கள் உங்களுக்கு நன்றி
உலகில் உள்ள அனைவரும் அன்பாக நேர்மையாக வாழ வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மகிழ்ச்சி நன்றி.