வஞ்சித் தாழிசை

20160413_1943தானாய் உழைத்து
தேனாய் இனித்து
மானாய்த் துள்ளி
வானாய் உயர்வாய்.!

மண்ணில்  மலர்ந்தாய்
கண்ணாய்க் கற்று
விண்ணை ஆண்டுப்
பண்பில் உயர்வாய்.!

துன்பம்  நீக்கி
இன்பம்  கண்டு
பொன்னாய் மணியாய்
அன்பில்  உயர்வாய்.

அலைபோல் உழைத்து
வலையாய்ப் பின்னிக்
கலைகள் கற்று
மலையாய் உயர்வாய்.!

நதிபோல் ஓடி
விதியை விரட்டி
மதித்து நடந்து
மதியால் உயர்வாய்.!

மலராய் மணந்து
நிலவாய்க் குளிர்ந்து
நலமாய் வாழ்ந்து
உலகில் உயர்வாய்.!