நான்.

பேச்சில் தமிழே உயர்வாக
பிறந்தேன் தஞ்சை மாவட்டம்.
மூச்சில் முழக்கம் தமிழாக.
முயன்றேன் கற்க இலக்கணமே.
வீச்சில் தமிழே உரையாக
வீறு கொள்வேன் கவியரங்கம்.
தீச்சொல் தவிர்த்துத் திறமுடனே
தேன்த மிழையே பரப்பிடுவேன்.

கற்றேன் தமிழை இனிதாக
கனியின் சுவையை உணர்ந்தேனே.
நற்ற வைச்சொல் வேன்நன்றாய்
நம்த மிழின்வு யர்வினையே.
பற்றெ னப்பற் றினேன்தமிழை.
பாக்கள் வடித்தே மகிழ்ந்தேனே.
உற்ற உறவாய் தமிழர்கள்
உயர்வும் பெறவே உதவிடுவேன்.

கவியாய் மலர்ந்த சிந்தனைகள்
கற்றால் வாழ்வில் உயர்ந்திடவே.
கவிவி தைகவி தைநூலே.
கற்றோர் வாழ்த்த மகிழ்ந்தேனே.
செவியில் தமிழால் இன்புறவே
சேவை என்றும் தமிழுக்கே.
புவியில் இவனும் தமிழுக்காய்
புரிந்தான் தொண்டு வாழ்த்திடவே.

கவிஞர் கோவிந்தராசன் பாலு

தொடரும் 

 

எழுதிய நூல்கள்.

  1. கவி – விதை – கவிதை.
  2. கவித்தேன் .
  3. மரபுத்தேன்.
  4. மகிழ்வின் மந்திரச் சாவி (விரைவில்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

மரபுக் கவிதை

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.

மரபுக் கவிதை

கீதாஞ்சலி

அரண்மனையும் தோரணமும் ஆடும் வாயில் அணியணியாய் மணிவிளக்கம்‌ ஒளிரும் கோவில் நிரல்நிரலாய் உன்னடியார் வந்து செல்லும் நெரிசலிடைப் போற்றிசெயும் ஒலி முழக்கம் கரைகாணாப் புகழ் வெளிச்சம் உனதேயாகக் கனிவுடனே என்முகத்தைக் காண்பா யோநீ தெருவினிலோர் மூலையிலே இசைக்கும் என்றன் சிறுகுரலை என்னரசே கேட்பா யோநீ