மரபுக் கவிதை
தம்பி… 9
வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.