சத்தமில்லாச் சந்தங்கள்
சொல்லத் தேனூரும்
செல்லத் தமிழ் வாரி
மெல்லத் தெளிப்போம் – நாம்
அள்ளி உலகிற்கே..!
சீரெழில் மொழியோர்க்கு
ஜெயலட்சுமியின் செந்தமிழ் வணக்கங்கள்
இளங்கலை வரலாறு முடித்துவிட்டு குடும்ப நலன்களை கவனித்துவரும் சராசரி பெண்க நான். மனிதப் புழக்கம் அதிகமில்லா தனிமையில் என்னுடைய வாழ்வு கழிகிறது. துணையாக கைகோர்க்க தமிழையே தேர்வு செய்தேன் .
அழகுத் தமிழின் கரம் பிடித்தலென்பது அளவிற்கறிய இன்பம் தானே நானும் மெதுவாய் நடைபயிலக் கற்றுக் கொண்டிருக்கிறேன் எனது எண்ணங்கள் யாவையும் தமிழ் கொண்டு மொழி பெயர்த்தவைகளே இவைகள். எழுதி முடித்த காகிதங்கள். எண்ணத்தில் இருந்து இன்னும் இறக்கி வைக்காதவைகளென இன்னும் ஏராளம். தமிழின் ஊற்றெடுத்து தரணியில் உலவ விடுவதே தனிப்பெரும் ஆசை. யாவிலும் கவி தேடிக் கற்கும் மனக்குவியலை காகிதங்களில் மணம் வீசச் செய்வதைத் தவிர ஆசையென வேறில்லை.
இப்படியான சூழலில் ஒவ்வொரு நாளும் உதிக்கும் சிந்தனைகளைச் சேர்த்து சிலரறிய மட்டுமேயான அதாவது முகமறியா நண்பர்கள் மட்டுமறிய உலவவிட முகநூலைத் தேர்வு செய்தேன் பதிவிடவும் செய்தேன்.
நாளொன்றிற்கு என தினமொரு கவிதையை ஓராண்டு காலமாக பதிவிட்ட வேளையில் எண்ணப் பரல்களை இதழில் வெளியிட்டு என் இதயத்தை வென்றது தமிழ்நெஞ்சம்.. அதோடு நம்பிக்கையையும் வளர்த்து சிறகு பொருத்தி என்னை மேன் மேலும் கவிதை வானில் சிறகடிக்க எத்தனிக்கச் செய்ததோடு புத்தகமாகவும் வெளியிட ஆலோசனையோடு நின்றுவிடாமல் சிலவற்றை ஒன்று திரட்டி செய்தும் காட்டினார் தமிழ்நெஞ்சம் இதழாசிரியர்.
‘‘உவகை தெளிக்க
உள்ளம் களிப்புற்று
என் மனப் பாத்திரத்தில்
மறையாத அன்பை
நிறைத்தார்’’
மதிப்பிற்குறிய தமிழ்நெஞ்சம் இதழாசிரியர் அமின் அவர்கள்.
என்னைப் போன்ற வளரும் இளைய கவிகளுக்கு ஆகச் சிறந்த ஊக்கமாக திகழும் தமிழ்நெஞ்சம் இதழாசிரியர்
மதிப்பிற்குறிய ஐயா அவர்களுக்கும் தமிழ்நெஞ்சம் ஆசிரியர்குழுவினருக்கும் என் இதயம் திறந்து என்றைக்கும் நன்றியுரைப்பேன் மேலும், முக்கியமாக எனது வளர்ச்சியில் அக்கரைகாட்டி மகிழும் குடும்பத்தினர் யாவருக்கும் நன்றியை தெரித்து மகிழ்கிறேன்.
காதல் என்று சொன்னதும் எத்தனை அழகாய் மனதைத் தொட்டு இசைத்துவிட்டுப் போகிறது அந்த வார்த்தை ஏனெனில் அது வெறும் வார்த்தையல்லவே கடந்திருக்கும் அல்லது நிழந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் சாரம்.
