தம்பி… 7

தொடர் எண் 7. தலைப்பு : இன்சொல். ஊக்கமுடன் வாழ்ந்திடவே உற்றோரும் வாழ்த்திடவே நீக்கமற எந்நாளும் இன்சொற்கள் பேசிடுவாய் தாக்கிடுவார் வன்சொற்கள் தாங்கிக்கொள் நற்பண்பால் வாக்கினிலே மாறாமல் வாழ்ந்திடத்தான் கற்பாயே. கற்பாயே நல்நூல்கள் காப்பாயே பண்பாட்டைப் பற்றிடுவாய் சான்றோர்சொல் பாசத்தில் நல்லுறவாய். வற்றாத கல்வியினை வாழ்நாளில் பெற்றால்தான் சொற்சுவையில் வல்லோனாய் சொல்லாட்சிச் செய்திடலாம். செய்யென்றால் நற்செயல்கள் செய்கின்ற நல்தம்பி பொய்யில்லை உன்னிடத்தில் போற்றுகின்ற நல்லோர்கள் தொய்வில்லா உன்செயல்கள் தோல்வியினைக் காணவேண்டாம் பெய்கின்ற நல்மழைபோல் Read more

தம்பி… 6

தொடர் எண் 6. தலைப்பு : வீரம் வாழ்த்திடவே சாதனைகள் வாழ்நாளில் சாதிப்பாய் ஏழ்மையினை வெற்றிகொள் ஏறுபோல்நீ வீரம்கொள் ஆழ்கடலில் விட்டாலும் அஞ்சாமல் வந்துவிடு வீழ்த்துகின்ற எண்ணத்தை வீறுகொண்டு மாற்றிவிடு. மாற்றிக்கொள் காலத்தின் மாற்றங்கள் நோக்கிடுவாய் ஏற்றுக்கொள் வீரத்தை ஏணியாக்கி வாழ்க்கையினில் வேற்றுமைகள் நீக்கிடவும் வெற்றிகளைப் பற்றிடவும் போற்றிடவும் உற்றாரும் பொங்கிநீயும் நிற்பாயே. நிற்பாயே குன்றாக நேர்மையாக வாழ்ந்திடவே வெற்பாக நீயிருந்தால் வித்தாக மாறிடலாம் கற்றவழி சென்றிடலாம் கண்ணியமும் காத்திடலாம் சுற்றத்தார் மேகமாக சூழ்ந்திடவும் Read more

தம்பி… 5

தொடர் எண் 5. தலைப்பு : நட்பு. கொள்வாயே நண்பர்கள் குன்றாத பண்புடனே உள்ளங்கள் ஒன்றாக ஊர்போற்றும் நட்பினையே பள்ளங்கள் மேட்டினிலும் பற்றுடனே எந்நாளும் தள்ளாத மூப்பினிலும் தாங்குகின்ற ஊன்றுகோலாய். ஊன்றுகோலாய் வாழ்க்கையினில் ஒன்றுபட்டு நிற்பீரே சான்றோராய் நின்றொளிர்க சாதனைகள் செய்திடவே தோன்றுகின்ற துன்பங்கள் தோல்விகளைத் தந்திடினும் தேன்போன்றத் தன்மையுடன் தென்றலாக மென்மைபெற்றே. மென்மையுடன் பேசிட்டால் மேன்மைகளும் பெற்றிடலாம் நன்மைகளும் கிட்டிடவே நட்பினிலே மேம்படுவாய் பொன்னாக எண்ணிடுவாய் போற்றுகின்ற பெரியோர்சொல் ஒன்றுபடு சாதிப்பாய் Read more

தம்பி… 4

தொடர் எண் 4. தலைப்பு : ஏமாறாதே. மாறாத எண்ணத்தில் மாற்றங்கள் வந்தாலும் கூறாதே பொய்களையும் கொள்வாயே வாய்மையினை ஆறாதே சுட்டவடு ஆற்றுவாய் நற்பணிகள் மீறாதே மூத்தோர்சொல் மேன்மையுற ஏற்பாயே. ஏற்பாயே நற்பணிகள் எல்லோரும் ஏற்றமுற ஆற்றுவாயே இன்முகமாய் அல்லல்கள் நீங்கிடவே ஊற்றாக செல்வங்கள் ஊருணியாய் மக்களுக்கு சீற்றமுடன் வாழாமல் சிந்தனைகள் கூடிடுமே. கூடிவாழ நற்பயன்கள் கோடியுண்டு மாற்றமில்லை நாடிவரும் ஏழைகட்கு நல்லுணவைத் தந்துதவு தேடிவரும் திக்கற்றோர் தீர்ப்பாயே துன்பங்கள் ஓடிவரும் ஆறாக ஊராரும் வாழ்த்திடவே Read more

