நதியின் குரல்

இயற்கை எழுதிய தண்ணீர்க் கவிதை நான். மண்ணின் மனக்குரலின் திரவப் பதிவு . . ! புவிக்கோளத்தின் புதுமை யுகங்களைக் கடந்து நிற்கும் அகிலத்தின் ஆயுள் ரேகை. வெளியில் மிதக்கும் வெளிச்சப் புதையல். எழுந்திடத் துடிக்கும் என் அலைகள், குளிர் ஜுவாலைகள். உயிர்களைப் பிரசவித்திட மண் மங்கை கருவுற்ற போது நான் உயிரணுக்களுக்காக ஊறிவந்த தாய்ப்பால். நான் பிரபஞ்ச மொழியில் பேசியதெல்லாம் புரியாமல் போனதால் உங்கள் உள்ளூர் மொழியில் உரைத்திட Read more

எதனினும் அழகிய தேசம் எனது

மதம் நம்மிடையே
விரோதத்தை வளர்க்க எங்களுக்கு கற்றுத்தந்ததில்லை
நாம் இந்தியரே, ஹிந்துஸ்தானமே நமது தாயகம்.

உலகின் மிகப் பழமையான
கிரேக்கம் எகிப்து ரோமானிய
நாகரிகங்கள் எல்லாம்
சுவடேதுமின்றி காணாமல் போனாலும்
எமது சொந்த அடையாளங்கள் மட்டும்
இன்றும் நிலைத்திருக்கின்றன.