கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? – காதல்
கடலுக்குள் விழுந்தேனே அறிவாயா?
பெண்ணாக பிறந்தது பெரும் பாவமா? – பேதை
பிணமாகி போனேனே உன் சாபமா?
தவம் இருந்தே பசிதான் மறந்தேனே – உயிர்
தாய் என்னை ஈன்றதை மறந்தேனே
தன்னலம் பாரா தாய்மையின் ஈரம்
காய்வதற்குள் உன்னிடம் என்னை இழந்தேனே!
சுய நலப் பாவி நான்தானே – இன்னும்
சுழன்றது ஆவி வீண்தானே
கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? – காதல்
கடலுக்குள் விழுந்தேனே அறிவாயா?
பெண்ணாக பிறந்தது பெரும் பாவமா? – பேதை
பிணமாகி போனேனே உன் சாபமா?
குணம் அறியாமல் குலம் தெரியாமல் – உனைக்
கண்டதும் மின்னல் காதல் கொண்டேன்
மனம் புரியாமல் தினம் விளையாடும்
மனித குணமே உனக்கில்லை
அதற்குள் என்னை மறந்தேனே!
வாழ்க்கையில் பாதி துயர் தானோ – இனி
வேகட்டும் மீதி உயிர் உயிர் ஏனோ ?
கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? – காதல்
கடலுக்குள் விழுந்தேனே அறிவாயா?
பெண்ணாக பிறந்தது பெரும் பாவமா? – பேதை
பிணமாகி போனேனே உன் சாபமா?