I மின்னிதழ் I நேர்காணல் I  அங்கயற்கண்ணி செல்வகுமார்

  • உங்களைப்பற்றிய அறிமுகம் தாருங்கள்.

 நான் அங்கயற்கண்ணி செல்வகுமார். ஈழம் எனது தாயகம். புலம்பெயர்ந்து  கணவர் இரு குழந்தைகளுடன் சுவிற்சர்லாந்தில் வாழுகிறேன். அத்தோடு தாய்மொழிக் கல்வியைக் கற்க முடியாத தமிழ்க் குழந்தைகளுக்காக அன்னைத் தமிழ் அறிவாலயம் தமிழ்ப் பாடசாலையை உருவாக்கி தாய் மொழிக் கல்வியைப் புகட்டி மகிழ்வுடன்  இருக்கிறேன்.

  • புலம்பெயர் தேசத்தில் உங்கள் தமிழ்த் தொண்டு எத்தகைய வரவேற்பைப் பெற்றுள்ளது?

தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது என்று  பாராட்டி வாழ்த்தினார்கள்.

செப்டெம்பர் 2023 / 104 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.
யாழிசை இலக்கிய சந்திப்பில் உடுவையூர் கலாவுடன் அங்கையடர்கண்ணி
  • உங்களால் நடாத்தப்படும் அன்னை அறிவாலயத்தில் தாங்கள் ஆற்றும் பணிகள் எவை?

மாணவர்களுக்குத் தேவையான வளர் தமிழ் நூல்களை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையிடம் இருந்து பெற்று மாணவர்களுக்கு கையளிப்பது, பரீட்சைத் தாள்களை தயார் செய்வது,பாடசாலை நிறைவு பெற்றதும் சுத்தம் செய்வது, மாணவர்களுக்கு கற்பிப்பது மற்றும் பல ஆக்கத் திறன் செய்யற்பாடுகளை சொல்லிக்கொடுப்பது போன்ற பணிகளைச் செய்கிறேன்.

  • இப்பாடசாலையில் எத்தனை பேர் படிக்கிறார்கள்?

25 மாணவக் குழந்தைகள் எனது பாடசாலையில் தமிழ் கற்கிறார்கள்.

  • நீங்கள் ஆற்றும் தமிழ்ப் பணிக்கு குடும்பத்தில் ஆதரவு உண்டா?

எனது தமிழ்ப்பணிக்கு முழுமையான  ஆதரவு குடும்பத்தில் கிடைக்கிறது.

  • இப்பணியில் நீங்கள் எதிர்நோக்கும் சாதக பாதகங்கள் என்று எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

இப்பணியை சேவையாகச் செய்கிறேன், அதாவது கல்வியை வியாபார எண்ணத்தோடு எவரும் பார்க்காமல் தமிழ் மொழிக் கல்வியை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழ்மொழி கற்க முடியாமல் இருந்த மாணவர்களுக்காக உருவாக்கப் பட்ட பாடசாலை

  • பொதுவாக புலம்பெயர் தேசத்தில் தமிழ்மொழியின் நிலை பற்றி அனுபவங்கள் ஊடாக பகிருங்கள்.

புலம் பெயர் தேசங்களில் தமிழின் நிலையானது சுமாராக இருந்த போதும், என்போன்ற பணியாளர்களால் இங்கு பிறந்த எம்மவரின் குழந்தைகள் தமிழைப் பக்குவமாகாக கற்கும் நிலை உருவாகிறது. இவர்களைக் கற்பிக்க வேண்டும் என்கிற உத்வேகம் பெற்றோரிலும் அதிகமாகக் காணமுடிகிறது. தமிழுக்காக யாவரும் தினசரி ஒன்றிணைய முடிகிறது. இது தமிழ் தந்த வரமே.

மகளின் இசைஇறுவெட்டு நிகழ்வில்
கற்ற பாடசாலையில் (தாயகம் )
  • இணையத்தில் முகநூல் குழுமங்களில் நடுவராகப் பணியாற்றும் நீங்கள், நடுவர் பணியின் போது நெருக்கடிகளைச் சந்தித்ததுண்டா?

நடுவர் பணியில் நெருக்கடிகள் ஏற்படுவதுண்டு. சில புரிதலின்மை, பேச்சு வழக்கு, எழுத்துவழக்கு இவற்றாலும், தப்பான புரிதலோடு பழக்கப்பட்டவர்களாலும் நெருக்கடிகள் உண்டு.

  • முகநூல் குழுமங்கள் ஊடாகத் தமிழ்மொழி மெருகேறுகிறதா?

ஆம். முகநூல் குழுமங்களலும் தமிழ் மெருகேறுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். காரணம், அதிகம் படைப்புகள் நாளுக்கு நாள் படைக்கப்படுகின்றன. அத்தோடு, விருது என்ற பெயரில் நம் முன்னோரின் இயற்கையின் பெயர்கள் உச்சரிக்கப்படுகிறது. இதுவும் மெருகேறல் என்றே நான் கொள்கிறேன்.

கவியரங்கில் கவிதை படிக்கும் தருணம்
  • புலம் பெயர் தேசத்திலும் முகநூலிலும் தங்கள் தமிழ்ப் பணி மன நிறைவைத் தருகிறதா?

தமிழை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்பணியானது நிறைவு தரும். அந்த வகையில் புலம்பெயர் தேசத்திலும் முகநூல் குழுமங்களிலும் எனது விருப்புடனான தமிழ்ப்பணி பூரண நிறைவைத் தருகிறது.

  • மேலும் உங்கள் பணியை விரிவு படுத்த விரும்புகிறீர்களா? எவ்வாறு?

அன்னைத்தமிழ் அறிவாலயம் தமிழ்ப் பாடசாலை மூலம் தமிழ்மொழியைப் புகட்டி வளர்ந்து வரும் எமது குழந்தைகளுக்கு தாய்மொழியாம் செம்மொழியின் சிறப்பை அவர்களும் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு எடுத்துச் செல்வேன்.

  • தாயகத்திலும் புலம் பெயர் தேசத்திலும் தமிழின் நிலை பற்றிக் கூறுங்கள்.

இரு இடங்களிலும் மொழியின் சிறப்பையும், பெருமையையும் தமிழ் ஆர்வலர்கள் முன் வந்து தமிழ்க் கல்வியறிவு இல்லாத இடங்களுக்குச் சென்று தமிழை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

  • கவியரங்கம் பட்டிமன்றம் பற்றிய உங்கள் அனுபவங்களைச்சொல்லுங்கள்

கவியரங்கம் பட்டிமன்றம் என நிறையப்  பங்கு பற்றியுள்ளேன், தலைமைத்துவத்திலும் பங்கு கொண்டேன் சிறப்பான அனுபவம்

பட்டிமன்றம் என்று சொல்லும் போது ஒன்றாக கவியுலகில் பயணிக்கும் கவித் தோழமைகளுடன் அவர்களின் பேச்சை எதிர்த்து வெட்டிப்பேசும் போது மனதிற்கு தர்ம சங்கடமாகவும் இருக்கும்.

  • தமிழ்நெஞ்சம் இதழ் பற்றி சொல்லுங்கள்.

ஐரோப்பாவில் தமிழ்வளர்க்கும் நற்றமிழ் இதழ். அதன் ஆசிரியருக்கும், அவருடன் இணைந்து செயற்படும் யாவருக்கும் வாழ்த்துகள்.என்னை நேர்காணல் செய்த தங்களுக்கும் நன்றி… வணக்கம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »