8

விண்ணில் மிதப்பது போன்ற ஓர் உணர்வு, மனதில் ஊற்றெடுத்தது சக்திக்கு.

சக்தி, சமையலறையில் இருந்து பால் எடுத்து வந்து, சங்கில் ஊற்றி வாயில் புகட்டினாள்.

பள்ளிக்கு சென்று வந்ததும், முதலில் அந்த உயிரை பார்த்துவிட்டுத்தான், மறுவேலையே.

இப்படியே… சில வாரங்களில், தலையின் வடிவமைப்பு ஆடு மாதிரி இருந்தது. உருவமும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து, பெரிதானது.

வீட்டில், அம்மா அப்பா திட்டுவார்கள் என்று நினைத்து… ஒரு துணிக்கடையிலிருந்து கிடைத்த கட்டை பையினுள், அந்தக் குட்டியை வைத்துக்கொண்டு, மாலை நேரம் யாருக்கும் தெரியாமல்… வீட்டின் பின்புறமாக, நூறு மீட்டர் தொலைவில் இருக்கும் அகத்தியர் மலைக்கு சென்று, அந்தக் குட்டியை வெளியில் எடுத்து விட்டாள் சக்தி.

‘கோவுச்சுக்காத… தெனமும், சாயந்தரமா வந்து, உன்னை இங்கேயே பார்த்துக்கிறேன்.’ என்று, மழலை குரலில் சொல்ல… அருகில் இருந்த அகத்தியர் சிலையை, ஒருமுறை உற்று நோக்கி, தலையை ஆட்டியபடி, கண்ணீர் விட்டது. அந்த உயிர்…

தினமும்… ஓடியோடி வந்து, அகத்தியர் சிலை அருகே வந்து பார்த்தால்..? சக்திக்கு, பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது…

ஓரிரு மாதங்கள் இப்படியே கடந்து சென்றது.

ஓர் நாள்… உருவத்தில் மாடு போலவும், சராசரி ஆடுகள் போல முக அமைப்பும் பெற்று, ரத்தக் காயங்களுடனும், அவ்வுயிர் படுத்திருக்க… ஏதோ..? காலடிச் சத்தம் வருவதைக் கேட்டு, சுதாரித்துக் கொண்டு, எழுந்து நின்றதும்…

சக்தி, பார்த்தவுடனே… பயம் தொற்றிக்கொள்ள வந்த பாதையை நோக்கி, திரும்பி ஓட்டம் பிடித்தாள்.

சக்தியின் தலைக்கு மேலாக தாவி வந்து, மண்டியிட்டுக் கொண்டது. அந்த விலங்கு…

சக்தி..! சக்தி..!! பயப்படாதே..!

நான்.தான்..! உன் குழந்தை “மகரயாளி” என்றது.

‘மகர யாளியா..? அது, யாரு..?’ – என்று, சக்தி தன் புருவங்களை உயர்த்தியபடியே…

‘உனக்கு, எப்படி..? என்னை மாதிரியே பேசத் தெரிகிறது..?

ஏன்..? உடம்பு முழுக்க ரத்தமாக இருக்கிறது…

எப்படி..? இவ்வளவு பெரிதாக வளர்ந்தாய்…’

என்று, கேள்வி மேல், கேள்விகள் கேட்டாள் சக்தி.

எல்லாம் தெளிவாகச் சொல்லுகின்றேன்… கேள்..!

சுமார் கி.மு. 20000 ஆண்டில் முதன்முதலாக எங்களது யாளிகள் தலைமுறை சாதாரண முதுகெலும்பு விலங்குகளில் இருந்து, பல நூற்றாண்டுகளாக படிப்படியாக பரிணாமம் பெற்று, அடர்த்தி நிறைந்த முடிகள், நீண்ட கொம்புகள், கூரிய நகங்கள், என்று மாற்றம் உருவாகத் துவங்கியது. உலகம் முழுவதும் கடுங்குளிர் மட்டுமே பல நூற்றாண்டுகளாக நிலவியது. அதை தாங்கிக்கொள்ளும் வகையில் இயற்கையாகவே எங்களின் உடல் அமைப்பு இப்படி மாற்றம் அடைந்தது.

குரங்கு இனத்திலும் மரபணு மாற்றங்கள் நாளுக்கு நாள் நடந்தேறியது.

உயிர் வாழ்ந்திடவும், இனவிருத்தி செய்துகொள்ளவும், தகுந்த சூழல் நிலவிய பரந்து, விரிந்த சுமார் நான்கு ஆயிரம் (4000) மைல் பரப்பளவு கொண்டு பசுமை போர்த்திய மாபெரும் பிரதேசமாக எங்களது மேருமலைத்தொடர் இருந்தது. பிற்காலத்தில் இதுவே, ‘குமரி நாடு’ என்றும் ‘குமரிக்கண்டம்’ என்றும் ‘லெமூரியா’ கண்டம் என்றும் அழைத்தனர்.

எங்களது யாளிகள் இனத்தில் ஐந்து வகைமைகள் இருந்தது. எங்களது இனத்தில், மிகவும் அதிக வலிமை மிகுந்த யாளி… நீண்ட துதிக்கையும், பெரிய தந்தமும், கூரிய நகங்களையும் கொண்ட ‘கஜயாளி’. இதுதான்..! அன்றைய காலகட்டத்தில் எங்கள் காட்டிற்கு ராஜா.

அதன் பின்… சிங்கத்தின் முகமும், கூரிய பற்களும், அடர்த்தியான பிடரியும், நீண்ட நாக்கும், நகங்களும் கொண்டது ‘சிம்மயாளி’.

இந்த இரண்டு இனமும், மிகவும் மூர்க்கத்தனமானவை. இந்த இரண்டு யாளி இனத்திற்கும் போட்டியாக, குமரி நாட்டு வனாந்திரத்தில் எந்த விலங்குகளுமே கிடையாது..!

ஆட்டின் தலை அமைப்புடன், நீண்ட நாக்கும், கூரிய நகமும், குட்டை வால் இருக்கும் நான் தான்..! ‘மகரயாளி’.

நாயைப் போல முகமும், நீளமான நாக்கும், மெல்லிய உடலுடையது ‘ஞமலியாளி’ என்போம்.

பெருச்சாளியை போல் முகமும், சிங்கமுக யாளியை விட, உயரம் குறைவாக உள்ளதை பெருயாளி என்போம்…

எங்களுக்குள் என்றுமே, எப்பொழுதும், போட்டியே வந்தது கிடையாது.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..