9

எங்களுக்குள் என்றுமே… எப்பொழுதும், போட்டியே வந்தது கிடையாது.

மேலும்,

எங்களது குமரி நாட்டில், இயற்கை வளம் குறைவின்றி, பூக்கள், பழங்கள், மூலிகை வாசம் நிறைந்த சொர்க்க பூமியாக திகழ்ந்தது.

மேருமலையின் மேற்கே எங்களது பகுதிகளில்… குடிலை ஆறு, சிவை ஆறு, உமை ஆறு, சுமனை ஆறு, சிங்கை ஆறு என்ற ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன.

குமரியாறு, பெருயாறு, பஃறுளியாறு, கன்னியாறு இந்த நான்கு ஆறுகளும், மேருமலையில் இருந்து கிழக்கு நோக்கி பாய்ந்த, வற்றாத ஆறுகளாக இருந்தன. இதனை ஒட்டியே… மனித நாகரிகம் மெல்ல, மெல்ல… வளர்ந்திடத் துவங்கியது.

அருவி நீரில்…

பல விதமான பறவைகளும், விலங்குகளும், காலங்காலமாக மூலிகை நீரை பருகியும், குளித்தும், பல நூற்றாண்டுகளாக தங்களை தாங்களே இயற்கை உருமாற்றம் செய்து கொண்டிருந்த காலம். இது…

எங்களது மத்திய காலக்கட்டங்களில், எங்களது முக அமைப்பும், விகாரம் குறைவான சிங்கம், யானை, புலி, மான், குதிரை, ஆடு, மாடு… போன்ற, விலங்கினங்களும், குருவி, குயில், மயில், காகம், குருகு… போன்ற பறவைகளும், சிறிது…சிறிதாக… அதிகரிக்கத் துவங்கின.

எங்கள் குமரி நாட்டில், மனிதர்கள் இருதரப்பினர் இருந்தனர்.

நன்கு உயர்ந்து, பத்து அடிக்கும் அதிகமாக உயரமுள்ளவர்கள் ஒரு பிரிவாகவும்… ஐந்து அடிக்கும் குறைவான உயரத்தில், சித்திரக்குள்ளர்கள் ஒரு பிரிவாகவும் வாழ்ந்தனர்.

பத்து அடிக்கு மேல் உள்ள இனத்தவர்களுக்கு, தந்திரம், அறிவு குறைவு. வேட்டையாடுதல் ஒன்றே அவர்களது பிரதானமான நோக்கமாக இருந்தது.

பசியை போக்குவதற்காக, மரம் விட்டு, மரம் தாவுவது, மலைகளில் மூர்க்கத்தனமாக, மனம் தளராது ஏறும் வழக்கம் கொண்டவர்கள்.

இவர்கள், அ… ஆ… இ… ஈ… உ… ஊ… என்ற, வாய்மொழி சைகை செய்து வாழ்ந்து வந்தனர்.

சித்திரக்குள்ளர்கள் அறிவு பெற்றவர்களாகவும், சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும், பசிக்காக தேன் எடுத்தல், கிழங்கு தோண்டுதல், வேட்டையாடுதல், போன்றவை முதன்மைத் தொழிலாக இருந்த போதிலும்…

சில விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும் பழக்கினர், சில விலங்குகளை, கடும் குளிர் மற்றும் மழைக்காலங்களில் உணவுத் தேவைக்காகவும், உரோமங்கள், மற்றும். தோல்களுக்காகவும் வளர்த்தனர்.

சூரியன், நிலவு, இடி, மின்னல், மழை, காற்று, நெருப்பு, மற்றும் கொடிய விடமுள்ள பாம்புகளை தெய்வமாக வணங்கினர்.

இறந்தவர்களை மூலிகை இலைகள், பூக்கள், வாசனை மிகுந்த பட்டைகள் மீது கிடத்தி, மூலிகைச் சாறுகளை பிழிந்து விட்டு, குழியில் அடக்கம் செய்வதை வழமையாக கொண்டனர்.

எளிதில் உடையாத வலிமை மிகுந்த, தரமான கற்களை, மூதாதையர்களை புதைத்த இடங்களில்,, அடையாளமாக வைத்து, கடவுளாக வழிபட்டனர்.

அந்தக் கற்களை தொட்டு வணங்கிவிட்டு சென்றால், வேட்டையாடச் சென்றவர்கள் வெறும் கையோடு வரமாட்டார்கள். என்பது, ஐதீகமாக இருந்தது…

பெரிய, பெரிய மரப்பொந்துகளிலும், குகைகளிலும் வாழ்ந்து வரும் பொழுது, ஒவ்வொரு இனத்தினரும், ஒவ்வொரு அடையாளக் குறியீடுகளை

மரப்பட்டைகளிலும், குகைகளில் கற்களால் செதுக்கியும், மூலிகைகளை கொண்டும் அடையாளக் குறியீடுகள் இட்டும் வாழ்ந்தனர்…

சில நூற்றாண்டுகள் இப்படியே நகர…

சித்திரக்குள்ளர்கள் வளர ஆரம்பித்தனர். இப்பொழுது, அவர்களின் உருவம் குறைந்தபட்சம் ஐந்து அடி முதல் அதிகபட்சம் எட்டு அடியாக இருந்தது.

இவர்கள், பேசவும், சிறு சிறு குறியீடுகள் வரைவதில் இருந்து, எழுத்துக்கள் எழுதவும், தோல்களில் ஆடைகள் செய்துகொள்ளவும் பழகினர். மேலும், இவர்கள் சிறு, சிறு குழுக்களாக பிரிந்து, இடம்பெயர்ந்து வாழ்ந்தனர்.

இதே காலகட்டத்தில்…

வேட்டை விலங்குகள் படிப்படியாக குறைந்தன… பத்து அடி உயர மனிதர்கள் மேலும், நான்கு, ஐந்து அடிகள் வளர்ந்து இருந்தனர்.

பசியை போக்கும் அளவு உணவு, மற்றும் வேட்டையாடும் விலங்குகள் கிடைக்காததால், இவர்கள், உணவுக்காக வடக்கு நோக்கி நகர ஆரம்பித்தனர்…

தன் சிந்திக்கும் அறிவு ஆற்றல் கொண்டவர்கள் (சித்திரர்கள்) குழுக்கள், குழுக்களாக அங்கேயே ஆடு, மாடு, குதிரை கால்நடை வளர்ப்பதற்காக ஆற்றுப்படுகையில் குச்சிகளை நட்டு வைத்து, நிரந்தர மந்தைகளும், மண்சுவர் எழுப்பி… வீடுகள் கட்டி, இலைகள், புற்களால் கூரை அமைத்து, வாழ்ந்தனர்.

வேறு ஆற்றப்படுகைக்கு சென்ற குழுவினர்கள் தீயின் பயன்பாட்டினை நன்கு அறிந்து வைத்திருக்க… மண்ணை குழைத்து, தீயினால் சுட்டு, செங்கல்கள் செய்து, தங்களது இருப்பிடங்களை அமைத்தனர்.

சற்று தூரமாக வடகிழக்கு திசைக்கு சென்றவர்கள் கற்களை உடைத்து, நேர்த்தியாக்கி இருப்பிடங்களை அமைத்தனர்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..