வசிப்பிடம். இந்தியாவில் உள்ள தமிழகத்தின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் .

வணிகவியல் பட்டதாரி.

பள்ளி படிக்கும் காலங்களில் இருந்தே கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபாடு அதிகம்..

பல கவிதைகள் தமிழக வார, மாத இதழ், சிற்றிதழ், மின்னிதழ்களில் வெளியாகி உள்ளது. முகநூலில் தொடர்ந்து எழுதி கொண்டு வருவதுடன்  பல குழுமங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்.  சில குழுமங்களின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

ஹைக்கூ கவிதைகளை 1985 லிருந்து எழுதி வரும் அனுராஜ் 1989 ல் தமிழகத்தின் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த தாய் வார இதழில் இவரது ஹைக்கூ வெளியாகியதோடல்லாமல் அதன் பின் பலமுறை பல இதழ்களில் வெளியாகி உள்ளது. இவரது கவிதைகள் சில தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. முகநூலில் இருநூறுக்கும் மேற்பட்ட ஹைக்கூ போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார். முகநூல் குழுமங்களின், மற்றும் தமிழ் அமைப்புகளின் விருதினையும், சான்றிதழையும் பெற்றிருக்கிறார்.

உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் எனும் முகநூல் குழுமத்தின் செயலராக இருந்து வருவதுடன், ஹைக்கூ பயிற்றுவிப்பாளராகவும் செயல்படுகிறார்.


2 Comments

Saradha Santosh · ஜூன் 6, 2019 at 13 h 45 min

சிறந்த கவிஞர்.. பல தமிழ் நற்பணிகளை செய்து வருகிறார்.. வாழ்த்துகள்

கா.ந.கல்யாணசுந்தரம் · ஜூன் 6, 2019 at 18 h 25 min

ஹைக்கூ கவிஞர் அனுராஜ் அவர்களைப்பற்றிய அறிமுகம் அருமை. தமிழ்நெஞ்சம் தமது கவிப்பயணத்தில் ஹைக்கூ கவிதைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு அல்லாமல் கவிஞர்களை அறிமுகப்படுத்தும் பணியும் சிறப்பாக செய்துவருவது மிக்க மகிழ்வு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

நஸ்லின் ரிப்கா அன்சார்

கவிஞரும் வரலாற்றாய்வாளரும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியருமான தந்தையின் அன்பில் வளர்க்கப்பட்ட நஸ்ரின் றிப்கா அன்சார் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வடக்கே கல்முனை என்னும் ஊராலும் கிழக்கே கடலாலும் மேற்கே வயலாலும் தெற்கே காரைதீவு எனும் ஊராலும் சூழப்பட்ட சாய்ந்தமருது இலங்கை எனும் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.

அறிமுகம்

பெண்மையைப்போற்றுவோம்

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்பதற்கிணங்க, பெண்கள் தினத்தைப் போற்றும் வகையில்…
பாரதத் தாய் ஈன்றெடுத்த பைந்தமிழ் நாட்டின் சீர்மிகு கடலூர் மாவட்டத்தில் பகையில்லா உறவுகளும்,

 » Read more about: பெண்மையைப்போற்றுவோம்  »

அறிமுகம்

அன்பு வானொலி – காற்றோடுக் கவிதைகள்

சத்தமில்லாச் சந்தங்கள்

சொல்லத் தேனூரும்
செல்லத் தமிழ் வாரி
மெல்லத் தெளிப்போம் – நாம்
அள்ளி உலகிற்கே..!

சீரெழில் மொழியோர்க்கு
ஜெயலட்சுமியின் செந்தமிழ் வணக்கங்கள்

இளங்கலை வரலாறு முடித்துவிட்டு குடும்ப நலன்களை கவனித்துவரும் சராசரி பெண்க நான்.

 » Read more about: அன்பு வானொலி – காற்றோடுக் கவிதைகள்  »