Welcome to Tamilnenjam

Welcome to Tamilnenjam

கொஞ்சம் சிரிக்கலாமா?

சுதந்திரமா சிரிங்க பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார். ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்... முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்.... நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்.... ..........?   *மாணவன்* : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதி தான் சார் காரணம்! *ஆசிரியர்* : இப்பவாவது உணர்ந்தியே! *மாணவன்* : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!  …

அன்பினால் …

அன்பு நுரைத்தெழுகையில், ஆணவம் அழிந்து இன்பம் பிறக்கிறது! அன்பை உணர்கையில், உலகமே சிறுத்து உள்ளங்கை பந்தாய்! அன்பை சுவாசிக்கையில், மண்ணை நேசித்து பெண்மையும் சிறக்குதே! அன்பு சுற்றிவளைக்கையில், ஆனந்த ஊற்றாய் இல்லம் திகழ்ந்திடுமே! இருள் ஒழிந்து, ஆகாயம் வெளுப்பதால் - வாழ்க்கை அன்பினால்....!

கடைசி நிமிடம்!

என் வாழ்வில் நடந்ததை நினைக்கையில் - என் மெய் பொய்யாவென கிள்ளிப் பார்க்க தோணுது! நடுநிசியில் மொனித்தது ... புதுவருட வாழ்த்துகளை, பரிமாறிய மகிழ்வில், உறங்கச் சென்ற வேளை! திடீரென ஒற்றை வலி இதயத்தை அண்மித்ததாய், வியர்க்காத வலி பயத்தால் வாய் மொனித்தது! நேரம் செல்லச் செல்ல, புழுவாய் துடித்தேன். பார்வையில் எதுவும் விழவே இல்லை! இருண்ட யுகத்துள் நுழைவது போல உணர்வு. நினனவு தப்பலை. எதுவும் செய்ய முடியலை!…

பெண்மையின் முகவரியாய்!

வறுமை வாட்டியதால், வெறுமையானதே இவள் வாழ்வு. இருந்தும், முயன்றவளாய், பொறுமையே இவளைப் பார்த்து பொறாமை கொண்டதே! தனிமை... துரத்தி துரத்தி, வேட்டையாட முயன்ற போதெல்லாம், புறமுதுகு காட்டாது துணிந்தே எதிர் கொண்டாள்! எத்தனை துன்ப துயரங்கள் இவளை பார்த்து எள்ளி நகைத்தன. அவை ஒவ்வொன்றையும், தன்னுள் உள்வாங்கினாள் அனுபவ பாடமாய்! அழுது புலம்பி காலத்தை விரயமாக்காது, நிகழ்கால நிஜத்திற்காய், மற்றவர்களிடம் யாசிக்காமல், நம்பிக்கையுடன் முயல்வதை காண்கையில், விதியே நொந்து போயிற்றே!

பதறிய காரியம் சிதறிப்போகும்

வாலிபமிடுக்கு, வாலிப்பான உடற்கட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரும்பிய மீசை, வாழ்க்கையின் அத்தியாயங்களை மீட்டவொண்ணா பேதலித்த நிலையில் ஜடமாய்ப் படுத்திருந்தான் பருவக்காளை விசாகன். குமுறிக்குமுறி அழுத கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் தாரை தாரையாக வடிய அவன் முன்னே அமர்ந்திருந்தாள் அவன் தாய் அமலா.   ஆண்டாண்டு காலங்கள் வானொலி என்னும் சமுதாய முன்னேற்ற வான் பரப்பில் பொன்மொழிகளையும்,  வாழ்வியல் சிந்தனைகளையும் வடித்து வடித்து பிறர் வாழ்வுக்கு வளம் சேர்த்த இந்த உள்ளமானது…

அரைஞாண் கயிறு அறிவோமா?

அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்? "அரைஞாண்" நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. திருஷ்டி பட கூடாதுன்னு தான் பா கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க .... உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?? நிச்சயமாக இல்லை. அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது. 1. அரைஞாண் என்பது கிராமத்தில்…

அவள் பாடுவாள்தானே.!

காறித்துப்புவதை கொத்தி விழுங்கும் கோழிபோல்தானே உன்னினம் பதினைந்து லெச்சம் என் பழைய காதலூத்தை கழுவி புதியதோர் இல்லறம் புக உனக்கப்பாலும் நான் யாராலாவது கற்பழிக்கப் பட்டிருந்தாலும் இன்னும் சில லெச்சம் என்னைப் பத்தினியாக்க நீ என்னை நேசித்ததாயெண்ணி உன் காதலூத்தைக்குள் நான் வீழ்ந்ததுண்மை நீயென்னை கைகழுவிப் போனதுண்மை முடிந்தால் வாழ்ந்து பாரென்று நீ சவாலிட்டதுண்மை என்றாலும் காறித்துப்பியதை கொத்தி விழுங்கும் கோழிதானே உன்னினம்

அவளென் பா

விருத்தப்பா தென்றலுமே தீண்டிடவே சிலிர்கும் பூக்கள் ..... சிங்காரங் குறையாது சுரக்கும் தேனை சென்றமர்ந்து வண்டுகளும் சுவைக்கு மன்றோ ..... சிறகுகளால் மகரந்த சேர்க்கை பூவில்! தன்காம்பில் காய்கனிகள் தோன்ற பூக்கும் ..... தன்னிழலில் பசியாற உதவும் பாரீர்! என்னற்ற மலர்களெல்லாம் வாசம் வீச ..... என்னிதயம் புன்னகைக்க பூக்கள் போதும்.! தொட்டுமலர் தொடுத்தாளே என்றன் மங்கை ..... தோடிராகம் மீட்டிடுதே என்றன் மையல் வட்டுநிலா முகத்தினவள் காதல் சொல்லி…

உலாவரும் நிலா

உலாவரும் நிலவொன்றை --- உன்னதமாய்த் தாய்காட்டி நிலாச்சோறு ஊட்டுகின்ற --- நிம்மதிதான் வேண்டுமென்று பலாசுவையாய் அமுதூட்டப் --- பக்குவமாய் வாய்த்திறக்க நிலாமகளை நினைந்துகொண்டு --- நீண்டுவிடும் என்கைகளே !! அன்னைதந்த சோற்றினையும் --- அகமகிழ்ந்து உண்ணுகின்றேன் முன்பின்னே அறிந்ததில்லை --- முகமலர்ந்து நிற்கின்றேன் அன்புடைய கைகளினால் --- அமுதத்தைத் தந்துநின்றாள் என்னுடனே அவளிருந்து --- எனக்களித்தாள் பாசத்தை . வண்ணமகள் அன்னையிங்கே --- வாடிடலும் கூடாதென்றே திண்ணமுடன் நிலாச்சோறு ---…

காத்திருக்கின்றேன்

முன்னம் ... எப்போதும் போல இல்லா வண்ணம் நேசிக்கின்றேன் உன்னை! என் காதலை உன்னிடம் சொல்வதாய் இல்லை! என்றேனும் உணர்ந்து, நீயாக எனை தேடும் வேளையில் உனக்காக வழங்க மொத்தமாக சேர்த்து வைத்து உனக்கான முத்தங்களை!
1 2 3 27