ஒரு மெல்லிய இசைக்கீற்று மௌனமாக ஒளிக்கத் தொடங்கிவிடும் இந்தக் காதலில் எனவேதான் காதலைப் பாடாத கவிஞனில்லை காதலைப் பாடாதவன் கவிஞனை இல்லை எனவும் சில வேளைகளில் சொல்வதுண்டு
ஆம்..! காதல் அத்தகையது ஆகையால்தான் எத்தனையோ இருந்தும் மொத்தமாகத் தொகுத்து காதலையே கவிதையாக வழங்குவதில் மிகுந்த காதல் கொண்டிருந்தேன்.
இளஞ்சூடா..? குளிரா..? என்று வரையறுத்துச் சொல்ல முடியாத மழையின் துளிகளைப் போன்று அழகியல் காதல்.
ஒரு பூவின் இதழைப் போன்று மிகவும் மெல்லியது இந்தக் காதல். அதன் வாசம் நுகர்தலைப் போன்று சுகமான உணர்வு இந்தக் காதல் இன்னும் சொல்ல வேண்டுமேயானால் காதலைப் போல உலகில் சிறந்தது ஏதுமில்லை என்பேன் மழையின் தூறலைப் போல் தூய்மையானது அது இந்தச் சமூகம் கற்பிக்கும் பேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது.
வணங்களை வாரிப் பூசிக்கொண்டு அந்த வான வில்லைப் போல ரம்யமாகி ரசிக்க வைக்கும் வாழ்க்கையை மழை நின்ற பின் லேசாய் வருடும் தென்றலைப் போல வந்து இதமாக்கும் இந்தக் காதல்.
கண நேரத்தில் இந்த உலகை தூர வீசி விட்டு நினைவுகளாக இறக்கை முளைத்திருக்கும்
இரவுகளின் மேல் விண்மீன்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதன் முதலில் நிலவை ரசிக்க வைப்பதும் நினைவில் சிரிக்க வைப்பதும் இந்தக் காதல் தான்.
மண்ணில் வாசணையும் மழையில் சங்கீதமும் கூட இந்தக் காதலில் மட்டுமே சாத்தியம்.
சில நொடி அவள் கடந்துபோன தெருவில் விழாக்கோலம் கண்டுவிடும் கை கட்டி இரசிப்பதும் கண் சிமிட்டி மறைப்பதும் இந்தக் காதலில் தான்
உணர்வுகளோடு பேசம் உயிர் இல்லாமலும் வாழும் அதனால் தான் இன்னும் அதிசயத்துக் கொண்டிருக்கிறோம் தாஜ்மாஹாலை.
எத்தனையெத்தனை சொல்லி முடிக்கவேயில்லை முழதாக யாரும் அவ்வப்போது வந்து அள்ளிக் கொடுத்துப் போகும் வெகு சிலரில் நானும் ஒருத்தியாய் காதலை கவிதைகளால் இந்த அழகான காதலர் தினத்தில் காதலர்க்கே அற்பணிக்கிறேன்
மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் இன்பத் தமிழ் வணக்கம் சொல்லி நிறைவு செய்கிறேன். நன்றி..!
அன்பு வாசகர்களே… என் கன்னி முயற்ச்சியின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டத் தயங்காதீர்்கள். அடுத்த என் முயற்ச்சிகளுக்கு அவைகள் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உங்களையும் வணங்குகிறேன்.
நன்றி
உங்கள்
ச. ஜெயலட்சுமி
ஒலி கருவி
2 Comments
செல்வம் பெரியசாமி · பிப்ரவரி 17, 2021 at 8 h 27 min
நிகழ்ச்சி அருமை
கவிஞரே
பதவிட்ட தமிழ் நெஞ்சம் இதழாசிரியர்
அவர்களுக்கு நன்றிகள்.
Kalaivani sureshbabu · மார்ச் 2, 2021 at 4 h 41 min
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி மிக்க மகிழ்ச்சி தங்களைப் பற்றிய அறிமுக கட்டுரை மிக அருமை
உங்களுடைய கன்னி முயற்சி வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்