13

‘இந்த காலகட்டத்தில், எங்களது பணி மகத்தானதாக இருந்தது…’

‘ஆமாம்..? நவபாஷாணம் என்றால் என்ன..? விளங்கவில்லை..!’ என்றாள் சக்தி.

‘நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விடம்( விஷம்) என்று பொருள்.

நவ பாஷாணம் என்பது, ஒன்பது வகையான விடங்களை சித்தர்கள் முறைப்படி சேர்த்துக் கட்டுவது ஆகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளது. ஒவ்வொரு பாஷாணத்திற்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருந்தது.

நவ பாஷாணம் சித்தர்களின் மரபு அறிவியலாகும். நவபாஷாணம் கட்டுவது என்பது, சித்தர்கள் வெவ்வேறு இயற்பியல், மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட பாஷாணத்தின் அணுக்களை சேர்ப்பது, மற்றும் பிரிப்பதன் மூலம்…

புதிய மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்கட்டமைப்பு உருவாகும். இதுவே, சித்தர்களின் வேதியியல் அறிவு ஆகும்.

நவ பாஷாணங்களின் பெயர்கள்

  1. சாதிலிங்கம்(ரசம்)
  2. மனோசிலை
  3. தாரம் ( அரிதாரம், மால்தேவி )
  4. வீரம்
  5. கந்தகம்
  6. பூரம்
  7. வெள்ளை பாஷாணம்
  8. கௌரி பாஷாணம்
  9. தொட்டி பாஷாணம்

நீலி எனும், ஓரு பாஷாணமும் உண்டு. இதன் சிறப்பு என்னவென்றால், மற்ற 63 பாஷாணங்களையும் செயல் இழக்க வைக்கக் கூடிய, சிறப்புத் தன்மை கொண்டது. இதுவே…

சில பாஷணங்களுக்கான நவீன வேதியல் விளக்கம்…

  1. கௌரிப் பாஷாணம் (Arsenic Penta sulphite)
  2. கந்தகப் பாஷாணம் (Sulfur)
  3. சீலைப் பாஷாணம் (Arsenic Di sulphite)
  4. வீரப் பாஷாணம் (Mercuric Chloride)
  5. வெள்ளைப் பாஷணம் (Arcenic Tri Oxide)
  6. சூதப் பாஷணம் (Mercury)
  7. கச்சாலப் பாஷணம் (கண்டுபிடிக்கப்படவில்லை)
  8. தொட்டிப் பாஷாணம் (கண்டுபிடிக்கப்படவில்லை)
  9. சங்குப் பாஷாணம் (கண்டுபிடிக்கப்படவில்லை)

மேற்கண்ட ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதமான தனி வேதியல் இயல்புகளைக் கொண்டதாகும்.’

‘ம்ம்… சரி..!

சித்தர்கள் எப்படி..? பாஷாணங்களை ஒன்று சேர்த்தார்கள்…’

‘இந்த ஒன்பது பாஷாணங்களை திரவமாக்கி, மீண்டும் திடமாக்கி, ஒன்பது வகை (எரிபொருட்கள்) விறகுகள், ஒன்பது தடவை வடிகட்டியும், வடிகட்ட தனித்தனியாக ஒன்பது வடிகட்டிகளையும் கையாண்டனர்.

சித்தர்கள் பாஷாணங்களைக் கட்டும்பொழுது அரைத்து, வேகவைத்து, எரித்து, நுண்ணிய அணுக்களாகப் பிரிக்க… புடம்(தீ) இட்டனர்.

எரு, வறட்டி இவற்றைக் கொண்டு எரிக்கப்படும் நெருப்பின் அளவைக் குறிப்பிடுவதே, புடம் என்றனர்.

  • 1 முதல் 3 வறட்டிகள் வரை எரிப்பது காடைப்புடம்
  • 3 வறட்டிகளுக்கு மேல் எரிப்பது கவுதாரிப்புடம்
  • 10 வறட்டிகளுக்கு மேல் எரிப்பது சேவற்புடம்.
  • 50 வறட்டிகளுக்கு மேல் எரிப்பது பன்றிப்புடம்
  • 700 வறட்டிகளுக்கு அதிகமாக எரிப்பது கஜம்
  • 1000 வறட்டிகளுக்கும் அதிகமாக எரிப்பது கனம்
  • 8000 வறட்டிகளுக்கும் அதிகமாக எரிப்பது மனல்மறைவுப் புடம்.
  • 10000 வறட்டிகளுக்கும் அதிகமாக எரிப்பது கோபுடம்

இப்படி, புடத்தினை சித்தர்கள் வகைப்படுத்தியதும், மற்றுமொரு வேதியியல் அறிவிற்கு சான்று.’

‘அப்ப, பாஷாணங்களை வெயிலில் காயவைக்க மாட்டார்களா..?’


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..