தொடர் எண் 9
தலைப்பு : உழைப்பு.
பாடுபட்டு உழைத்தால்தான் பணத்தையும் ஈட்டிடலாம்
வீடுகட்டி வாழ்ந்திடலாம் விளைநிலங்கள் வாங்கிடலாம்
தேடுகின்ற வேலையினைத் திறமையினால் பெறவேண்டும்
வாடுகின்ற நிலையினையும் வாராமல் தடுத்திடலாம்.
கிடைக்கின்ற வேலையினைக் கீழ்ப்படிந்துச் செய்திடுவாய்
இடைவெளியும் வேண்டாமே இயங்கிடுவாய் தேனியாக
உடையினையும் தூய்மையாக உடுத்திடுவாய் மடிப்புடனே
மடைதிறந்த வெள்ளமாக மாண்புடனே பேசிடுவாய்.
பேசிடுவாய் இன்சொற்கள் பெரியோர்க்குக் கீழ்ப்படிந்து
நேசிப்பாய் தொழிலினையும் நேர்மையாக நடந்திடுவாய்
வாசிப்பாய் நாள்தோறும் வாழ்வியலாம் குறளினையும்
காசில்லா நிலையொன்றைக் காணாமல் வாழ்வாயே.
வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள்
தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால்
ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே
வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.
எழுவாயே ஏறுபோல இலக்கினையும் அடைந்திடவே
ஒழுக்கமுடன் வாழ்ந்திடுவாய் உன்னதமாய் உயர்ந்திடவே
செழுமையுடன் நிலைப்பதற்கு சிக்கனமாய் செலவிடுவாய்.
புழுதியல்ல உன்வாழ்க்கைப் புரட்சியுடன் புதுமைசெய்வாய்.
முன்னே செல்ல …. தொடரும்