மின்னிதழ் / நஸ்லின் ரிப்கா அன்சார்

கவிஞரும் வரலாற்றாய்வாளரும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியருமான தந்தையின் அன்பில் வளர்க்கப்பட்ட நஸ்ரின் றிப்கா அன்சார் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வடக்கே கல்முனை என்னும் ஊராலும் கிழக்கே கடலாலும் மேற்கே வயலாலும் தெற்கே காரைதீவு எனும் ஊராலும் சூழப்பட்ட சாய்ந்தமருது இலங்கை எனும் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். இவர் பெற்றோருக்கு இரண்டாம் பிள்ளை.

ஆரம்பக்கல்வி, உயர்கல்வி இரண் டையும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கற்றார். அதே பாடசாலை யிலேயே ஆசிரியத் தொழிலில் இணைந்து பின்னர் அதிபர் தரத்திற்கு உயர்த்தப்பட்டு தற்போது சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலயத்தில் அதிபர் தரத்தில் கடமை யாற்றி கொண்டிருக்கிறார்.

அறிமுகம் செய்பவர் : தமிழமின்

அக்டோபர் 2022 / 96 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

இவரது கல்வித் துறையைப் பற்றி கூறுவதானால் கல்விக் கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா முடித்துவிட்டு பின் கல்விமானி பட்டப் படிப்பினை பூர்த்தி செய்துவிட்டு பின்னர் உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பாடநெறியை கற்று பின்னர் அதிபர் பரீட்சையில் சித்தி பெற்று பின்னர் பட்டப்படிப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறியை கற்று தற்போது முதுமானிப் பட்டத்திற்காக தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் கணணியில் தேர்ச்சி பெற்றமை இவரது நிர்வாக செயற்பாடு களை இலகுவாக்கியுள்ளது.

சிறு வயதில் இருந்தே கலை, இலக்கியத்தில் இவருக்கு இருந்த ஆர்வத் தினால் பல படைப்புகளை தமிழுலகிற்குத் தந்துள்ளார்.

இலங்கை தேசிய இதழ்களான தினகரன், வீரகேசரி, நவமணி, விடிவெள்ளி, தமிழ்த்தந்தி, சுடர்ஒளி, மித்திரன், சுபீட்சம், தமிழன், Sunday Observer, Sunday Times, மெட்ரோ லீடர் போன்ற பத்திரிகைகளிலும் ஒளி அரசி, கல்விமானி, எங்கள் தேசம், துணிந்தெழு, தமிழ்நெஞ்சம் போன்ற இன்னோரன்ன சஞ்சிகைகளிலும் மற்றும் பல இணையத்தளங்களிலும் புத்தகங்களிலும் இவரது கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

நவீன கவிதைகள், புதுக்கவிதை கள், மரபுக்கவிதைகள், போன்றனவும் கல்வி, மருத்துவம், சமயம், விழுமியம் சார்ந்த கட்டுரைகளும் இவரால் எழுதப் பட்டுள்ளன.

‘‘வாழ்வியலில் சில வர்ணங்கள்’’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிட்டுள்ளார். மிக விரைவில் கவிதை தொகுப்பு ஒன்றை வெளியிட தயார்செய்துக் கொண்டுள்ளார் என்பதை யும் அறிய முடிந்தது.

‘Motivational Speaker’ ஆக பல மேடைகளில் பேசியும் வருகிறார்.

கவிதை… முகநூல் குழும இணையத் தளங்கள் இவருள் மறைந்திருந்த ஆற்றலை வெளிப்படுத்த களம் தந்தன.

இதன் நிமித்தம் பல விருதுகளையும் பெற்றுள்ளார். 2015ஆம் ஆண்டு தடாகம் கலை இலக்கிய வட்ட பன்னாட்டு அமைப்பினால் நடாத்தப்பட்ட சர்வதேச கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று ‘கவித்தீபம்’ பட்டமும் இவரது கல்வி, கலை இலக்கியத் துறையை பாராட்டி ‘கல்விச்சுடர்’ என்ற விருதும் இதே தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் வழங்கப்பட்டது.

