கலாபூஷணம் நஜ்முல் ஹுசைன்

வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவரும், கவிஞரும், நூலாசிரியருமாகப் பன்முக திறமைகளுடன்  மிளிரும்  கவிஞர் நஜ்முல் ஹுசைன் நேர்காணலில் இணைகிறார். நேர்கண்டவர் – வஃபீரா வஃபி வேறாக வேர்கள் நூல் வெளியீட்டு விழாவின் போது மே – 2026 / 96 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும் உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தை தாருங்கள்! நான் இலங்கையில் கொழும்பு Read more

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன் மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது. 11 சிறுகதை, கவிதை, சிறுவர் பாடம், இலக்கிய மலர் வெளியீடு மற்றும் விமர்சன கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் விரியும் இவரின் இலக்கிய பரப்பு இவரின் இலக்கிய முதிர்ச்சியின் அடையாளமாகும்.  கிழக்கிலங்கையில் தனக்கென அடையாளம் பதித்த இலக்கிய ஆளுமை மூதூர் முகைதீன் Read more

உயர்நீதி மன்றத்தில் ஓர் தமிழ்ப்பற்றாளர்

கவியரங்கமானாலும் பட்டிமன்றமானாலும் தன்னம்பிக்கைப் பேச்சரங்கமானாலும் தனித்த ஒரு முத்திரை பதிப்பவர். சுருக்கெழுத்து தட்டச்சராகப் பணியாற்றிய பணியாளர் இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நேர்முகஉதவியாளர் என்ற நிலைக்கு உயர்ந்தவர். நீதிமன்றப் பணிகள் மட்டுமின்றி தமிழ்ப்பணிகளையும் தளர்வின்றி ஆற்றி வருபவர். கதை கவிதை கட்டுரை என அனைத்துத் துறைகளிலும் பயணித்துவருபவர். கவிதைநூல்களைப் படைத்து ஒரு சிறந்த படைப்பாளியாகவும் திகழக்கூடியவர். உளவியல் நூலக அறிவியல் வணிக மேலாண்மை சட்டம் கலை என பல்வேறு பிரிவுகளில் முதுகலைப்பட்டங்கள் பெற்று பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் கூற்றுக்குச் சான்றாக நடந்து வரும் பெண்மணியார். ஆம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகளின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிவரும் கவிஞர் இராஜ பிரபா அவர்களைத்தான் நேர்காணல் செய்ய மதுரை வந்துள்ளோம். இதோ நேர்காணல்.

நஸ்லின் ரிப்கா அன்சார்

கவிஞரும் வரலாற்றாய்வாளரும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியருமான தந்தையின் அன்பில் வளர்க்கப்பட்ட நஸ்ரின் றிப்கா அன்சார் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வடக்கே கல்முனை என்னும் ஊராலும் கிழக்கே கடலாலும் மேற்கே வயலாலும் தெற்கே காரைதீவு எனும் ஊராலும் சூழப்பட்ட சாய்ந்தமருது இலங்கை எனும் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.

பெண்மையைப்போற்றுவோம்

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்பதற்கிணங்க, பெண்கள் தினத்தைப் போற்றும் வகையில்… பாரதத் தாய் ஈன்றெடுத்த பைந்தமிழ் நாட்டின் சீர்மிகு கடலூர் மாவட்டத்தில் பகையில்லா உறவுகளும், புகையில்லா இயற்கை எழிலும் கொஞ்சி மகிழ்ந்திடும் கொழை சாவடிக்குப்பம் எனும் கிராமத்தில், சேற்றில் முளைத்த செந்தாமரையாய் ஏர் முனைப் பிடித்து விவசாயத்தை உயிரெனக் கொண்ட பிலிப்பு – பாப்பம்மாள் தம்பதியர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குறிஞ்சி மலராய் பிறந்த பி.ஆரோக்கிய Read more

