உனக்கு ஏது உறக்கம்.?

தோன்றிய கால முதல் தூண்டாய் மணி விளக்காய் தோன்றிய. தமிழ்த் தாயின் தலைமகனே. குமணன் தலை கொடுக்க முன்வந்தான் நீயோ தன்னையே தமிழுக்கு தந்தாய் புறநானூறு அகநானூறு ஆக மொத்தம் எண்ணூறு என எண்ணிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் சங்கத் தமிழின் சங்கதிகளை சரித்திரமாய் சொன்னவன் நீயே மனிதகுலத்தின் போக்கு வரத்திற்கு கோடு கிழித்த வள்ளுவனுக்கு வான் புகழ் கொண்ட சிலை அமைத்தவன் நீயே உரை வீச்சில் உள்ளத்தை உருக வைத்தவனே Read more

உனக்கு ஏது மரணம்.?

தோன்றிப் புகழோடு தோன்றுக என குறள் போற்றும் இலக்கணத்தின் இலக்கியமே. கலைஞர் என்ற நான்கு எழுத்தின் நற்றமிழே. நா அசைந்தால் நாடு அசையும் என்ற எடுத்துக் காட்டாய் வாழ்நதவரே. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முத்தமிழின் மூத்த தலைமகனே. இயல், இசை, நாடகதில் பகுத்தறிவு கருத்துக்களை தீட்டியவரே. சர்வாதிகாரத்தில் வாளுக்கு இருந்த வலிமையை ஜனநாயகத்தில் பேனாவுக்கும் உண்டு என்று எழுத்து உலகில் புரட்சி செய்தவனே, சினிமாவில் விசனங்களே வசனங்களாக காட்சி அளித்த Read more