மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்பதற்கிணங்க, பெண்கள் தினத்தைப் போற்றும் வகையில்…
பாரதத் தாய் ஈன்றெடுத்த பைந்தமிழ் நாட்டின் சீர்மிகு கடலூர் மாவட்டத்தில் பகையில்லா உறவுகளும், புகையில்லா இயற்கை எழிலும் கொஞ்சி மகிழ்ந்திடும் கொழை சாவடிக்குப்பம் எனும் கிராமத்தில், சேற்றில் முளைத்த செந்தாமரையாய் ஏர் முனைப் பிடித்து விவசாயத்தை உயிரெனக் கொண்ட பிலிப்பு – பாப்பம்மாள் தம்பதியர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குறிஞ்சி மலராய் பிறந்த பி.ஆரோக்கிய செல்வி எனும் ஆசிரியை, கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றபேச்சாளர், இயற்கை ஆர்வலர், பெண் போராளி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட பெண் எனும் பேராற்றலை அறிமுகப்படுத்துவதில் தமிழ்நெஞ்சம் மகிழ்கிறது!
தமிழ் இலக்கிய தொடர்பால் கிடைக்கப் பெற்றவர் தான் இளந்தளிர் ஆரோக்கியசெல்வி. அதென்ன இளந்தளிர் என்று தானே நினைக்கிறீர்கள்? அதுப் பற்றி அவரிடம் கேட்டபோது, அவர் கூறிய பதில் நம்மை வியப்பில் ஆழ்த்தியது என்று கூறினால் அது மிகையாகாது.

‘‘இளந்தளிர் கடலூர்’’ என் கிற அமைப் பினை ஏற்படுத்தி அவ்வமைப்பின் செயலா ளராக செயல்பட்டு வருகிறார்.இவ்வமைப் பின் நோக்கமானது, பள்ளிகளில் மாண வர் களிடையே சுற்று சூழல் பாது காத்தல், இயற்கையைப் பேணுதல் போன்ற சிந்தனைகளை தூண்டக்கூடிய விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்து, மாணவர்களை பங்கேற்க செய்து அன்றைய நாளில் அப் பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நட்டு, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உதவிக் கொண்டு பாதுகாத்து வருகின்றனர்.

பல்வேறு அமைப்புகள் மரக்கன்றுகள் நடும் பணியினை மேற்கொண்டாலும் இவ்வமைப்பின் சிறப்பம்சம் என்னவென்றால், தேர்வு செய்யப்பட்ட பள்ளி கல்லூரிகளில் இயற்கையின் மீது ஆர்வம் கொண்ட மாணவர்களை தேர்வு செய்து ஒவ்வொரு மாணவ ரிடமும் மரக்கன்றுடன் ஒப்பந்த பத்திரம் ஒன்றும் வழங்கப் படுகிறது. அவ் ஒப்பந்தப் பத்திரத்தில் தங்களால் நடப்பட்ட மரக்கன்றுகளை முறையாக பரா மரித்து வளர்த்தெடுப்போம் என மாணவரும், 6 அடிக்கு மேல் வளர்த்து விட்ட பின் நேரில் வந்து பாராட்டி பரிசளிப்போம் என இளந்தளிர் அமைப்பினரும் கையொப்பமிட்டு வழங்கப் படுவதே அவ் ஒப்பந்த பத்திரம் என்பதை அறிந்து பாராட்டி மகிழ்ந்தோம்
இதுவரை இளந்தளிர் கடலூர் அமைப்பின் மூலம் 800க்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் 12 பள்ளிகளிலும், 2 கல்லூரிகளிலும் முறையாக பராமரிக்கப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் எண்ணம் எப்படி வந்தது என்று நாம் கேட்டபோது, மாணவர்கள் தான் எதிர்காலத்தை உருவாக்கக் கூடிய மாபெரும் சக்தி. அவர்களுடைய உள்ளத்தில் எதிர்கால சந்ததிகளுக்கான நல்லக் காற்றையும், சுத்தமான நீரையும் பெற்று ஆரோக்கியமான உடல் சுகத்துடன் வாழ மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்கிற சிந்தனையை மாணவர்களின் மனதில் வித்தாக்கினால், அவர்கள் அதை விருட்சமாக்கி நாட்டிற்கும் வீட்டிற்கும் நலம் பயப்பார்கள் என்கிறார் ஆசிரியை ஆரோக்கியசெல்வி.
அவர் தம் சொந்த வாழ்க்கைப் பற்றி கூறுகையில், விவசாயக் குடும்பம் பிலிப்பு பாப்பம்மாள் தம்பதியருக்கு மகளாய் பிறந்து தான் இந்த அளவிற்கு வாழ்க்கையில் பன்முகமாய் சிறந்திட காரணமாய் தன் தாய் தந்தையரின் வளர்ப்பு அதன் பிறகு கணவர் ஜான் பீட்டர் மற்றும் ஷெர்லி ப்ரீத்தா, ஹெலன் ஜென்சி என்னும் இரண்டு மகள்களும் தன் முன்னேற்றத்திற்கு பக்க பலமாய் உறுதுணை செய்கிறார்கள் என்கிறார் ஆசிரியை.

