தொடர் எண் 7.
தலைப்பு : இன்சொல்.
ஊக்கமுடன் வாழ்ந்திடவே உற்றோரும் வாழ்த்திடவே
நீக்கமற எந்நாளும் இன்சொற்கள் பேசிடுவாய்
தாக்கிடுவார் வன்சொற்கள் தாங்கிக்கொள் நற்பண்பால்
வாக்கினிலே மாறாமல் வாழ்ந்திடத்தான் கற்பாயே.
கற்பாயே நல்நூல்கள் காப்பாயே பண்பாட்டைப்
பற்றிடுவாய் சான்றோர்சொல் பாசத்தில் நல்லுறவாய்.
வற்றாத கல்வியினை வாழ்நாளில் பெற்றால்தான்
சொற்சுவையில் வல்லோனாய் சொல்லாட்சிச் செய்திடலாம்.
செய்யென்றால் நற்செயல்கள் செய்கின்ற நல்தம்பி
பொய்யில்லை உன்னிடத்தில் போற்றுகின்ற நல்லோர்கள்
தொய்வில்லா உன்செயல்கள் தோல்வியினைக் காணவேண்டாம்
பெய்கின்ற நல்மழைபோல் பேசுவாயே இன்சொல்லே.
சொல்லினிலே நம்தமிழ்போல் சொல்லில்லை என்றுணர்வாய்
இல்லாத சொல்லில்லை இன்தமிழ்போல் யாப்பில்லை
சொல்லொன்றே காலத்தை சுட்டுவதைச் சொல்வாயே.
எல்லோரும் நன்குணர இன்றேதான் நல்வாய்ப்பே.
நல்வாய்ப்பை ஏற்காமல் நானென்ன செய்திடுவேன்
எல்லோரும் பார்த்திடுவார் என்றெண்ணித் தூங்கிடாதே
சொல்வதையும் கேட்பாயே சோறுமட்டும் வாழ்வல்ல
வெல்லட்டும் உன்முயற்சி வேங்கையென நிற்பாயே.
1 Comment
dapoxetine customer reviews · மார்ச் 20, 2025 at 3 h 53 min
Multiple conditions can cause HF, including systemic diseases, a wide range of cardiac conditions, and some hereditary defects where can i buy priligy in usa Item Code MO001 Production Capacity 100kg Delivery Time 7 days Packaging Details drum pack