போலியான மனிதர்களோடு
வாழ்ந்து பழக்கப்பட்டதனால்
உண்மையானவர்கள் யாரென்று கூட
உன்னால் இனங்காண
முடியாமலே போய் விடுகிறது
நீ யாருக்காக அழுது தவித்திருந்தாயோ
யாருக்காக பகலிரவாய் போராடினாயோ
அவர்கள் இன்னுமொரு உறவுக்காக
உன்னை தனிமையில் தள்ளி விட்டார்கள்
எப்போதைக்கும்
உனக்கே உனக்கானவர்கள் என்று
நீ கொண்டாடித் தீர்த்த உறவுகள்தான்
உன்னை முதுகுக்குப் பின்னால்
இருந்து தள்ளி விட்டவர்கள்
உன் இன்ப துன்பங்களில் பங்கெடுக்க
அவர்கள் முயற்சிக்காத தருணங்களில்தான்
பரிமாறிக் கொண்டிருந்தாய்
உன் வலிகளுக்கு ஆறுதலாகவும்
உன் காயங்களுக்கு மருந்தாகவும்
இருப்பார்கள் என்று
நீ நம்பியிருந்தவர்கள்தான்
எப்போதைக்குமான நிரந்தர வலிகளையும்
காயங்களையும் உனக்கு மிகப் பெரும்
அன்பளிப்பாக தந்து விட்டுச் சென்றிருக்கின்றார்கள்
எங்கோ போய் அவர்கள் எப்படி
எப்படியோ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிருக்கிறார்கள்
ஆனால் நீ மட்டும் ஆண்டுகள் பல கடந்தாலும்
அவர்கள் நினைவாகவே
உருகிக் கொண்டிருக்கின்றாய்
என்றாவது தன்னிடமே திரும்பி
வந்து விட மாட்டார்களா என்று
தவித்துக் கொண்டிருக்கின்றாய்
உண்மையில் இப்படியான நபர்கள்
மீண்டும் அதே கதவால் நம்மிடம்
திரும்பி வர மாட்டார்கள்
மாறாக இன்னுமொரு கதவைத் தான்
அவர்கள் தட்டிக் கொண்டிருப்பார்கள்
– ஏரூர் நிலாத்தோழி
(பாத்திமா அஸ்க்கியா முபாறக்