பூஞ்சோலை மணக்கிறது.
ஒவ்வொரு பூக்களுமே சிரிக்கிறது.
பூவாக மொட்டுகள் துடித்திடவே.
பொன்னூஞ்சலில் மனம் ஆடிடவே.
மாந்தோப்பில் கிளிகள் கொஞ்சிடவே
மாம்பழத்தை வண்டுகள் துளைத்திடவே
மேகமதைக் குயில்கள் அழைத்திடவே
மேனியெல்லாம் குளிர் சிலிர்த்திடவே
கார்மேகத்தால் மயில்கள் ஆடிடவே
காட்சிகளைக் கண்கள் பதித்திடவே
தென்றல் தேகத்தைத் தழுவிடவே
தேனிசையை மூங்கில்கள் இசைத்திடவே.
மல்லிகைத் தோட்டம் மயக்கிடவே
மாமன் மகள் மயங்கிடவே
முல்லைப் பூக்கள் சிரித்திடவே.
முத்தங்கள் வண்டுகள் தந்திடவே.
சலசலக்கும் ஓடை நீரினிலே.
சிலுசிலுக்கும் மீன்கள் ஓடிடவே.
பூஞ்சோலையில் ஒரு பொன்வீணை
மீட்டுகிறாள் என் இயற்கைக் காதலி.
கவிஞர். கோவிந்தராசன்