தம்பி… 3

தொடர் எண் 3 தலைப்பு : தம்பி நலமா ? உன்திறனே உன்வாழ்வை உன்னதமாய் சீர்படுத்தும் என்றேதான் நெஞ்சினிலே இன்றேதான் கொள்வாயே நன்றேதான் நம்மனத்தில் நல்லெண்ணம் வேண்டுமப்பா ஒன்றேதான் ஊராக ஓங்கட்டும் நம்வாழ்வே. வாழ்வினிலே ஏற்றமுற வாழ்ந்திடுவாய் அன்பாக ஏழ்மையிலே வாடினாலும் ஏற்றமுற நம்பிக்கை ஆழ்மனத்தில் கொள்வாயே அன்பொன்றே தீர்வாகும் தாழ்மையுடன் சான்றோரின் தக்கவழி ஏற்பாயே. ஏற்பாயே நல்லுரையை எல்லோரும் கேளிரென சொற்படியே செய்திடுவாய் சொல்லாண்டு வென்றிடுவாய் பற்றிடுவாய்ப் பாசத்தில் பண்புகளில் Read more

தம்பி… 2

குன்றாக நின்றிடவே கோலேச்சி வாழ்வாயே
நின்றாடும் சொக்கனவன் நின்வேண்டல் கேட்டருள்வான்
சென்றிடுவாய் திக்கெட்டும் சேர்த்திடுவாய் ஞானத்தை
பொன்பொருளும் சேர்ப்பாயே பூக்கட்டும் உன்திறனே.

தம்பி… 1

திரும்பித்தான் பார்த்திடுவாய் தீர்வுகளைக் கண்டிடுவாய்
இரும்பாக நெஞ்சத்தில் ஏற்றித்தான் வைத்திடுவாய்
கரும்பாகப் பேசிடுவாய் காந்தமாக ஈர்த்திடுவாய்
துரும்பாக எண்ணாமல் தூணாகத் தாங்குவாயே.

தம்பி… அறிமுகம்

பேச்சில் தமிழே உயர்வாக
பிறந்தேன் தஞ்சை மாவட்டம்.
மூச்சில் முழக்கம் தமிழாக.
முயன்றேன் கற்க இலக்கணமே.
வீச்சில் தமிழே உரையாக
வீறு கொள்வேன் கவியரங்கம்.
தீச்சொல் தவிர்த்துத் திறமுடனே
தேன்த மிழையே பரப்பிடுவேன்.

பூஞ்சோலையில் ஒரு பொன்வீணை

பூஞ்சோலை மணக்கிறது. ஒவ்வொரு பூக்களுமே சிரிக்கிறது. பூவாக மொட்டுகள் துடித்திடவே. பொன்னூஞ்சலில் மனம் ஆடிடவே. மாந்தோப்பில் கிளிகள் கொஞ்சிடவே மாம்பழத்தை வண்டுகள் துளைத்திடவே மேகமதைக் குயில்கள் அழைத்திடவே மேனியெல்லாம் குளிர் சிலிர்த்திடவே கார்மேகத்தால் மயில்கள் ஆடிடவே காட்சிகளைக் கண்கள் பதித்திடவே தென்றல் தேகத்தைத் தழுவிடவே தேனிசையை மூங்கில்கள் இசைத்திடவே. மல்லிகைத் தோட்டம் மயக்கிடவே மாமன் மகள் மயங்கிடவே முல்லைப் பூக்கள் சிரித்திடவே. முத்தங்கள் வண்டுகள் தந்திடவே. சலசலக்கும் ஓடை நீரினிலே. Read more

உயர்(ஒளிர்)வாய்

வஞ்சித் தாழிசை தானாய் உழைத்து தேனாய் இனித்து மானாய்த் துள்ளி வானாய் உயர்வாய்.! மண்ணில்  மலர்ந்தாய் கண்ணாய்க் கற்று விண்ணை ஆண்டுப் பண்பில் உயர்வாய்.! துன்பம்  நீக்கி இன்பம்  கண்டு பொன்னாய் மணியாய் அன்பில்  உயர்வாய். — அலைபோல் உழைத்து வலையாய்ப் பின்னிக் கலைகள் கற்று மலையாய் உயர்வாய்.! நதிபோல் ஓடி விதியை விரட்டி மதித்து நடந்து மதியால் உயர்வாய்.! மலராய் மணந்து நிலவாய்க் குளிர்ந்து நலமாய் வாழ்ந்து உலகில் Read more