இந்த உலகம் முழுவதுமுள்ள தேசம் எதனினும்
எங்கள் ஹிந்துஸ்தான்
மிக அழகாக உள்ளது,
நாங்கள் அதன் பாட்டுப் பறவைகள்,
இது நாங்கள் பறந்து திரிந்திடும் எங்களின் தோட்டம்
எந்தவொரு அன்னிய இடத்தில் இருந்தாலும்,
இதயம் இந்த தாயகத்தின் மீதுதான் இருக்கிறது.
எங்கள் இதயம் எங்கே இருக்கிறதோ
அங்கே இருக்கத்தான் எமக்கு தெரியும்.
அந்த உயர்ந்த மாமலை ,
வானத்தின் நிழல் பங்காளராய்
எமது காவல்காரனாக இருக்கிறது.
அதன் மடியில் தொடங்கும் நதிகள்
ஆயிரம் ஆயிரமாய் பிரிந்து நிலமெங்கும் அலைகின்றன.
அதன் உயிரோட்டம்
எங்கள் தோட்டத்தைச் செழிப்பாக்கி
பூமியின் சொர்கமிது என்று
பொறாமை கொள்ளச் வைக்கிறது.

ஓ பிரவாகித்தோடும் கங்கையே,
நாங்கள் பயணித்த வாகனம் பாதுகாப்பாய்
உன் நதிக்கரைக்கு முதன் முதல் வந்து சேர்ந்த
அந்த நாள் உனக்கு ஞாபகம் வருகிறதா.

மதம் நம்மிடையே
விரோதத்தை வளர்க்க எங்களுக்கு கற்றுத்தந்ததில்லை
நாம் இந்தியரே, ஹிந்துஸ்தானமே நமது தாயகம்.

உலகின் மிகப் பழமையான
கிரேக்கம் எகிப்து ரோமானிய
நாகரிகங்கள் எல்லாம்
சுவடேதுமின்றி காணாமல் போனாலும்
எமது சொந்த அடையாளங்கள் மட்டும்
இன்றும் நிலைத்திருக்கின்றன.

எங்கள் இருப்பு எதுவும் துடைக்கப்படாமல்
ஏதோ ஒருவிதத்தில் இன்றும் இருக்கிறது.
உலகின் காலச் சக்கரத்தின் சுழற்சி
நம் எதிரியாய் வந்தாலும்
எத்தனை நூறு ஆண்டுகளாயினும் நிலைத்திருக்கும்.

நம்புவதற்கு வேறென்ன இருக்கிறது இந்த உலகில்
நமக்குள் மறைந்திருக்கும் வலி
என்னவென்று யாருக்குத் தெரியும்?

The Poem by Mohamed Iqbal “Sare jahan se accha”
translated it in Tamil by எழுச்சிக் கவிஞர் எழில்வேந்தன்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.