அன்பு வானொலி – காற்றோடுக் கவிதைகள்

சத்தமில்லாச் சந்தங்கள் சொல்லத் தேனூரும் செல்லத் தமிழ் வாரி மெல்லத் தெளிப்போம் – நாம் அள்ளி உலகிற்கே..! சீரெழில் மொழியோர்க்கு ஜெயலட்சுமியின் செந்தமிழ் வணக்கங்கள் இளங்கலை வரலாறு முடித்துவிட்டு குடும்ப நலன்களை கவனித்துவரும் சராசரி பெண்க நான். மனிதப் புழக்கம் அதிகமில்லா தனிமையில் என்னுடைய வாழ்வு கழிகிறது. துணையாக கைகோர்க்க தமிழையே தேர்வு செய்தேன் . அழகுத் தமிழின் கரம் பிடித்தலென்பது அளவிற்கறிய இன்பம் தானே நானும் மெதுவாய் நடைபயிலக் Read more

காங்கோவில் தமிழர் கிரிஜாவின் கல்விச்சேவை

தமிழ்நெஞ்சம் அயலக தமிழ் உறவாகக் காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டின் தலைநகர் கின்சாசாவில் செயல்பட்டு வரும் EIS (ஈ.ஐ.எஸ்) பள்ளியின் தாளாளர்கள் திரு.கண்ணன் – திருமதி.கிரிஜா கண்ணன் இணையரைத் தொடர்பு கொண்டோம். வாருங்கள் இந்த தமிழ் உறவுகளை அறிந்து கொள்வோம். இவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக ‘‘இங்கிலீஷ் இன்டர்நேஷனல் ஸ்கூல்’’ என்ற பள்ளியின் மூலம் ஆங்கில வழிக்கல்வியை போதித்து கொண்டு வருகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால், பிரெஞ்சு மொழி அலுவல் Read more

பெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்

தமிழ்நெஞ்சம் இதழின் இணையாசிரியர் முனைவர். பெண்ணியம் செல்வக்குமாரிக்கு மிகச் சமீபத்தில் ‘‘ஆச்சார்யா சக்திவிருது’’, ‘‘திருப்பூர் சக்தி விருது’’ என இருவிருதுகள் அளிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆச்சார்யா நிறுவனம், திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இவ்விருதுகளை வழங்கிப் பெருமைபடுத்தியது. அவ்விருது மங்கை செல்வக்குமாரி அவர்களின் நேர்க்காணல் இதோ… இந்த ஆண்டில் இரு சக்தி விருதுகளை வாங்கியிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.. இவ்விருதுகள் குறிப்பாக பெண்களுக்கு அளிக்கப்படும் விருதுகள்.. இவ்விருது களைப் Read more

இராம வேல்முருகன்

கல்வித்தகுதிகள் BSc Zoology MSc Zoology BEd biology History BLIS library science MLIS. “” HRM DYDW (Commonwealth international diploma) படித்த கல்வி நிலையங்கள் டிஇஎல்சி தொடக்கப்பள்ளி வலங்கைமான் அரசினர் மேல்நிலைப்பள்ளி வலங்கைமான் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி கும்பகோணம் கல்வியியல் மேம்பாட்டு ஆராய்ச்சி நிலையம் சென்னை பயின்ற பல்கலைக்கழகங்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகம் முதன்முதலில் கவிதை எழுதியது 1982 Read more

அனுராஜ்

வசிப்பிடம். இந்தியாவில் உள்ள தமிழகத்தின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் . வணிகவியல் பட்டதாரி. பள்ளி படிக்கும் காலங்களில் இருந்தே கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபாடு அதிகம்.. பல கவிதைகள் தமிழக வார, மாத இதழ், சிற்றிதழ், மின்னிதழ்களில் வெளியாகி உள்ளது. முகநூலில் தொடர்ந்து எழுதி கொண்டு வருவதுடன்  பல குழுமங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்.  சில குழுமங்களின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். ஹைக்கூ கவிதைகளை 1985 லிருந்து எழுதி வரும் Read more