காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல். காதல் அனுபவம் எல்லா மனிதருக்குள்ளும் இருக்கும். இதனைக் கடக்காதவர் எவரும் இருக்க முடியாது. காதல் யார்மீது வேண்டுமானாலும் வரலாம்; எதன் மீது வேண்டுமானாலும் வரலாம். ஆசைப்பட்ட பொருள் அல்லது ஆசைப்பட்ட மனிதர் தன் வாழ்க்கையில் கிடைத்துவிட்டால் அதைவிடப் பெரிய இன்பம் இவ்வுலகில் எதுவும் இருக்காது.

காதலும் வீரமும்

காதல் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தது. தமிழரின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்த ஒன்று இக் காதல். காதலும் வீரமும் தமிழரின் இரண்டு கண்கள் என்பதுண்டு. சங்ககாலப் பாடல்களிலும் அகநானூறு புறநானூறு என்று காதலையும் வீரத்தையும் பாடியவர்கள் நமது முன்னோர். குறைந்த அடிகளைக் கொண்டு காதல் கருத்துகளை காதல் நிகழ்வுகளை, குறுந்தொகையாக்கி மகிழ்ந்தவர்கள் தமிழரே நமது இரத்தத்திலேயே கலந்த காதல் உணர்வு இப்போது மட்டும் இல்லாமலா போகும்? இன்றைய இலக்கியங்கள், பாடல்கள், கவிதைகள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் அனைத்திலும் முக்கியப் பங்காற்றுவது காதல் என்றால் அது மிகையாகாது.

காதலும் கவிஞர்களும்

யாருக்கெல்லாம் காதல் கவிதை எழுதத்தெரியும்? ஒரு நாலுவரி மட்டும் எழுதுங்கள் பார்க்கலாம்என்ற ஒற்றை அறிவிப்புக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் வரத்தொடங்கிவிட்டன. பார்வையிட்டு மாளமுடியாமல் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டனர் கவியுலக நண்பர்கள்.

100 கவிஞர்களின் கவி வரிகளை மட்டும் நூலாகத் தந்திருக்கிறோம். படித்து கருத்துகளைப் பகிரவும். நன்றி

கீழுள்ள படத்தில் டச் அல்லது கிளிக் செய்து நூலினை தரவிறக்கம் செய்யலாம்.