கடும் போக்கான கயவர்கள் எல்லாம்
கருகி மியன்மார் நாறட்டும்

பால் மணம் மாறாப்
பாலகிப் பூவே !
பர்மா அழிவது நிச்சயண்டா
பாவிகள் ஆணவம்
பாரில் நிலைக்கா
படைத்தவன் மேலே சத்தியண்டா!

கால் கை இல்லா
முண்டங்களாக
காற்றுப்போன உடலங்கள்
கண்ணீர்ப் பெருகிக்
குருதியிற் கலந்து
கடல்கள் சுமக்குஞ் சடலங்கள்

தோல்கள் வெள்ளை
என்பதினாலோ
சூசிக்கு நோபல் விருது
தொட்டில் குழந்தை
செய்ததா பாவம்?
தோஷமே நெஞ்சிற் கருது

வால் பிடிப்போர்க்கே
வசதிகள் செய்யும்
ஐநா உனக்குக் குருடா?
வஞ்சச் செயலைக்
கண்டிக்காத
மனதில் படிந்தது துருடா!

நீரில் தாமரை
மலரும் காட்சி
நினைவில் கொண்டேன் சுகண்டா
நீலோற் பலத்தை
மிதக்கக் கண்டேன்
நெருப்பாய் எரிந்தது அகண்டா

மியன்மார் அழிந்து
போகும் விரைவில்
மிதற்கும் ரத்தம் சாட்சியடா
மிருகத்தனமாய்
வதைகள் செய்யும்
மிருகப் பெட்டை ஆட்சியடா

அயல் நாடுகளின்
கண்களுக்குள்ளே
அந்தகம் பிடித்துப் போனதடா
ஐநாவுக்குக்
கண்கள் கெட்டு
அட்டுக் குடித்துக் கோணுதடா

பயமா? வேண்டாம்
பர்மா அழியும்
படிப்பினை சொல்லும் வரலாறு
பால் நிலவொன்று
படுக்கையில் இன்று
பார்த்திடப் பொங்கும் பேராறு

நயனம் மூடி
இருந்தால் என்ன
நானிலம் உன்னைப் பார்க்கிறது
நாடித் துடிப்பு
நின்றதை எண்ணி
இதயம் வலியைக் கோர்க்கிறது

கூர் விழி மூடி
இதழ்கள் விரிந்த
குழந்தை மலரோ பாவம்
கொடுங்கோல் செய்யும்
ஆங்சான் சூசிக்
கொள்கையிலே அகம்பாவம்

பாரில் கொடூரம்
நடக்கும் போது
படைத்தவன் தானே காப்பு
பர்மா உன்னை
எரிக்கும் வகையில்
பரமன் வைப்பான் ஆப்பு

வேருடன் அழிந்து
போகும் காலம்
விரைந்து வருமே சூசி
விதைக்கும் விருந்தை
நெருப்பாய் அருந்த
எரிந்து தந்தேன் ஆசி

கருப்பை சுமந்த
பெண்ணாய் இருந்தால்
கவலை உனக்கு வந்திருக்கும்
கண்ணீர்க் கடலில்
மிதக்கும் பூவைக்
கண்டால் இதயம் நொந்திருக்கும்

துருவைச் சுமந்த
துவேசி உனக்கு
துயரக் கோடு தெரியாதே
துளிராப் பிஞ்சின்
தூக்கம் கொடுக்கும்
துன்பக் கண்ணீர் புரியாதே

விருப்பும் வெறுப்பும்
விலக்கிட வேண்டும்
விதி முறை அறியா மோடையரே!
விலங்கா? செங்கோல்
விளங்கா மிருகம்
விபரம் தெரியாக் காடையரே!

உருப்படியான
முறையில் அங்கே
உரிமைக் காற்றுக் கிடைக்கிறதா ?
உதவும் வகையில்
கைகள் கொடுக்க
உங்கள் நெஞ்சம் துடிக்கிறதா?

தொடர் கரு வறுக்கும்
துஷ்டரை ஒழிக்க
தோட்டாப் போலும் ஒன்றாக
தொழுகையில் நிதமும்
கரங்களை ஏந்தி
துஆக்கள் கேட்போம் நன்றாக

இடர் மலை சுமக்கும்
இரத்தம் கொதிக்கும்
இதயம் நொந்த எம்முறவே
இது கவியல்ல
இடியுடன் மின்னல்
எனக்குள் உறக்கம் இலை அறவே

படர் துயர் தாங்கும்
பர்மா இனமே
பாவிகள் செய்தது சுத்திகரிப்பு
பன்மைத் துவத்தை
மதிக்கா நாட்டில்
பாய்ந்து பிடிக்கும் எரிநெருப்பு

கடலெனத் திரண்ட
கவலைகள் எல்லாம்
சுனாமி அலையாய் மாறட்டும்
கடும் போக்கான
கயவர்கள் எல்லாம்
கருகி மியன்மார் நாறட்டும்


1 Comment

பெண்ணியம் செல்வக்குமாரி · செப்டம்பர் 18, 2017 at 17 h 46 min

நெஞ்சை சிதைக்கும் கவிதை கருகி மியான்மார் நாறட்டும். உண்மையில் சிறுபான்மை முசுலீம்கள் படும் துயரம் அளவிடற்கரியது. சொல்லிமாளாதது. நாம் என்ன செய்ய போகிறோம்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்