வணக்கம் நண்பர்களே
கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது. நிலாமுற்றத்தில் மீண்டும் மரபுக்கவிதைப் பயிற்சியைத் தொடங்கியபோது கலந்து கொண்ட பாவலர்களின் எண்ணிக்கையே ஒரு புத்துணர்ச்சியைத் தந்தது. மரபின்மேல் அவர்கள் வைத்துள்ள பற்றையும் நம்பிக்கையையும் காட்டும்விதமாக அது அமைந்தது. அன்பு என்ற தலைப்பின்கீழ் எழுதப்பட்ட 136 கவிஞர்களின் கவிதைத் தொகுப்பே இது. அன்பு குறித்த ஒரு கவிதைக் கதம்பம் இது. படிக்கப் படிக்கத் தேனூறும். படித்து முடித்தபின் வியப்பூறும் விதமாக அமைந்துள்ள இத்தொகுப்பை ஐயா தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் மிக அழகாக வடிவமைத்துள்ளார்கள்.
இராம வேல்முருகன் வலங்கைமான்
1 Comment
நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் . · டிசம்பர் 31, 2022 at 16 h 11 min
இனிய வணக்கம், மிகச் சிறப்புங்க, அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
Comments are closed.