அஞ்சலி

உனக்கு ஏது உறக்கம்.?

தோன்றிய கால முதல் தூண்டாய்
மணி விளக்காய் தோன்றிய.
தமிழ்த் தாயின் தலைமகனே.
குமணன் தலை கொடுக்க முன்வந்தான்
நீயோ தன்னையே தமிழுக்கு தந்தாய்
புறநானூறு அகநானூறு ஆக
மொத்தம் எண்ணூறு என
எண்ணிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில்
சங்கத் தமிழின் சங்கதிகளை
சரித்திரமாய் சொன்னவன் நீயே
மனிதகுலத்தின் போக்கு வரத்திற்கு
கோடு கிழித்த வள்ளுவனுக்கு
வான் புகழ் கொண்ட சிலை அமைத்தவன் நீயே
உரை வீச்சில் உள்ளத்தை உருக வைத்தவனே
மூட நம்பிக்கையை முட்டித்தள்ள
முழு வீச்சில் முயன்றவனே
சினிமாக்கள் அறியாமையை விதைத்தபோது
வாழ்க்கையின் யதார்த்தத்தை அறிவோடு கலந்தவன் நீயே
கதா கலட்சமாக கவி அரங்குகள்
காட்சி அளித்தபோது கவி
அரங்குகளில் புரட்சி செய்த புதுமையாளனே
கழிக்க முடியாத கடன் பிறப்புகளை
பெற்ற கலைஞரே.

 » Read more about: உனக்கு ஏது உறக்கம்.?  »

அஞ்சலி

உனக்கு ஏது மரணம்.?

தோன்றிப் புகழோடு தோன்றுக என குறள் போற்றும் இலக்கணத்தின் இலக்கியமே. கலைஞர் என்ற நான்கு எழுத்தின் நற்றமிழே.

நா அசைந்தால் நாடு அசையும் என்ற எடுத்துக் காட்டாய் வாழ்நதவரே. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முத்தமிழின் மூத்த தலைமகனே.

 » Read more about: உனக்கு ஏது மரணம்.?  »

அஞ்சலி

பரிதி

தீப்பிழம்பில் குளித்தெழுந்த தீந்தமிழே!
தெள்ளுற்ற தமிழ்நாட்டின் முகவரியான திராவிடமே!
தமிழுக்கோர் தொண்டாற்றி கசிந்து கனிந்த பழமே!
செங்கதிரோன் சாயலதில் வார்த்தெடுத்த கரிகாலனே!
எங்கள் சேது சமுத்திரமே!

சாதீயம் பேசி சாக்காடாயிருந்த கூட்டம்
சித்தம் தெளிய வந்த சிலப்பதிகாரமே!

 » Read more about: பரிதி  »

By நவீனா, ago
அஞ்சலி

தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா

இசைப்பாக்கள் இயற்றுதற்கு இலக்க ணத்தை
        இயற்றிட்ட திருமுருகன் வழியில் நின்று
திசைமாறிப் போகாமல் திறமை யோடு
        தித்திக்கத் தெளிதமிழாம் ஏட்டைத் தந்தார்
விசையாகத் தனித்தமிழின் இயக்க மோங்கி
 

 » Read more about: தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா  »

அஞ்சலி

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018

உனது எழுத்துக்களின் ஊர்வலத்தோடு….

திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரியில்
அருட்சுடர்போல் அவதரித்தவன் நீ…
ஆனந்த வயலில் ஆசையெனும் வேதத்தை
அறவே துறந்த எழுத்துச்சித்தன்
நானே எனக்கொரு போதிமரம் எனும்
தத்துவமாய் வாழ்ந்து இரும்புக்குதிரைகளை
எதோ ஒரு நதியில் நடக்கவிடாமல்
கடற் பாலத்தின் மேல் ஓடவிட்டவன் !

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018  »

By Admin, ago
அஞ்சலி

காகிதப் பதிப்பக கண்மணி வாழி !

அஞ்சலி

ஆயுதப்பு ரட்சியெலாம் அன்றும் இன்றும்
      அகிலத்தில் மாற்றங்கள் செய்ய வில்லை,
காகிதப்பு ரட்சியால்தான் கணக்கிலா மாற்றம்
      காண்கின்றோம் கண்கூடாய் குருதி யின்றி,

 » Read more about: காகிதப் பதிப்பக கண்மணி வாழி !  »

By Admin, ago