குடும்பம்

சிறுவர்கள் உலகம்

சிறுவர்கள் உலகம் புது உலகம் – பெரும்
சாதனை படைக்கும் தனி உலகம்
வறுமையின் துயரம் உடன் விலகும் – புது
வசந்தங்கள் தந்தே பூ மலரும்!

இது மழலைகள் பருவம்
சின்ன நிலவுகள் உருவம் – என்றும்
பாழ் நிலவாய்ப் பாரில் தாவி ஒளி கொடுப்போமே…

 » Read more about: சிறுவர்கள் உலகம்  »

புதுக் கவிதை

ரோஹிங்காஒரு கண்ணீர்க் காவியம்

 

கண் வலிக்கும் ரோஹிங்காவின் காட்சி பல கண்டு
கவி வரைந்தேன் என் மனதில் ஆற்றாமை கொண்டு
புண் முளைக்கும் இதயத்தில் மக்கள் துயர் எண்ணி
புகலிடத் திலும் பருக இல்லைத் துளித் தண்ணி
விண் முழக்கம் போல் விழுதே வெடியெறி குண்டு
விலை மதிக்க முடியாத உயிர் பல கொன்று
மண்ணறைக்குள் புதைக்கவில்லை தீயினிலே இட்டு
மனித ரத்தம் குடிக்கின்றார் மக்களினைச் சுட்டு!

 » Read more about: ரோஹிங்காஒரு கண்ணீர்க் காவியம்  »

புதுக் கவிதை

கருகி மியன்மார் நாறட்டும்

கடும் போக்கான கயவர்கள் எல்லாம்
கருகி மியன்மார் நாறட்டும்

பால் மணம் மாறாப்
பாலகிப் பூவே !
பர்மா அழிவது நிச்சயண்டா
பாவிகள் ஆணவம்
பாரில் நிலைக்கா
படைத்தவன் மேலே சத்தியண்டா!

 » Read more about: கருகி மியன்மார் நாறட்டும்  »

புதுக் கவிதை

மரபும் மாற்றமும்

ஆவி யுடற் கரண மனைத்து மொன்றாகித்
தாவித் தமிழோடுத் தவிழ்ந்திருப்பேன் – பூவுலகில்
மாற்றக் காட்டாறு மையற்றாங் கொண்டாலுஞ்
சாற்றும் மரபுக்குண்டோ சா?

வாழையடி வாழை நின்று
வண்ணத் தமிழாடை கொண்டு
வையமுள்ள வரைக்கும் வரும் மரபு – சட்ட
வரம்புகளை மீறிவிட்டா லிழிவு.

 » Read more about: மரபும் மாற்றமும்  »

அறிமுகம்

வலைக்குள் மலர்ந்த வனப்பு

பாலமுனை பாறுக் சேர் அற்புதமான, அருமையான மனிதர். கவிதைத்துறையைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு கடல். நூலின் மீதான சிறு குறிபொன்றை கவிதை வடிவில் இங்கு வரைகிறேன் .இந்த முயற்சி மஹாகவி உருத்திர மூர்த்தி ,குறிஞ்சித் தென்னவன்,

 » Read more about: வலைக்குள் மலர்ந்த வனப்பு  »

மரபுக் கவிதை

கண்ணீரின் கதை கேட்க வந்தாயா?

கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? – காதல்
கடலுக்குள் விழுந்தேனே அறிவாயா?
பெண்ணாக பிறந்தது பெரும் பாவமா? – பேதை
பிணமாகி போனேனே உன் சாபமா?

தவம் இருந்தே பசிதான் மறந்தேனே –

 » Read more about: கண்ணீரின் கதை கேட்க வந்தாயா?  »

மரபுக் கவிதை

தமிழில் உறைந்து போதல்

பித்தனாய் ஆனேன் பூந்தமிழே – நெறி
பிறழாத கவிதைதா பொற்சிமிழே -– உன்னில்
மொத்தமாய் ஆவி உடல்
மோகனமாய்த் தந்த பின்னே
படித்தேன் – கவி – வடித்தேன்

நற்றிணையில் தமிழ் மணக்கும் பாராய் – காதல்
நர்த்தனங்கள் நிலை கொள்ளும் வேராய் – கை
பெற்றணையா தீபமென
பேரொளியைச் சிந்துகின்ற
நூலைப் – படி – காலை

திருக்குறளின் ஞானப்பால் குடித்தேன் – ஒரு
தினந் தவறா அதிகாரம் முடித்தேன் – முகில்
கருக்காக ஆன மனம்
கதிரவனாய் ஆகித்தினங்
கோர்க்கும் – ஒளி –

 » Read more about: தமிழில் உறைந்து போதல்  »

மரபுக் கவிதை

வாசிப்பே அறிவுக்கு வலுவூட்டும்

வாசிப்பே அறிவுக்கு வலுவூட்டும் – எங்கள்
வாழ் நாளைச் சிறப்பாக்கிப் பலமூட்டும்
தேசத்தின் பேரோங்க வழி காட்டும் – நிதம்
தெவிட்டாத தெள்ளமுதாய்ச் சுவை மீட்டும்
நேசிப்பே உள்ளத்தை நேராக்கும் – நூல்
நெடுங்காலப் பேதமையைச் சீராக்கும்
போசிக்கும் வாண்மையிலே ஆளாக்கும் – எம்
பொடுபோக்குக் கயமைகளைத் தூளாக்கும்

கருவறைக்குட் தங்குகின்ற காலந்தொட்டே – தாய்க்
கட்டாயம் நன்னூற்கள் கற்றல் வேண்டும்
பெருமளவி லறிவுடைமைப் பெருக்கெடுக்க – எம்
பெற்றோர்கள் வாசிப்பில் நிற்றல் வேண்டும்
குரு குலத்துக் கல்வி முறைத் தோற்றந் தன்னில் – முதற்
குரு நாதர் கரு தாங்குந் தாயே யன்றோ !

 » Read more about: வாசிப்பே அறிவுக்கு வலுவூட்டும்  »