அத்துடன் LACSDO மீடியா நெட் வொர்க் ஸ்ரீலங்காவினால் ‘கலைத்தீபம்’ எனும் பட்டம் வழங்கப்பட்டது. 2016 இல் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாட்டில் இலக்கியப் பணியை கௌரவித்து விருது வழங்கப்பட்டது. அத்துடன் 2017இல் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தால் கலை இலக்கியத் துறைக்கு பங்காற்றியமைக்காக ‘‘கலைஞர் சுவதம் விருது’’ வழங்கப்பட்டது. மேலும் 2019 இல் இலக்கிய செயற்பாட்டிற்காக தமிழா ஊடக வலையமைப்பினால் ‘‘இலக்கிய முரசு’’ எனும் விருது வழங்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு ‘‘Best Service Award’’ எனும் விருது அம்பாறை மாவட்ட அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் மகளிர் தின நிகழ்வில் வழங்கப்பட்டது. இது அம்பாரை மாவட்டத்தில் உள்ள 7 முஸ்லிம் ஊர்களில் உள்ள 7 பெண்களுக்கு வழங்கப்பட்டது.

நிலாமுற்றம் முகநூல் குடும்பத் தினரால் நடத்தப்பட்ட கவிதை போட்டி யில் வெற்றி பெற்று ‘‘நிலா கவிஞர்’’ பட்டமும் விருதும் இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டது.

2022-ல் ‘செந்தமிழ் சுடர் கலைஞர் விருது’ இந்தியாவின் முத்தமிழ் கலைஞர் விருது வழங்கலில் வழங்கப்பட்டது. மீண்டும் 2022 ல் ‘‘சிந்தனை மாமணி’’ என்னும் விருது காமராஜரின் மாமணி விருது விழாவில் வழங்கப்பட்டது. அதே 2022-ல் தீர்த்தகிரியார் வீர விருது தேசத்தின் வீர விருது விழாவில் வழங்கப்பட்டது. அதேவேளை 2022-ல் ‘‘எழுதுகோல் ஆளுமை’’ விருதானது பேரறிஞர் அண்ணா வின் ஆளுமை விருது நிகழ்வில் வழங்கப் பட்டது. இறுதியாக 2022.09.17 இல் ‘‘எழுத்தொளி சக்ரா விருது’’ தேசத்தின் சக்ரா விருதுகள் 2022 நிகழ்வில் வழங்கப்பட்டது.

இவரது ஆர்வத்திற்கும் முன்னேற்றத் திற்கும் முதலாவதாக இவருடைய அன்புத் தந்தையும் அடுத்த தாக ஆருயிர்க் கணவரும் முக்கிய காரணமாக அமைந்தார்கள்.

இவரது கணவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரை யாளராக கடமையாற்றுகிறார். வாழ்வின் சுவையை மேலும் அதிகரிக்க சுட்டித் தனமான ஒரு ஆண்பிள்ளை.

குடும்பம் ஒரு கதம்பம் என்பது போல மனம் நிறைந்த வாழ்க்கை அமைந்ததை நினைத்து இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறார்.


1 Comment

Zaithoon nhar MunMun · செப்டம்பர் 30, 2022 at 17 h 59 min

தமிழ் மொழி பேசும் முஸ்லீம் எழுத்தாளர்கள் வட்டாரத்தில் பல சிறந்த எழுத்தாளர்களின் வருகை மிக்க மகிழ்ச்சியை தருகின்றது, எழுத்தாளர்களை வாழ்த்தி அவர்களது திறமைக்கு ஊக்கம் கொடுத்து வரவேற்க்கும் தமிழ்நெஞ்சம் சிறந்து விளங்குவதில் பெரும் சந்தோசத்தை தருகின்றது. நஸ்லீன் ரிப்கா அன்சார் அவர்களை மனமகிழ்ந்து வாழ்த்து தெரிவிக்கிறேன்; வாழ்க வளர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »