10

சற்று தூரமாக வடகிழக்கு திசைக்கு சென்றவர்கள் கற்களை உடைத்து, நேர்த்தியாக்கி இருப்பிடங்களை அமைத்தனர்…

பிரிந்த குழுவினர் ஒருவரை ஒருவர் தேடும் முயற்சியில் இறங்க…

ஒவ்வொரு பகுதியிலும், நிலத்தை சீராக்கி விவசாயம் செய்து, எல்லோரும் செழிப்பாக வாழ்ந்தனர்.

தங்களிடம் இருக்கும் விவசாய பொருட்களை ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரோடு பகிர்ந்து, பண்டமாற்று முறையை கையாண்டனர்.

பிரிந்து சென்ற குழுக்கள் தங்களுக்கென்று சட்ட, திட்டங்களும், கட்டுப்பாடும், யாகசாலை, பாடசாலைகள், மூதாதயைர்களுக்கு கோவில்கள் எழுப்பி, வாழ்ந்து வந்தனர்…

மக்கள் அதிகமாகவும், செழிப்பாகவும், கேள்வி ஞானம், கற்றல் அறிவு, மருத்துவ அறிவு, வானவியல் அறிவு, சமய நெறிகள் போதிப்பது, சுட்ட கற்களின் பயன்பாடுகளை அதிகம் கையாளும் உத்தி, பனை ஓலைகளில் முக்கிய குறிப்புகள் மற்றும், வைத்திய முறைகளை எழுதி, பாதுகாத்து வைத்துக்கொண்டு, தலைமுறை தலைமுறையாக வைத்தியம் செய்தும் வந்தனர்.

அளவற்ற அறிவும், ஆன்மீக ஞானமும் பெற்று, மக்களிடையே ஒற்றுமை நிலவச்செய்தும், அறம் செய்தும், மக்களை நல்வழிப்படுத்தியும், கட்டுக்கோப்புடன், அழகுற… குமரி நாட்டின் அதிபதியாக தென்மதுரை நகரை வற்றாத ஜீவநதியான பஃறுனி ஆற்றின் கழிமுகத்தில் ஆதிசிவன் நிறுவினார்.

தன் நாட்டு மக்களின் மொழிப்புலமையை அறியும் ஆவலில், மாபெரும் சபை ஒன்றை சுட்ட செங்கற்கள் கொண்டு நிறுவினார். அதில் அழகு சேர்க்கும் விதமாக…

அடிக்கடி… ஆதிசிவன் கனவில், வடக்கு எல்லையில் உள்ள கைலாய மலையில் இருந்து, கல் எடுத்து வந்து கோவில் எழுப்ப, சமிக்ஞைகள் உந்த…

ஆதிசிவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்கும், எங்களது யாளிகள் படையோடு, சிறந்த வீரம் பொருந்திய வீரர்களை, தன்னுடன் அழைத்துக்கொண்டு, ஈட்டி, மற்றும். வில், அம்புகளோடு கைலாய மலையை அடைந்தோம்..!

ஆதிசிவன் எங்களது யாளிகள் படை, மற்றும் வீரர்களை மலை அடிவாரத்திலே நிறுத்தி விட்டுச் சென்றார்.

நாட்கள், மாதங்கள் கடந்தன…

கடும் குளிரால் சிலர் மடிந்தனர், சிலர் உணவுக்காக, அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்… சிலர் அபரிமிதமான மூப்பும் அடைந்தனர்.

சில மாதங்கள் கழித்து…

ஆதிசிவன் சடை முடியுடன், திருநீறு பூசிய மேனியோடு, பிரமாண்டமான கருநீல நிறத்தில் வழவழப்பான படிகக்கல் ஒன்றை அகன்ற தோள்களில் சுமந்த படி, வந்தார்.

எங்களது யாளிகள் படைகளின் உதவியோடு, தமது குமரி நாட்டின் தலைநகரான தென்மதுரைக்கு கொண்டுவந்து சேர்த்தார்.

திருச்சபையின் கருவறையில், வானசாஸ்த்திர வல்லுநர்கள் துணையோடும், புலவர்கள், முனிவர்கள், சித்தர்கள் அருளோடும் ஆசியோடும்… நிறுவினார்.

ஆதிசிவன் தன் முழு ஆன்மீகத்தேடலின் இறுதி வடிவாக, கொண்டு வந்த காரணத்தினால்

தென்மதுரை மக்களால் ‘லிங்கம்’ எனும் சொல் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும். ‘லிம்’ என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.

‘கம்’ என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதனால்…

இப்பெயரே…

பிற்காலங்களில் ‘சிவலிங்கம்’ என்று அழைக்கப்பட்டது.’

‘ம்…

நேரம் ஆச்சு..! மீதியை நாளை வந்து கேட்கிறேன்…’ என்று சொல்லி, சக்தி தனது வீட்டிற்கு சென்றாள்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 15

15

இப்ப, நாம நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. தானே..?’ என்றாள் சக்தி…

‘ஆம்..! இந்த பொதிகை மலையும், மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி.தான்..!’ சக்தி…

‘சரி, நேரம் ஆச்சு..! 

 » Read more about: யாளியும்… சக்தியும்… 15  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 14

14

‘அப்ப, பாஷாணங்களை வெயிலில் காயவைக்க மாட்டார்களா..?’

நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது, இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம், வெளிச்சம், இருள், காலநிலை இவற்றின் மூலமாகவும் மூலிகைகளை உலர்த்தி, சித்தர்கள் பாஷாணமாக்கினர்.

 » Read more about: யாளியும்… சக்தியும்… 14  »

தொடர் கதை

யாளியும்… சக்தியும்… 13

13

‘இந்த காலகட்டத்தில், எங்களது பணி மகத்தானதாக இருந்தது…’

‘ஆமாம்..? நவபாஷாணம் என்றால் என்ன..? விளங்கவில்லை..!’ என்றாள் சக்தி.

‘நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விடம்( விஷம்) என்று பொருள்.

 » Read more about: யாளியும்… சக்தியும்… 13  »