நிலாமுற்றம் முகநூல் குழுமத்தில் நடைபெறும் மரபுக் கவிதை எழுதும் பயிற்சியில் பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் போட்டியில் பாரதியாரைப் போற்றும் வகையில் எழுதப்பட்ட 100 விருத்தங்களுடன் எனது இரண்டு விருத்தங்களும் சேர்ந்து 102 விருத்தங்கள் நிறைந்த தொகுப்பாக இந்நூல் வெளியிடப்படுகிறது.
இராம வேல்முருகன் வலங்கைமான்
இந்தத் தொகுப்பானது பாரதி குறித்த தகவல் களஞ்சியமாகவும் கவிதைக் களஞ்சியமாகவும் விளங்குகின்றது. தமிழ்கூறு நல்லுலகத்தில் இந்த நூல் பெரும் வரவேற்பை பெறுமென்பதில் ஐயமில்லை.
முனைவர் வெற்றி நிலவன்
மாநிலக் கல்லூரி சென்னை
வலங்கையார் தொகுப்பும் வாழ்க
வாய்த்தநற் கவிகள் வாழ்க
கலங்கரை விளக்கம் போலக்
கைகளில் நூலும் வாழ்க
பலத்துடன் ஒருங்கி ணைந்தப்
பாவலர் கூட்டம் வாழ்க
நலத்துடன் தமிழின் ஊடே
நாளெல்லாம் வாழ்க வாழ்க
தமிழ்நெஞ்சம் அமின்
