தோன்றிப் புகழோடு தோன்றுக என குறள் போற்றும் இலக்கணத்தின் இலக்கியமே. கலைஞர் என்ற நான்கு எழுத்தின் நற்றமிழே.

நா அசைந்தால் நாடு அசையும் என்ற எடுத்துக் காட்டாய் வாழ்நதவரே. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முத்தமிழின் மூத்த தலைமகனே. இயல், இசை, நாடகதில் பகுத்தறிவு கருத்துக்களை தீட்டியவரே. சர்வாதிகாரத்தில் வாளுக்கு இருந்த வலிமையை ஜனநாயகத்தில் பேனாவுக்கும் உண்டு என்று எழுத்து உலகில் புரட்சி செய்தவனே, சினிமாவில் விசனங்களே வசனங்களாக காட்சி அளித்த போது சினிமாவில் புரட்சி செய்தவர் நீ. அவர் திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காக அமைந்தது. சமூக நல்லிணக்கத்தை உறுதிபடுத்த சமத்துவபுரங்கள் கண்டார். ராஜதந்திரத்தில் அவருக்கு நிகர் அவரே என்று நிரூபித்துக் காட்டினார். முகவரியை தொலைத்து விட்ட தமிழர்களின் தன்மானத்தை பாதுகாக்க தன் குரலை உயர்த்திப் பிடித்தார். தமிழரின் பண்பாட்டு கலாச்சார விழுமங்களை பாதுகாக்க தன் பேனாவை தூக்கிப் பிடித்தார். கலைஞரின் பேனா குனிந்த போது தமிழரின் தன்மானம் உயர்ந்தது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் பொன்மொழியை இதயத்தில் தாங்கிப்பிடித்து பணியாற்றியவர். கவி அரங்குகளில் கன்னித் தமிழின் மேன்மையை கற்பனை கலந்து, உலவ விட்டார். கவிதை, உரைநடை, சினிமா, அரசியல் போன்றவற்றில் தன் ஆளுமை நிரூபித்துக்காட்டியவர். உழைப்பு என்பதற்க்கு இவர் ஒரு எடுத்ததுக்காட்டு. பன்முக ஆற்றல் கொண்ட கலைஞர், தமிழ் ஆய்ந்த தலைமகனே தமிழ்நாட்டை ஆள வேணடும் என்று பாரதிதாசனின் வரிகளுக்கு இலக்கணமாக தமிழ்நாட்டை 5 முறை ஆண்டார்.

தலை உள்ளவர்கள் எல்லாம் தலைவர்கள் ஆவதில்லை. தலைக்குள் விசயம், ஞானம் உள்ளவர்கள் தாம் தலைவர்கள் என்பதற்க்கு கலைஞர் மிகப்பெரிய உதாரணம். 95 வயதில் இளமையின் வேதமும் முதுமையின் ஞானமும் கொண்டு விளங்கினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தலைவன் பிறப்பான் என்பார்கள். இதுபோன்ற தலைவரை பார்க்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.

வங்கக்கடலோரும் கடல் அலை தாலாட்டும் கடல்லோரும் துயில் கொள்ளும் முத்தமிழின் தலைமகனே, இறுதி விடை கொடு என்று சென்று விட்டாய். உனக்கு ஏது விடை நீயோ வினாவாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாய். விண் மண் கடல் இருக்கும் வரை உன் புகழ் இருக்கும் உன் வெற்றிடத்தை எவராலும் நிரப்ப முடியாது.

வாழ்க தலைவனே


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »