நாளை நமக்கும் மூப்புவரும்
நரைக்கும் இளைக்கும் அசதிவரும்
இளமைத் தோற்றம் மறைந்துவிட
எவர்க்கும் முதுமை வந்துவிடும்
முதுமை யாளர் – மூத்தவர்கள்
முழுதாய் நமக்காய் உழைத்தவர்கள்
இளமை வாழ்வை நமக்கென்றே
அன்று தொலைத்த பெரியவர்கள்
“பழசு” என்றே அவர்களினைப்
பழித்தால் மனசு நோகாதோ?
அனுப வத்தால் உயர்ந்திட்ட
அறிஞர் தம்மை விலக்குவதோ?
தள்ளி வைத்து முதியவரைத்
தவிக்க விடுதல் முறைதானோ?
அள்ளி அணைத்து வளர்த்தவரை
அலைந்து திரிய விடலாமோ?
தொல்லை யென்று அவர்களினைத்
தூரவிட்டு விலகு வதோ?்
பிள்ளை உள்ள போதினிலும்
பெற்றோர்- மூத்தோர் வருந்துவதோ?