15

இப்ப, நாம நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. தானே..?’ என்றாள் சக்தி…

‘ஆம்..! இந்த பொதிகை மலையும், மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி.தான்..!’ சக்தி…

‘சரி, நேரம் ஆச்சு..! நாளை வருகிறேன்.’ என்று, சக்தி கிளம்பினாள்.

பொதிகை மலையில் வாழ்ந்து வரும் ஆதிவாசி இனத்தவர்கள், மலையில் சுற்றித்திரியும் மகரயாளி, கஜயாளி இரண்டையும், ஆச்சரியமாகவும், பயத்துடனும் பார்த்தனர். மற்ற விலங்குகளும் பார்த்தவுடனே மரண பயத்துடன் கூச்சலிட்டபடி இருந்தது.

பொதிகை மலையில் ரோந்துப் பணியில் இருந்த வனச்சரகர்களும் இதைக் கவனித்தனர்.

அகத்தியர் கோவிலைச் சுற்றியே, இந்த புதிய விலங்கினங்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதை, காலடி தடத்தை வைத்தே ரேஞ்சர்ஸ் உறுதி செய்தனர்.

இதை உணர்ந்துகொண்ட யாளிகள், தமது உயிருக்கு ஆபத்து வரும் என்றெண்ணி… சதுரகிரி மலைப்பகுதியில் தஞ்சம் புகுந்தது.

சக்தி, தொடர்ந்து இரண்டு, மூன்று வாரங்களாக அகத்தியர் கோயில் அருகே வந்து பார்க்கிறாள். ஆனால்.‌? யாளிகள் இருப்பதில்லை. சக்திக்கு, ஏமாற்றமே மிஞ்சுகிறது.

யாளிகளுக்கு தேவையான மூலிகைகள், சத்து மிகுந்த தாவரங்கள், பாஷாணங்கள் தேவைக்கு ஏற்ப கிடைப்பதாலும், ஆட்கள், விலங்குகள் நடமாட்டம் குறைவாக இருப்பதாலும், பாதுகாப்பு சூழல் நன்றாக இருப்பதாலும், சதுரகிரி மலையிலேயே இரண்டு யாளிகளும் தஞ்சமடைந்தன.

சில மாதங்கள் நகர்ந்தது…

சதுரகிரி மலையில் சித்தர்கள், முனிவர்கள், வைத்தியர்கள் பலர் தியானத்தில் இருந்தனர்.

பல நூறு ஆண்டுகளாக முனிவர்கள் தவமிருந்து கொண்டிருக்கும் குகையின் அருகாமையில் அரணாக இரண்டு யாளிகளும் இருந்தன.

யாளிகளை கண்டதும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே, விநோதமான உணர்வு இருந்தது.

ஆனால்..? சித்தர்கள், முனிவர்கள், வைத்தியர்கள், மாந்திரீகர்கள், பூசாரிகள் இவர்கள் எந்தச் சலனமும் இன்றி, தங்களது அன்றாடப் பணிகளை செய்து கொண்டும், தங்களது தேடலின் மீதான கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தனர்.

சக்தியின் மனதில், யாளிகளோடு இருந்த நாட்களை மறக்க இயலவில்லை. எந்நேரமும், சிந்தனையில் யாளிகள் பற்றிய நினைவுகளே ஆக்கிரமித்தது.

ஒரு கார்காலம் அமாவாசை நாள் இரவு, சக்தி தூக்கம் வராமல் வெளியே, வீட்டிற்கு பின்புறமாக பொதிகை மலையை நோக்கி பார்க்க… அங்கு, அகத்தியர் சிலை அருகே இரண்டு யாளிகளும் தரையோடு தரையாக படுத்து இருந்தது.

சக்தி, உடனடியாக… ஓடோடி, அருகே சென்று பார்க்க… யாளிகளுக்கும் சரி..! சக்திக்கும் சரி..! கண்ணீர், தன்னையறியாமல் வழிந்தது…

மேலும், ‘உங்கள் இருவரையும் பிடித்து, ஆராய்ச்சி செய்வதற்காக தமிழக அரசு முனைப்புடன் இருக்கிறது. அதனால், கவனமாக இருங்கள்.

இனி, இந்தப்பக்கம் வரவே வேண்டாம்..!’ என்று, கண்டிப்புடன் யாளிகளிடம் சக்தி அறிவுரை கூறினாள்.

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..