தொடர் எண் 3
தலைப்பு : தம்பி நலமா ?
உன்திறனே உன்வாழ்வை உன்னதமாய் சீர்படுத்தும்
என்றேதான் நெஞ்சினிலே இன்றேதான் கொள்வாயே
நன்றேதான் நம்மனத்தில் நல்லெண்ணம் வேண்டுமப்பா
ஒன்றேதான் ஊராக ஓங்கட்டும் நம்வாழ்வே.
வாழ்வினிலே ஏற்றமுற வாழ்ந்திடுவாய் அன்பாக
ஏழ்மையிலே வாடினாலும் ஏற்றமுற நம்பிக்கை
ஆழ்மனத்தில் கொள்வாயே அன்பொன்றே தீர்வாகும்
தாழ்மையுடன் சான்றோரின் தக்கவழி ஏற்பாயே.
ஏற்பாயே நல்லுரையை எல்லோரும் கேளிரென
சொற்படியே செய்திடுவாய் சொல்லாண்டு வென்றிடுவாய்
பற்றிடுவாய்ப் பாசத்தில் பண்புகளில் மேம்பட்டு
வெற்றிகளும் கிட்டிடுமே வென்றிடலாம் அன்பாலே.
அன்பாலே சாதிக்கும் ஆற்றலையும் கொள்வாயே
நன்மைகளும் செய்திடுக நல்லவனாய் நாடுபோற்ற
துன்பங்கள் ஓடிவிடும் தூயவனாய் வாழ்வாயே
இன்பங்கள் தேடிவரும் எல்லோரும் வாழ்த்திடவே.
வாழ்த்திடவே மேன்மைகளும் வற்றாமல் தொற்றிடுமே
தாழ்வென்று எண்ணாமல் தங்கமாகத் தாங்கிடுவாய்
வாழ்த்துகளும் வந்திடுமே வற்றாத ஓடையாக
ஏழ்மையிலும் கொள்கையிலே எள்ளளவும் மாறாதே.
1 Comment
Fiverr Affiliate · ஏப்ரல் 16, 2025 at 16 h 26 min
I am extremely inspired along with your writing abilities as
smartly as with the layout on your weblog. Is this a paid subject matter or did you modify it yourself?
Either way stay up the excellent quality writing, it’s uncommon to peer
a nice weblog like this one these days. Fiverr Affiliate!