ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

கவிதை

சிறுவர் நலன் காப்போம்!

சிறுவர் நலன்கள் காத்திடுவோம்
சிறந்து விளங்கச் செய்திடுவோம்
மலரும் அந்த மொட்டுகளின்
மகிமை அறிந்து  வாழ்த்திடுவோம்!
சிறகை விரித்துப் பறக்கட்டும்
சின்னஞ் சிறிய சிட்டுக்கள்
இடையில் சிறகைச் சிதைக்காமல்
இருந்து காப்போம் நாம்அவரை!

 » Read more about: சிறுவர் நலன் காப்போம்!  »

கவிதை

நாளை நமக்கும் மூப்பு வரும்!

நாளை நமக்கும் மூப்புவரும்
நரைக்கும் இளைக்கும் அசதிவரும்
இளமைத் தோற்றம் மறைந்துவிட
எவர்க்கும் முதுமை வந்துவிடும்

முதுமை யாளர் – மூத்தவர்கள்
முழுதாய் நமக்காய் உழைத்தவர்கள்
இளமை வாழ்வை நமக்கென்றே
அன்று தொலைத்த பெரியவர்கள்

“பழசு”

 » Read more about: நாளை நமக்கும் மூப்பு வரும்!  »

புதுக் கவிதை

பேரொளி பிறந்தது!

பேரொளி பிறந்தது
காரிருள் மறைந்தது!

பாரெலாம் தீன் ஒளி
பரவிப் பளிச்சிடப்
பூரணமாகி யோர்
புத்தொளி பிறந்தது!
காரணர் முஹம்மத்
எனுமொரு குழந்தை
ஆமினா வயிற்றில்
அழகாய்ப் பிறந்தது!

 » Read more about: பேரொளி பிறந்தது!  »

புதுக் கவிதை

நான்

மாடிமனை கட்டி யதில்
வாழ்ந்தவனும் ”நானே”
கோடிபணம் சேர்த் தங்கே
குவித்தவனும் ”நானே”
நாத்திகனாய்க் கதை பேசி
வென்றவனும் ”நானே”
கூத்திகளோ டிரவு பகல்
கொஞ்சியவன் ”நானே”

 » Read more about: நான்  »