இப்படியாக தன் குடும்பத்திலும் சமூகத்தி லும் அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் விளங்கும் ஆசிரியை ஆரோக்கியசெல்வி பெண் குழந்தைகள் நலன், பெண்களின் முன்னேற்றம் குறித்து தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், பெண்களுக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தக் கூடிய வகையில் மேடைக் கூட்டங் களில் சொற்பொழிவாற்றுதல் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், பெற்றோர்களால் புறக்கணிக்கப்ப்பட்ட குழந்தை களைத் தேடிச் சென்று இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.
அது மட்டுமல்லாது நாட்டுப் பற்றினை வளர்க்கக் கூடிய வகையிலும், சமுதாய சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் வகையிலும் கவிதைகள், கதைகள் எழுது வது, மாணவர்களிடையே போட்டி கள் |நடத்தி பரிசுகள் வழங்குவது என பல் வேறு பணிகளை செய்து வருகிறார். நமது நாட்டில் கொண்டாடப்படும். கலாச் சாரங்களை வெளிப்படுத்தக் கூடிய வகை யிலான நிகழ்ச்சிகளை தொகுத்து தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கு கொடுத்தல் போன்ற வற்றையும் செய்து வருகிறார்.


எல்லாவற்றிற்கும் மேலாக கொரோனா பேரிடரில் இளந்தளிர் கடலூர் அமைப்பின் மூலம் பல்வேறு உதவிகளை பல தரப்பட்ட மக்களுக்கு செய்துள்ளார் என்பதை அறிந்து பெருமிதம் அடைந்தோம்.

இவ்வாறாக கல்விப் பணி, சமூகப் பணி, இலக்கிய பணியென சோர்வறியாது உலகில் சுழன்று வந்துக் கொண்டிருக்கும் ஆசிரியை ஆரோக்கிய செல்வி அருட்கலை மாமணி, தொண்டறச் செம்மல், பாரதி விருது, கவிச் சிகரம், கவித்தென்றல், இலக்கிய கவிச் செம்மல், இலக்கிய செல்வர், நட்சத்திர விருது, நட்சத்திர கவிப் பெருமகள், Best Motivator award, சமூகச்சேவகி செம்மல் விருது, ஆசிரியச் செம்மல் விருது, பாட்டுடைத் தலைவன் பாரதி விருது, அன்னை தெரசா விருது, அருமை ஆசான் விருது மற்றும் கொரோனாப் பேரிடரில் செய்திட்ட பணிகளை பல்வேறு நாடுகளிலினின்று 100க்கும் மேற்பட்ட சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்,

