சிறுகதை

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது

 சிங்களச் சிறுகதை – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

தமிழில் – எம். ரிஷான் ஷெரீப்

“மஞ்சு சொல்றான் அவனுக்கு என்னோட சுருண்ட கூந்தல் பிடிக்கலையாம்.

 » Read more about: மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது  »

By Admin, ago
புதுக் கவிதை

கவிதை: விரதம்

தெலுங்கில் எழுதியவர்: உஷா துரகா

காருக்குக் குறுக்கே வந்தவனை
வாய் வலிக்கத் திட்டிய அரைமணிக்கு
அன்று மௌன விரதம் இருப்பது
நினைவு வந்தது

இரண்டாவது குலாப்ஜாமூன்
தொண்டைக்குள் இறங்கும்போது
அன்று உபவாச தீட்சை இருப்பது
நினைவு வந்தது

ஹாய்…குட் மார்னிங்..

 » Read more about: கவிதை: விரதம்  »

புதுக் கவிதை

கண்ணாடி

கண்ணாடி Mirror

மூலம்: சில்வியா பிளாத்
மொழியாக்கம்: தாரா கணேசன்

நான் வெள்ளியின் துல்லியமானவள்
எவ்வித முன்புனைவுகளும் அற்றவள்
காண்பதையெல்லாம் உடனுக்குடன் விழுங்குபவள்
காதலின் மூடுபனியோ அன்றி
வெறுப்போ இன்றி
கொடூரம் அற்றவளாய்,

 » Read more about: கண்ணாடி  »

கவிதை

என்றாலும் நான் எழுவேன்!

கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி
வரலாற்றில் கடைநிலையில்
என்னை நீ எழுதலாம்;
அழுக்குக்குள் தோயும்படி
அழுத்தமாய் மிதிக்கலாம்
என்றாலும் நான் எழுவேன்,
சிறு புழுதியைப் போல!

 » Read more about: என்றாலும் நான் எழுவேன்!  »

கவிதை

எதனினும் அழகிய தேசம் எனது

மதம் நம்மிடையே விரோதத்தை வளர்க்க எங்களுக்கு கற்றுத்தந்ததில்லை நாம் இந்தியரே, ஹிந்துஸ்தானமே நமது தாயகம். உலகின் மிகப் பழமையான கிரேக்கம் எகிப்து ரோமானிய நாகரிகங்கள் எல்லாம் சுவடேதுமின்றி காணாமல் போனாலும் எமது சொந்த அடையாளங்கள் மட்டும் இன்றும் நிலைத்திருக்கின்றன.