இத்தனை செயல்பாடுகளை சாந்த மாகவும் அமைதியாகவும் செய்து வருகின்ற நமது பன்முக பண்பாளர் ஆரோக்கிய செல்வி, பெண்கள் தினத்தைப் பற்றிய செய்தியாக, பெண்கள் தான் இப்பிரபஞ்சத்தின் உயிர் நாடி. பெண்களால் அனைத்தையும் சாதிக்க முடியும். பெண்கள் தினத்தன்று மட்டுமன்றி தினம் தினம் போற்றப்பட வேண்டியவர்கள் பெண்கள் என்கிறார்.

கடலூர் கிருஷ்ணசாமி கல்லூரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது .

அடுத்து தன்னுடைய எதிர்கால கனவுகள் பற்றி கூறுகையில் தன் பெற்றோர்கள் பிலிப்பு, பாப்பம்மாள் நினைவாக ஆதரவற்றோர் இல்லம் மற்றும் அறக்கட்டளை ஒன்றை நிறுவி ஆதரவற்ற பெற்றோர்களுக்கு உதவ வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் மரக்கன்றுகள் நட்டு பசுமைப் புரட்சியினை ஏற்படுத்த வேண்டும் என தன் லட்சியக் கனவுகளை அடுக்கிக் கொண்டே சென்ற நமது ஆசிரியை ஆரோக்கிய செல்வியினை பணி சிறக்க வாழ்த்தி விடைப் பெற்றோம்.

நல்லாசிரியை பி.ஆரோக்கிய செல்வி மென்மேலும் பல நற்பணிகள் செய்துச் சிறந்திட தமிழ்நெஞ்சம் வாழ்த்தி மகிழ்கிறது.

– தமிழமின்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

தமிழ்த்தொண்டாற்றும் மருத்துவச் செம்மல்

பொறியியலில் சேர்ந்த முதல்மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவப்படிப்பு பயில இடம்கிடைத்தவுடன் அதனைக் கைவிட்டுவிட்டு மருத்துவப் படிப்பைக் கற்று சிறந்த மருத்துவர்களாக வலம் வருவதை நாம் காணலாம். அப்படிப்பட்ட மருத்துவரே இன்று நமக்கு நேர்காணல் வழங்க உள்ளார். ஆம் சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு எதிரில் உள்ள மேடவாக்கம் கல்பனா பல் நோக்கு மருத்துவமனையின் நிறுவனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . வாழ்நாள் சாதனையாளர் உட்பட பலவிருதுகளைப் பெற்றவர். தமிழ்க் கவிதைகளை சிறுவயது முதற்கொண்டு எழுதி வருபவர். முனைவர் கவிக்கோ ஜெயக்குமார் பலராமன்

நேர்காணல்

முகநூல்குழுமங்களின் முன்னோடி

மின்னிதழ் / நேர்காணல்  முத்துப்பேட்டை மாறன்

முகநூல் ஓர் இருபுறக் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதனைப் பயன்படுத்துவதைப் பொறுத்தே பலனையும் கெடுதலையும் தரும். முகநூலைத் தமிழ்வளர்க்கும் கருவியாகச் செய்யமுடியும் என்பதை ஒருவர் சாதித்துக் காட்டியுள்ளார் என்றால் நம்பமுடிகிறதா?

 » Read more about: முகநூல்குழுமங்களின் முன்னோடி  »

அறிமுகம்

நஸ்லின் ரிப்கா அன்சார்

கவிஞரும் வரலாற்றாய்வாளரும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியருமான தந்தையின் அன்பில் வளர்க்கப்பட்ட நஸ்ரின் றிப்கா அன்சார் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வடக்கே கல்முனை என்னும் ஊராலும் கிழக்கே கடலாலும் மேற்கே வயலாலும் தெற்கே காரைதீவு எனும் ஊராலும் சூழப்பட்ட சாய்ந்தமருது இலங்கை எனும் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.